Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
குடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்...!
நாம் உண்ணும் உணவுகளை அழகாக செரிமானம் செய்கின்ற ஒரு முக்கிய உறுப்பு தான் குடல். இவற்றின் ஆயுளும் ஆரோக்கியமும், நாம் இதனை எவ்வாறு பார்த்து கொள்கிறோமோ அதை பொறுத்தே அமையும். நாம் இதனை சுத்தமாக வைத்து கொண்டால் மட்டுமே இது நன்றாக வேலை செய்யும்.

இல்லையென்றால் இது சீக்கிரமாகவே உருக்குலைந்து விடும். குடலை சுத்தம் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அவற்றில் இயற்கை முறையிலான ஆயுர்வேதமே அற்புதமாக வேலை செய்யும். குடலை எவ்வாறு ஆயுர்வேதத்தை கொண்டு சுத்தம் செய்வது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

அசுத்தமான குடலா..?
நாம் உண்ணும் தேவையற்ற உணவுகளே நமது குடலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளி விடுகிறது. குறிப்பாக அதிக கொழுப்பு கொண்ட உணவுகள், ஃபாஸ்ட் பூட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் குடல் சீர்கேடு அடைகிறது. இவைதான் குடலில் அழுக்குகள் சேர்வதற்கு முக்கிய பங்காகும்.

உடனடி தீர்வு வேண்டுமா..?
நமது குடல் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு இந்த முறை உகந்ததாக இருக்கும்.
தேவையானவை :-
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
ஆப்பிள் சாறு 2 ஸ்பூன்
சிறிது உப்பு

செய்முறை :-
முதலில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சாறு ஆகிய இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் குடலில் உள்ள அழுக்குகள் சட்டென வெளியேறி விடும்.

திரிபலா மூலிகை
மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளில் முதன்மையானது இந்த திரிபலா. இது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றின் செயல்திறனை கொண்டது. எவ்வாறு இதனை பயன்படுத்தலாம்.
தேவையானவை :-
திரிபலா பொடி 1 ஸ்பூன்
சிறிது நீர்

செய்முறை :-
இந்த திரிபலா பொடி நாட்டு மருந்து கடைகளிலும், ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி கொண்டு மிதமான சுடு நீரில் 1 ஸ்பூன் கலந்து காலை வேளையில் குடித்து வரலாம். இதனால் குடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் விரைவில் வெளியேறி விடும்.

சீரக வைத்தியம்
நம் வீட்டில் உள்ள பல வகையான உணவு பொருட்களே நமக்கு சிறந்த நண்பனாக உதவுகிறது. குறிப்பாக அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த சீரகம் அருமையான மருந்தாக நமக்கு உதவுகிறது.
தேவையானவை :-
சீரகம் 1 ஸ்பூன்
சிறிது நீர்

செய்முறை :-
குடலை எளிமையாக சுத்தம் செய்ய, 1 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகம் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இந்த நீரை வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் உங்களின் குடல் விரைவில் சுத்தமாகி விடும்.

இஞ்சி வைத்தியம்
குடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதில் இந்த இஞ்சிக்கு முக்கிய பாங்கு உள்ளது. இதற்கு தேவையானவை...
இஞ்சி சாறு 2 ஸ்பூன்
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1 கப் சூடான நீர்

செய்முறை :-
முதலில் இஞ்சியை அரைத்து கொண்டு கொண்டு சாற்றை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளவும். அடுத்து, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாற்றை சூடு நீரில் கலந்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால் குடலில் உள்ள அழுக்குகள் நீக்கி விடும்.

கற்றாழை வைத்தியம்
பல வகையான ஆயுர்வேத மூலிகைகளில் இந்த கற்றாழை பல ஆயிரம் வருடமாக முக்கிய இடத்தில் இருந்து கொண்டு நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த கற்றாழை வைத்தியம் உங்களுக்கு நிச்சயம் பலனை தரும்.
தேவையானவை :-
கற்றாழை ஜெல் 200 கிராம்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
1 கப் நீர்

செய்முறை :-
முதலில் கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து அரைத்து கொள்ளவும். பிறகு எலுமிச்சை நீர் கற்றாழை சாறு ஆகியவற்றை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications