For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனையா?

|

ஹேண்ட் சானிடைசர்- இந்த வார்த்தையை நம்மில் பலர் சில மாதங்களுக்கு முன்பு வரை கேட்டிருக்க கூட மாட்டோம். ஆனால் கொரோனா நோய் பரவலுக்கு பின்பு, இன்று ஹேண்ட் சானிடைசர் மற்றும் முகக்கவசம் என்ற இரு பொருட்களும் நம் அன்றாட வாழ்வின் இரு முக்கிய பொருட்களாக மாறி விட்டது. என்னதான் மருத்துவர்கள் நம்மை சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ சொன்னாலும், எல்லா நேரங்களிலும் நமக்கு சோப்பு மற்றும் தண்ணீர் கிடைப்பதில்லை. அந்த நேரத்தில் இந்த ஹேண்ட் சானிடைசர் மட்டுமே நமக்கு உதவிகரமாக இருக்கிறது.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஹேண்ட் சானிடைசர் விற்பனை பல மடங்காக அதிகரித்திருப்பதே இதற்கு சான்று. பெரும்பாலும் ஹேண்ட் சானிடைசர்கள் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டாலும், அதை உபயோகிக்கும் போது சற்று கவனமாக எச்சரிக்கையாக கையாள வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் தொடர்ச்சியான ஹேண்ட் சானிடைசர் பயன்பாடு நமக்கு பல தொந்தரவுகளை தரலாம். அவை என்னென்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம் வாருங்கள்.

MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரைக்ளோசான் வேதிப்பொருளால் வரும் ஆபத்து

ட்ரைக்ளோசான் வேதிப்பொருளால் வரும் ஆபத்து

ஒரு சிறந்த ஹேண்ட் சானிடைசர் என்பது அதில் 60% அளவுக்கு ஆல்கஹாலை கொண்டிருக்கும். ஏனென்றால், இந்த அளவில் இருந்தால் மட்டுமே திறம்பட கிருமிகளை கொல்லும். ஆனால், சில கம்பெனிகள் ஆல்கஹாலை சேர்க்காமல் ட்ரைக்ளோசான் என்ற வேதிப்பொருளை மட்டும் சேர்த்து தயாரிக்கப்படும் ஹேண்ட் சானிடைசரை சந்தையில் விற்கிறார்கள்.

இந்த ட்ரைக்ளோசான் வேதிப்பொருள் என்பது பூச்சி கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு வீரியமிக்க பாக்டீரிய எதிர்ப்பு கொல்லி. இந்த வேதிப்பொருளை நமது உடல் தோலின் மூலம் உறிஞ்சுகிறது. இதனால், தைராய்டு சுரப்பி பாதிப்படைந்து ஒருவரின் ஈரல் மற்றும் தசைகள் வெகுவாக பாதிப்படையும். இதை தவிர, ஹேண்ட் சானிடைசரை உபயோகிக்கும் மற்ற மூன்று முக்கிய தவறான முறைகளை பற்றி கீழ்வரும் பத்திகளில் காணலாம்.

சாப்பிடுவதற்கு முன்பு ஹேண்ட் சானிடைசர் உபயோகிக்காதீர்

சாப்பிடுவதற்கு முன்பு ஹேண்ட் சானிடைசர் உபயோகிக்காதீர்

நம்மில் சிலர் சாப்பிடும் முன்பு எப்பொழுதும் ஹேண்ட் சானிடைசரை உபயோகிக்கும் பழக்கம் கொண்டவராக இருப்போம். இதனால் நாம் சுத்தமாக இருப்பதாக நினைத்து கொண்டு நம் உடலுக்கு மேலும் பிரச்சனைகளை நம்மை அறியாமலேயே சேர்த்து கொண்டிருக்கிறோம். ஹேண்ட் சானிடைசர் உபயோகித்தவுடனே சாப்பிடுவதால், அதிலுள்ள வேதிப்பொருட்கள் நம் உடலுக்குள் சென்று, நமது செரிமான மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது. மிக முக்கியமாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் இது வெகுவாக பாதிக்கிறது.

குழந்தைகள் தவறுதலாக சில சமயங்களில் ஹேண்ட் சானிடைசரை விழுங்கி விடலாம். அவ்வாறு ஏற்படும் பொழுது ஆல்கஹால் விஷத்தன்மை உடலில் முற்றி, நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்படைகிறது. அதிகபட்சமாக, நோய் எதிர்ப்பு மண்டலம் வாழ்நாள் முழுவதும் கூட செயலாற்ற முடியமால் போகலாம். இவ்வாறு ஏற்படுவதால், ஏனைய பிற நோய்கள் எளிதாக குழந்தைகளின் உள்ளே நுழைந்து விடுகின்றன.

சானிடைசர் வாசனைக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்

சானிடைசர் வாசனைக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்

நாம் எல்லோரும் ஹேண்ட் சானிடைசரில் வரும் மனம் பிடித்து விட்டால், அதே பிராண்டையே மறுபடியும் வாங்குவோம். மற்ற பிற வேதிப்பொருட்களுடன், வாசனைக்காக இன்னும் சில வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் மேலே சொன்ன ஆபத்து இருமடங்காகின்றது. செயற்கை மணமூட்டிகளால் நாளமில்லா சுரப்பிகள் பாதிப்படைந்து சில மாறுபட்ட ஹார்மோன்களை நமது உடல் சுரக்க வைக்கின்றது. இதன் மூலம் ஒருவரின் மரபணு கட்டமைப்பு முதற்கொண்டு பாதிப்படைகிறது.

தீப்பிடிக்க கூடிய வாய்ப்பு அதிகம்

தீப்பிடிக்க கூடிய வாய்ப்பு அதிகம்

ஹேண்ட் சானிடைசர்களால் உடம்பிற்குள்ளே இவ்வளவு பிரச்சினையென்றால், உடலுக்கு வெளியேயும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஹேண்ட் சானிடைசர் என்பது ஆல்கஹால் அதிகம் இருக்கும் ஒரு திரவம். எனவே அதனை தேய்த்து விட்டு நெருப்பின் அருகில் சென்றோமானால், நம் கைகளில் எளிதில் நெருப்பு பற்றி கொண்டு, தீக்காயங்களை ஏற்படுத்திவிடும்.

இது போன்ற ஹேண்ட் சானிடைசர்களால் தீப்பிடிக்கும் சம்பவங்கள் இப்பொழுது அன்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவர தொடங்கி இருக்கின்றன. இது மட்டுமில்லாமல், சமீபத்தில் ஒரு கார் ஹேண்ட் சானிடைசரால் பற்றி எரிந்தது என்று தெரிய வந்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கும். ஆம், உங்கள் கார்களில் நீங்கள் ஹேண்ட் சானிடைசரை சரியாக மூடாமல் வைத்துவிடும் பொழுது, அதிலுள்ள ஆல்கஹால் ஆவியாகி காருக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக தேங்கி விடுகிறது. இவ்வாறான நிலையில் ஒரு சிறிய தீப்பொறி போதும், என்ன விபரீதம் நடக்கும் என்று நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? காரில் நெருப்புப் பற்றி பெரிய விபத்து கூட நேரலாம்.

முகக்கவசத்தை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்

முகக்கவசத்தை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்

நம்மில் சிலர் முகக்கவசத்தை சுத்தம் செய்ய சரியான முறை அதனை நீர் மற்றும் ஹேண்ட் சானிடைசரில் கொண்டு ஒரு அலசு அலசுவது என்று நினைத்து அதை பின்பற்றி கொண்டும் இருப்போம். ஆனால் இவ்வாறு செய்யம் பொழுது அதிலுள்ள வேதிப்பொருட்கள் முகக்கவசத்தில் சேர்ந்து விடுகின்றது. அதே முகக்கவசத்தை மறுபடியும் உபயோகிக்கும் பொழுது, மூச்சு பிரச்சனை மற்றும் குமட்டல் போன்றவை ஒருவருக்கு ஏற்படலாம்.

பாதுகாப்பாக ஹேண்ட் சானிடைசரை உபயோகிப்பது எப்படி?

பாதுகாப்பாக ஹேண்ட் சானிடைசரை உபயோகிப்பது எப்படி?

• உங்கள் கைகளை எப்பொழுதும் சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு நன்கு தேய்த்து கழுவுங்கள்.

• ஹேண்ட் சானிடைசர் வீட்டில் இருந்தால், அதனை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.

• ஹேண்ட் சானிடைசரை நல்ல காற்று புகாத பாட்டில் அல்லது பையில் வைத்து மூடிவிடுங்கள்.

• ஹேண்ட் சானிடைசரை எப்பொழுதும் ஈரப்பதம் இல்லாத, நல்ல குளுமையான இடத்திற்கு அருகில் வையுங்கள்.

• மிக முக்கியமாக ஹேண்ட் சானிடைசரை, சமையல் கூடத்தின் எந்த ஒரு இடத்திலும் வைக்காதீர்கள். மேலும், சானிடைசரை கைகளில் தேய்த்த உடனே சமையலறை பக்கம் செல்லாதீர்கள்.

• உங்களது முகக்கவசத்தை சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்துங்கள்.

முடிவு

முடிவு

உங்களை நாங்கள் ஹேண்ட் சானிடைசர் உபயோகிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஹேண்ட் சானிடைசர் நம் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இப்பொழுது மாறிவிட்டது. இருப்பினும், முடிந்த வரை சோப்பு மற்றும் தண்ணீரை உபயோகிக்க பாருங்கள். அவை முடியாதபட்சத்தில் மட்டும் ஹேண்ட் சானிடைசரை உபயோகிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things That Can Terribly Go Wrong With Your Hand Sanitizer

Here are some things that can terribly go wrong with your hand sanitizer. Read on...