For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தோலை தூக்கி வீசிடாதீங்க... இத வெச்சு என்னலெ்லாம் செய்யலாம் தெரியுமா?... கேட்டா அசந்துடுவீங்க...

நாம் அலட்சியப்படுத்தும் எலுமிச்சை தோல் தரும் அற்புதமான பயன்கள். பழங்களின் தோலிலுள்ள சத்துக்களை நாம் புறக்கணித்து, பழத்தை தின்றபின், தோலை வீசிவிடுகிறோம்.

By Gnaana
|

நாம் அலட்சியப்படுத்தும் எலுமிச்சை தோல் தரும் அற்புதமான பயன்கள்.
பழங்களின் தோலிலுள்ள சத்துக்களை நாம் புறக்கணித்து, பழத்தை தின்றபின், தோலை வீசிவிடுகிறோம். ஆனால், ஆரஞ்சுதோல், முக சுருக்கத்தைப்போக்கும், மாதுளை தோல், முடி உதிர்தலைத் தடுக்கும் என்று யாராவது சொன்னால், உடனே கடைகளைத் தேடியலைந்து, ஆரஞ்சுதோல் மற்றும் மாதுளைத்தோல் பொடியை வாங்குகிறோம்.

health tips

அதுபோல, எலுமிச்சை பழத்தை ஜூஸ் போடவும், சாற்றை, ரசம் மற்றும் சாலட்களில் மேலே சிறிது தெளித்தபின், தோலை தூக்கியெறிந்து விடுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி

வைட்டமின் சி

எலுமிச்சை பழத்தில் வைட்டமின சி இருக்கிறது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம் தான். ஆனால் உண்மையில் எலுமிச்சை தோலில்தான், உடலுக்கு நன்மைகள் தரும் அதிக சத்துக்கள் இருக்கின்றன. எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C யைவிட, அதன் தோலில்தான் அதிக வைட்டமின் C இருக்கிறதென்றால், நீங்கள் நம்புவீர்களா?... ஆனால் அதுதான் உண்மை.

MOST READ: எய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்

வியக்கும் நன்மைகள்

வியக்கும் நன்மைகள்

உடலை வதைக்கும் ஆக்சிஜனேற்ற பாதிப்புகளை நீக்கும்.

வெட்டிய ஆப்பிள் துண்டுகள் சற்றுநேரத்தில், காற்றின் வேதிவினையால் நிறம் மாறி, பழுப்பு நிறமாவதுபோல, உடல் செல்களும், ஃபிரீ ரேடிகல் எனும் கட்டுப்பாடற்ற செல்களின் பாதிப்பால், அவற்றின் ஆற்றலை இழக்கின்றன.

எலுமிச்சை தோலிலுள்ள சிட்ரஸ் பயோஃபிளாவனாய்டுகள், இந்த பாதிப்புகளை அடியோடு களைந்து, உடலாற்றலை மேம்படவைக்கும், சக்திமிக்க நிவாரணியாகத் திகழ்கிறது.

எலும்புகள் வலுவடைய

எலும்புகள் வலுவடைய

நடுத்தரவயதினர் மற்றும் பெண்களுக்கு, பனிக்காலத்தில், கைகால்களை அசைக்க முடியாதபடி, கைகால் மூட்டு இணைப்புகளில் கடுமையானவலி ஏற்படும். சிலருக்கு உடலின் ஒருபக்கத்தை பாதிக்கக்கூடிய, வாதம் போன்றவையும் ஏற்படலாம். கழுத்து, இடுப்பு, கால்களில் கடுமையானவலி, சிலருக்கு ஏற்படலாம். இதற்கெல்லாம், எலுமிச்சை தோல், சிறப்பான மருந்தாக திகழ்கிறது.

எலுமிச்சை தோலிலுள்ள செறிவான கால்சியம், வைட்டமின் C போன்ற சத்துக்கள், எலும்புகளை காக்கும், காவலனாக விளங்குகிறது.

உடல் நச்சுக்களை அழிக்க

உடல் நச்சுக்களை அழிக்க

நம்மையறியாமல் பழகிய கெட்டபழக்கங்களை நாம் விட்டுவிட்டாலும், அவற்றின் நச்சுக்கள் நம்உடலில் இருந்துகொண்டு, அந்தப்பழக்கத்தைத்தொடர தூண்டி கொண்டேயிருக்கும். குடிப்பழக்கத்தை விட்டசிலர், மீண்டும் குடிப்பதற்கும், சிகரெட் பிடிப்பதை நிறுத்தியவர்கள் மீண்டும் அந்தப்பழக்கத்தைத் தொடரவும், மேற்படி நச்சுக்களே, காரணமாகின்றன. எலுமிச்சை தோல்களை நாம் முறையாக உட்கொள்ளும்போது, இவற்றிலுள்ள சிட்ரஸ் பயோஃபிளாவனாய்டுகள், கெட்டநச்சுக்களை உடலிலிருந்து விரட்டி, உடலாற்றலை மேம்படுத்தி, கெட்டபழக்கங்களை விரட்டும் தன்மைமிக்கவை.

புற்றுநோயை எதிர்க்கும்

புற்றுநோயை எதிர்க்கும்

எலுமிச்சை தோலிலுள்ள சால்வெஸ்ட்ரோல் Q40 மற்றும் லிமோனின் எனும் ஃபிளாவனாய்டுகள், உடல் செல்களை அழிக்கும் புற்றுநோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி, அவற்றை அழிக்கும் ஆற்றல்மிக்கவை. அதனால் இனியாவது எலுமிச்சை பழத்தின் தோலை அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.

கொழுப்பை கரைக்க

கொழுப்பை கரைக்க

எலுமிச்சை தோலிலுள்ள பாலிபீனால் ஃபிளாவனாய்டுகள், இரத்தஓட்டத்தை பாதித்து, இதய கோளாறுகளை ஏற்படுத்தும், நச்சுக் கொழுப்புகளை, உடலிலிருந்து குறைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. உடலின் மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க இந்த எலுமிச்சை தோல் பயன்படுகிறது.

MOST READ: எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்... வெறும் 2 ரூபாய் தான் செலவு...

இதய பாதிப்புகள்

இதய பாதிப்புகள்

எலுமிச்சையிலுள்ள ஃபிளாவனாய்டுகள், இதய கோளாறுகளை ஏற்படுத்தும் ஹார்ட் அட்டாக், மற்றும் சர்க்கரை பாதிப்புகளை கட்டுப்படுத்தக்கூடியவை. எலுமிச்சை தோலிலுள்ள பொட்டாசியம், உடலின் இரத்தஅழுத்தத்தை சரியான விகிதத்தில் பராமரிப்பதில், உறுதுணை புரிகிறது.

பல் பிரச்னைகள்

பல் பிரச்னைகள்

பல் நோய்களைத் தடுத்து, வாய் சுகாதாரத்தை பராமரிப்பவை. எலுமிச்சையில் உள்ள செறிவான வைட்டமின் C, பற்களில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்வதோடு, வாயை ஆரோக்யமாகப் பராமரிப்பதில், உதவிகரமாக இருக்கும். பற்களில் ஏற்படும் ஈறு வீக்கம், பற்குழிகள், ஈறுகளில் இரத்தம் வருதல் போன்றவற்றிற்கு, வைட்டமின் C குறைபாடே, காரணமென்பது, குறிப்பிடத்தக்கது.

எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கும். எலுமிச்சை தோல், உடல் எடைக்குறைப்பில், உதவிசெய்கின்றது. இதிலுள்ள பெக்டின் எனும் வேதி பிளாவனாய்டு, உடலிலுள்ள நச்சுக்கொழுப்புகளை கரைத்து, உடல் எடையைக் குறைப்பதில், சிறப்பான பங்கு வகிக்கின்றன.

சரும பாதிப்புகள்

சரும பாதிப்புகள்

சரும பாதிப்புகளை எதிர்த்து போராடுகிறது. எலுமிச்சைதோல், தோலில் ஏற்படும் சுருக்கம், பருக்கள், முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், முகம் கறுத்துப் போதல் போன்றவை ஏற்படாமல், சருமத்தைக் காக்கிறது. பாதிப்புகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. எலுமிச்சை தோலின் தனித்துவமிக்க அணுக்கள், மேற்கண்ட நச்சுபாதிப்புகளிலிருந்து, சருமத்தைக் காப்பதற்கு, அதன் செறிவான ஆக்சிஜனேற்றத்தடுப்பே, காரணமாகிறது.

ஊறுகாய்

ஊறுகாய்

நாமின்று பெரிதாக நினைக்கும் விசயங்களையெல்லாம், முன்னோர்கள் இயல்பாக செய்துவிட்டார்கள், நாம்தான் அவற்றின் மெய்தன்மைகளை அறியாமல், அவற்றைப் புறக்கணித்து வந்துள்ளோம். எலுமிச்சைப்பழங்களை தோலுடன் சிறுதுண்டுகளாக வெட்டி, உப்புநீரில் ஊறவைத்து வெயிலில் நன்கு காய்ந்தபின், உணவுக்கு தொட்டு சாப்பிடுவார்கள். இதன்மூலம், எலுமிச்சையின் முழுச்சத்தும் அவர்களுக்குக் கிடைத்து, தோல்பாதிப்புகள், இதயக்கோளாறுகளின்றி, முழு கண் பார்வைத்திறனுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

MOST READ: இறந்தபின் நம் ஆவி நேராக எங்கெல்லாம் போகும் தெரியுமா?... தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க...

எலுமிச்சை துருவல்

எலுமிச்சை துருவல்

எலுமிச்சையை ஊறுகாய் போல சாப்பிட விரும்பாதவர்கள், எலுமிச்சை பழங்களை ஃபிரீசரில் உறையும்வரை வைத்திருந்து, பின் அவற்றை தோலுடன், தேங்காய் போல துருவி வைத்துக்கொண்டு, டீ, சாலட் அல்லது விருப்பமான உணவுகளின்மேல் தூவி, சாப்பிட்டுவரலாம். இந்தத்துருவலில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, அப்படியே சாப்பிட, சுவையும், எலுமிச்சையின் முழு ஆற்றலும் உடலுக்கு கிடைக்கும்.

எலுமிச்சை சீவல், உடல் எடை அதிகமுள்ளவர்களின் எடையைக் குறைத்து, நச்சுக் கொழுப்புகளை கரைத்து, உடலை மெலிய வைப்பதில், சிறப்பான பங்குவகிக்கின்றன.

எலுமிச்சை தோல் டீ

எலுமிச்சை தோல் டீ

எலுமிச்சை தோலை நீரில் கொதிக்கவைத்து, அதை தேநீர் போல குடித்துவர, உடலின் அமிலகாரத் தன்மையைக் குறிக்கும் PH அளவு சீராகி, வியாதி எதிர்ப்பு ஆற்றலும் மேம்படும்.

நக பராமிப்பு

நக பராமிப்பு

எலுமிச்சை தோலை சுடுநீரில் ஊறவைத்து, அந்த நீரில் கை விரல்களை சற்று நேரம் வைத்துவர. புகை பிடிப்பதால், சிலரின் விரல் நகங்கள் மற்றும் விரல் நுனிகள் பழுப்பாகக் காணப்படுவது மாறி, இயல்பாகும்.

ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக்

எலுமிச்சை தோலை காயவைத்து பொடியாக்கி, தேன், நாட்டுசர்க்கரை மற்றும் சிறிது விளக்கெண்ணை சேர்த்து, பசையாக்கி, முகத்தில் தடவி பின்னர், முகத்தை குளிர்நீரில் அலசிவர, முகத்தின் மருக்களான இறந்த செல்களை வெளியேற்றி, முகத்தைப் பொலிவாக, புத்துணர்வு பெற வைக்கும்.

கிருமி நாசினி

கிருமி நாசினி

எலுமிச்சை தோலை காயவைத்து பொடியாக்கி, அதில் வினிகர், பச்சைக் கற்பூரம் சேர்த்து, வீடுகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினியாக, டெட்டாலைப் போலப் பயன்படுத்தலாம். என்ன யோசிக்கிறீங்க... இனிமேல் டெட்டால் செலவு மிச்சம். அதுதானே! கலக்குங்க... சந்தோஷமா இருங்க...

MOST READ: உங்க வீட்ல இந்த பாத்திரத்தில தான் சமைக்கிறீங்களா?... உடனே தூக்கி வெளிய வீசுங்க...

எறும்புகளை ஒழிக்க...

எறும்புகளை ஒழிக்க...

சமையலறையில் எறும்புகள் அடிக்கடி சமையல் பாத்திரத்தில் ஏறி, உணவில் கலந்து, சாப்பிட முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். இதற்கு மருந்தைத் தெளித்தாலும், உணவில் சேர்ந்து விஷமாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாக சிலர், என்ன செய்வதென்ற குழப்பத்தில் இருப்பார்கள். எறும்பு உள்ள இடங்களில், எலுமிச்சை தோல் பொடியை தூவிவர, எறும்புகள் உடனே மாயமாக மறைந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of lemon peels

Not many of us know about the health benefits and nutrition value of lemon peels. So, before throwing the lemon peel away after squeezing the lemon juice or using it in any salad etc.
Desktop Bottom Promotion