குளிர்காலத்தில்க நோய் வராமல் தடுக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய எட்டு பழங்கள்

By: Jayakumar P
Subscribe to Boldsky

மினரல்கள் மற்றும் ஊட்டசத்துகள் அதிக அளவில் உள்ளது, பழங்களை ஆண்டு முழுவதும் உட்கொள்ளளலாம். ஆனாலும் குறிப்பாக சில பழங்கள் குளிர் காலத்தில் தினமும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை.

top 8 healthiest fruits you must eat this winter

இந்த பழங்கள் உடலில் நீர்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுவதுடன், நார்சத்து நிறைந்த இந்த பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்களிலிருந்து உடலை காக்க கூடியவை.

இத்தகைய நன்மைகளை அளிக்கும் பழங்களை பற்றி அறிந்து கொள்ள மேலே படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மாதுளை :

1. மாதுளை :

ஊட்டசத்துகள் நிறைந்த இந்த பழம் இந்த குளிர் காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படும் சளி மற்றும் இருமலிலிருந்து உடலை காக்கும்.

2. ஆப்பிள்

2. ஆப்பிள்

ஆப்பிள்கள் குளிர்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. இவை உடலில் நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதுடன் உடலில் நீர் சத்தை அதிகரிக்கும். மேலும் இந்த பழத்தில் அதிகம் உள்ள னார் சத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

 3. பேரிக்காய்

3. பேரிக்காய்

பேரிக்காயை இந்த குளிர் காலத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இயக்கத்திற்கு அவசியமான னார் சத்தும், ஊட்டசத்துகளும் குறைவின்றி கிடைக்கும். மேலும் இந்த பழம் குளிரான தட்ப வெப்ப நிலையில் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவும்.

4. க்ரேப் பழம்

4. க்ரேப் பழம்

க்ரேப் பழம்ஊட்டசத்து நிறைந்த மற்றொரு பழம். இது கலோரி குறைவாக கொண்டது. இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கடுமையான தட்ப வெப்ப சூழலில் நன்மை அளிக்கக் கூடியது.

 5. ஆரஞ்சு:

5. ஆரஞ்சு:

சிட்ரஸ் பழங்கள் குளிர் காலங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். சிட்ரஸ் பழமான ஆரஞ்சில் வைட்டமின் சி சத்து உள்ளது. இந்த பழம் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலை வலிமையாக்குவதால் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ள மிகவும் உகந்தது.

6. கும்குவாட்:

6. கும்குவாட்:

ஆலிவ் விதை அளவிலேயேயான கும்குவாட் பழம், அதிக அளவில் நார்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்துகளை கொண்டது. இது குளிர்காலத்தில் தினமும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பழம்.

7. கிரான்பெர்ரி:

7. கிரான்பெர்ரி:

கிரான்பெர்ரி பழங்கள் உடலில் உடலில் நீர்சத்து குறையாமலும் உடல் சூடு குறையாமலும் பார்த்துக் கொள்ளும். இதை நார் சத்துக்காகவும், வைட்டமின் சி சத்துக்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.

 8. கிவி பழம்:

8. கிவி பழம்:

கிவி பழத்தில் நார் சத்து, வைட்டமின் சி சத்து மற்றும் பொட்டாசியம் அத்திக அளவில் உள்ளது. குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகப்படுத்துவதுடன், உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

top 8 healthiest fruits you must eat this winter

Top 8 healthiest fruits you must eat this winter
Story first published: Thursday, January 5, 2017, 10:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter