Just In
- 10 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 20 hrs ago
மைதா போண்டா
- 21 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 21 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்!
- Finance
கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..!
- Movies
கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொத்தை பல் வலியால் இரவு தூக்கமே பாழாகுதா? அதை தவிர்க்க இதோ சில வழிகள்!
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வாய் சுகாதாரம் மிகவும் முக்கியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் பற்களின் மேற்பரப்பில் பிளேக் கட்டமைப்பு அல்லது பாக்டீரியா, மோசமான வாய் சுகாதாரம் மற்றும் கனிமச்சத்து குறைபாடு ஆகியவற்றால் பல் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். சிலருக்கு பற்களில் சிறு துளைகள் போன்று சொத்தைப் பற்கள் ஏற்படலாம். சொத்தைப் பற்களுக்கு முக்கிய காரணம் பல் சிதைவு. இந்த நிலை மிகவும் வலிமிக்கதாக இருப்பதோடு, சில உணவுகளை உண்ணும் போது பற்கூச்சத்தைக் கூட அனுபவிக்கலாம்.
சொத்தைப் பற்களால் வலி ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகள் அந்த துளைகளில் சிக்கிக் கொள்வது தான் காரணம். சொத்தைப் பற்களில் வலி ஏற்பட ஆரம்பித்துவிட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை சந்திப்பது என்பது கடினமான விஷயமாக இருப்பதால், தற்காலிகமாக வீட்டிலேயே ஒருசில கை வைத்தியங்களின் மூலம் சொத்தைப் பல் வலிக்கு தீர்வு காணலாம்.
ஒருவருக்கு எந்த காரணங்களுக்காக எல்லாம் நெஞ்சில் சளி உற்பத்தியாகும் தெரியுமா? - தடுப்பது எப்படி?
இப்போது இரவு நேரத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் சொத்தைப் பல் வலி வந்தால், அதில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

கிராம்பு
கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரண பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. சொத்தைப் பல் வலியில் இருந்து விடுபட கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். ஒருவேளை வலி மிகவும் கடுமையாக இருந்தால், கிராம்பு எண்ணெயை வலியுள்ள பல்லின் மீது நேரடியாக தடவுங்கள்.

உப்பு
உப்பு வீக்கத்தைக் குறைக்கவும், வலியைப் போக்கவும், தொற்றை எதிர்க்கவும் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. அதற்கு ஒரு டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இதனால் சொத்தை பற்களால் வலி ஏற்படுவது தடுக்கப்படும்.

பூண்டு
பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இது ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது பூண்டு பற்களை தட்டி, அதில் சிறிது கல் உப்பை சேர்த்து கலந்து, வலியுள்ள பல்லின் மீது வைக்க வேண்டும். இதனால் சொத்தைப் பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள், சொத்தைப் பல் வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு மஞ்சள் பொடியை நேரடியாக பாதிக்கப்பட்ட பல்லின் மீது தடவி சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதிலும் இந்த எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது நல்லது. இதனால் பற்களில் இருந்து அழுக்குகள் நீங்கும். 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடியை கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.