For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோள்பட்டை வலியை எளிதில் குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்

அலுவலக வேலை செய்வதாக இருந்தாலும், வீட்டில் வேலை செய்வதாக இருந்தாலும் நமது தோள்பட்டைகளின் பங்கு அதில் முக்கியமானது. தோள்பட்டையில் வலி ஏற்பட காரணம் தசைபிடிப்பு, வீக்கம் போன்றவையாக இருக்கலாம். தோள்பட்டை

By Saranraj
|

அலுவலக வேலை செய்வதாக இருந்தாலும், வீட்டில் வேலை செய்வதாக இருந்தாலும் நமது தோள்பட்டைகளின் பங்கு அதில் முக்கியமானது. கணிப்பொறியில் வேலை செய்வதாக இருந்தாலும், சமயலறையில் எந்த பொருளை தூக்குவதாக இருந்தாலும் தோள்பட்டையின் உதவி மிகவும் அவசியமானது. தோள்பட்டையில் ஏற்படும் வலியானது நமது அன்றாட வாழ்கையையே பாதிக்கக்கூடும்.

Remedies for shoulder pain

தோள்பட்டையில் வலி ஏற்பட காரணம் தசைபிடிப்பு, வீக்கம் போன்றவையாக இருக்கலாம். சிலசமயம் தோள்பட்டையில் வலி ஏற்படுவது இதயநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே அதனை மருத்துவருடன் ஆலோசித்து உறுதிசெய்து கொள்ளவும். சாதாரண தோள்பட்டை வலி என்றால் அதனை வீட்லயிருந்தபடியே சரிசெய்யலாம். இங்கே தோள்பட்டையை எளிதில் குணப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்கட்டியை உபயோகித்தல்

ஐஸ்கட்டியை உபயோகித்தல்

வலி அதிகமுள்ள இடத்தில் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஐஸ்கட்டியை வைப்பது வலியை குறைப்பதுடன் வீக்கத்தையும் குறைக்கும். ஆனால் மறந்தும் ஐஸ்கட்டிகளை நேரடியாக உங்கள் தோள்பட்டையின் மீது வைத்துவிட வேண்டாம் ஏனெனில் அது உங்கள் சருமத்தில் வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு துண்டை நன்றாக மடித்து கொண்டு அதில் ஐஸ்கட்டிகளை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

தோள்பட்டைக்கு ஓய்வு கொடுங்கள்

தோள்பட்டைக்கு ஓய்வு கொடுங்கள்

உங்கள் தோள்பட்டைக்கு போதுமான ஓய்வு கொடுப்பது அது விரைவில் குணமடைய உதவிசெய்யும். பின்பக்கமாகவோ அல்லது வலி இல்லாத புறமோ படுக்கவும். தோள்பட்டைக்கு அடியில் மென்மையான தலையணைகளை வைத்துக்கொள்ளவும். உங்கள் தலை எப்பொழுதும் தோள்பட்டைக்கு மேலே இருக்குமாறு அமரவும், தோள்பட்டை வலி இருக்கும் சமயங்களில் பேக் மாட்டிச்செல்வதை தவிர்க்கவும். மேலே உள்ள பொருள் எதையும் கைகளை கொண்டு எடுக்க முயற்சிக்க வேண்டாம், ஏணி அல்லது நாற்காலிகளை உபயோகிக்கவும். உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் பொருட்களை அருகிலேயே வைத்திருங்கள்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமெலைன் என்னும் என்சைம் திசுக்களில் ஏற்பட்டுள்ள காயத்தையும், வீக்கத்தையும் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி இந்த என்சைம்கள் புதிய திசுக்கள் வளரவும், பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. எனவே உங்கள் தோள்பட்டை வலியை விரைவில் குணப்படுத்த அன்னாசிப்பழத்தை சாப்பிடுங்கள், ஒருவேளை சாப்பிட சிரமமாக இருந்தால் பழச்சாறாய் குடித்துவிடுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. அதில் முக்கியமான ஒன்று வீக்கத்தை குணப்படுத்துவது. தோள்பட்டை வலி ஏற்பட முக்கிய காரணம் வீக்கம்.மஞ்சளில் காணப்படும் கர்கமின் என்னும் பொருள் வீக்கங்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. எனவே உங்கள் உணவில் மஞ்சளை சேர்த்துக்கொள்ளுங்கள் முடிந்தால் மஞ்சள் பாலை குடியுங்கள். ஆசியாவில் இது மிகவும் பிரபலமான மருத்துவமுறையாகும். மஞ்சள் பால் செய்வது மிகவும் எளிது. 175மிலி பாலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு கொதிக்க வையுங்கள். குடிக்கும் முன் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள், இது குணப்படுத்துவதை விரைவாக்கும்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்

பழமையான மருத்துவ முறையான அக்குபஞ்சர் தோள்பட்டையில் ஏற்படும் வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பை குணப்படுத்தும். அக்குபஞ்சர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குத்தூசி முறையாகும். இதில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அடைப்புகளை சரியான ஆற்றல் மட்டத்தை தூண்டுவதன் மூலம் சரிசெய்வதாகும். விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் தசைப்பிடிப்புக்ளுக்கு அக்குபஞ்சரையே பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் இது மற்ற முறைகளை விட விரைவில் வீக்கத்தை குணப்படுத்தும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இது நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் உங்கள் தோள்பட்டை வலியை குணமடைய செய்யும். உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் எந்த தசை வலிமையாக உள்ளது எந்த தசை வலுவின்றி உள்ளது என்பதை கண்டறியவும். ஆரம்பத்தில் மறைமுக உடற்பயிற்சிகள் செய்ய நீங்கள் மருத்துவரால் அறிவுறுத்தப்படலாம், இவை தசைகளை குணப்படுத்த தொடங்கும் பின்னர் மெதுவாக தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies for shoulder pain

Injury or inflammation of muscles and tendons in your rotator cuff can cause shoulder pain. Here are some home remedies for healing shoulder pain.
Story first published: Friday, August 10, 2018, 19:08 [IST]
Desktop Bottom Promotion