Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
தினமும் நைட் 1 கப் தக்காளி சூப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Tomato Soup Benefits In Tamil: குளிர்காலத்தில் அடிக்கடி நன்கு சூடாக ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்போது பெரும்பாலானோர் காபி, டீ என்று தான் குடிப்பார்கள். ஆனால் அதற்கு பதிலாக சூடான சூப்புகளை குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாக இருக்கும். சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தக்காளி சூப்.
இந்த தக்காளி சூப்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடட்டுகளும், வைட்டமின்களும் உள்ளன. இந்த வைட்டமின்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. இப்படிப்பட்ட தக்காளி சூப்பை குளிர்காலத்தில் தினமும் இரவு 1 கப் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.

1. உடலை இதமாக வைத்துக் கொள்ளும்
குளிர்காலம் உடலை சோர்வாக மாற்றும். இந்நிலையில் நல்ல சூடான தக்காளி சூப்பை குடிக்கும் போது, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். மேலும் இந்த வெப்பம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது. எனவே இந்த தக்காளி சூப்பை குளிர்காலத்தில் இரவு வேளைக்கு குடித்து வந்தால், உடல் நன்கு இதமாக இருக்கும்.
2. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
குளிர்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இந்நிலையில் தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். எனவே இந்த தக்காளியைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பை குளிர்காலத்தில் தொடர்ந்து குடித்து வரும் போது, உடலுக்கு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் அதிகரித்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கலாம்.
3. இதயத்திற்கு நல்லது
தக்காளியில் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன் உள்ளன. இது இதயத்தை வலுவாக வைத்துக் கொள்ள உதவி புரியும். முக்கியமாக லைகோபைன் கெட்ட கொழுப்பை குறைத்து, இரத்த நாளங்களின் செயல்திறனை அதிகரிக்கும். மேலும் குளிர்காலத்தில் தான் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன. எனவே இந்த குளிர்காலத்தில் தக்காளி சூப்பை குடிக்கும் போது இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்களும் குறையும்.
4. சருமத்திற்கு நல்லது
குளிர்காலத்தில் காற்றானது மிகவும் வறண்டு போய் இருக்கும். இதனால் தான் அதிக சரும வறட்சியை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் தக்காளி சூப்பை குடிக்கும் போது அது உடலுக்கு நீரேற்றத்தை அளித்து, சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. அதுவும் தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, சி போன்றவை சரும செல்கள் சரிசெய்து, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் அழகாகவும், நீரேற்றத்துடனும் இருக்க விரும்பினால், தக்காளி சூப்பை குடியுங்கள்.
5. செரிமானத்திற்கு நல்லது
குளிர்காலத்தில் எண்ணெய் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிட ஆசை எழும். இப்படியான எண்ணெய் பசை நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், செரிமான பிரச்சனைகளை நிறைய பேர் சந்திக்கின்றனர். ஆனால் இந்த குளிர்காலத்தில் தக்காளி சூப்பை குடிக்கும் போது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்.
முக்கியமாக இந்த தக்காளி சூப் மிகச்சிறந்த ஒரு இரவு உணவாகவும் இருக்கும். ஏனெனில் தக்காளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே தக்காளி சூப்பை குடிக்கும் போது குளிர்காலத்தில் சந்திக்கும் செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, மலச்சிக்கலும் தடுக்கப்படும். முக்கியமாக தக்காளி சூப்பை தினமும் குடித்து வந்தால், உடல் எடையையும் கட்டுப்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications