Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
உங்க பல் சொத்தையாகாமல் இருக்கணுமா? அப்ப இதெல்லாம் செய்யுங்க...
நாம் என்ன தான் கட்டுப்பாட்டில் இருக்க நினைத்தாலும், நம்மால் வீட்டில் செய்த பலகாரங்களை அளவாக சாப்பிட முடியாது. ஆனால் சொத்தைப் பற்கள் வராமல் இருக்க சிலவற்றை தவறாமல் பின்பற்றினால் போதும்.
பண்டிகைக் காலங்கள் வந்தாலே, நம் அனைவருக்குமே மனதில் சந்தோஷம் பொங்கும். ஏனெனில் பலவிதமான சுவையான உணவுகளை நாம் சுவைக்கலாம். முக்கியமாக வீட்டில் பலவிதமான பலகாரங்கள் செய்வார்கள். இதனால் நமக்கு பிடித்ததை வயிறு நிறைய திருப்தியாக சாப்பிடலாம் என்று பலரும் குஷியாக இருப்போம்.

ஆனால் இனிப்பு பலகாரங்களை சுவைக்கும் போது மட்டும், பலரது மனதில் எழும் ஓர் எண்ணம் தான் பல் சொத்தை. இத்தனை நாட்கள் இனிப்புக்களை அதிகம் சாப்பிடாமல் இருந்துவிட்டு, ஒரே நாளில் பலவிதமான இனிப்புக்களைச் சுவைப்போம். அதுவும் இந்த இனிப்பு பலகாரங்கள் ஒரு நாள் மட்டுமின்றி, ஒரு வாரம் முழுவதும் சுவைக்குமாறு வீட்டில் இருக்கும்.
நாம் என்ன தான் கட்டுப்பாட்டில் இருக்க நினைத்தாலும், நம்மால் வீட்டில் செய்த பலகாரங்களை அளவாக சாப்பிட முடியாது. ஆனால் இனிப்பு பலகாரங்களால் சொத்தைப் பற்கள் வராமல் இருக்க சிலவற்றை தவறாமல் பின்பற்றினால் போதும். கீழே அவை என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றுங்கள்.

ப்ளாஷ் (Floss)
சொத்தைப் பற்கள் வராமல் இருக்க வேண்டுமானால், இனிப்பு பலகாரங்களை சாப்பிடும் நாட்களில் மட்டுமின்றி, தினமும் இரவு தூங்கும் முன் ப்ளாஷ், அதாவது பல்லிடுக்கு நூல் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதனால் பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுகள் நீக்கப்பட்டு, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உருவாவது குறையும்.

நீர் பருகவும்
இனிப்புக்களை உட்கொண்ட பின் தண்ணீரைக் குடியுங்கள். இப்படி தண்ணீர் குடிப்பதால், பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள இனிப்புக்கள் வெளியேறும். இதனால் சர்க்கரையினால் பற்களில் ஏற்படும் பாதிப்புக்கள் தடுக்கப்படும்.

சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும்
கார்போனேட்டட் பானங்களான சோடா பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் சர்க்கரை மற்றும் அமிலம் அதிகமாக இருக்கும். இதனால் பற்களில் மட்டும் பாதிப்பு ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

மதுவிற்கு 'நோ' சொல்லவும்
மது அருந்துவதை அவசியம் குறைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அது ஈறுகளில் பிரச்சனையை ஏற்படுத்தும், பல் சொத்தை உண்டாக்கும் மற்றும் இதர தேவையற்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் ஆல்கஹால் எச்சில் சுரப்பைக் குறைக்கும் என்பதால், வாய் வறட்சி அதிகரிக்கும். இதனால் வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

கால்சியம் உணவுகளை உண்ணவும்
கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களான பால், யோகர்ட் மற்றும் சீஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள கால்சியம் பற்களை மறுவடிவமைக்க உதவுவதோடு, பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும்.

வாயைக் கழுவவும்
ஒவ்வொரு வேளை உணவை உட்கொண்ட பின்னரும் நீரால் வாயைக் கழுவ வேண்டும். இதனால் ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாயில் தொற்றுக்கள் ஏற்படாமலும் இருக்கும். மௌத் வாஷில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் இருக்கும். இவற்றை உபயோகிக்கும் போது, வாயில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, பற்கள் சொத்தையாவது தடுக்கப்படும்.

முறையாக பற்களைத் துலக்கவும்
பற்களைத் துலக்கும் விதமும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். பற்களை துலக்கும் போது, எப்போதும் வாயின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தது 2 நிமிடம் ஒருவர் பற்களைத் துலக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பல் மருத்துவரை அவ்வப்போது அணுகவும்
இதுவரை நீங்கள் பல் மருத்துவரை சந்தித்ததே இல்லையென்றால், இனிமேல் பல் மருத்துவரை சீரான இடைவெளியில் சந்தித்து, பற்களை சோதித்துக் கொள்ளுங்கள். இதனால் பற்களில் மோசமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. வாய் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications