இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதால் உண்டாகும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். இரும்புச்சத்தை பெற வேண்டி இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடும் போது உடலுக்கு சில விதமான பின்விளைவுகளும் ஏற்படுகிறது. இதனை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.வாயுப்பிரச்சனை

1.வாயுப்பிரச்சனை

இரும்புச்சத்து மாத்திரைகள் வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகியவை உண்டாகிறது. மருத்துவரின் அறிவுரையின் படி, உணவு உண்ட பின்னர் மட்டுமே இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

2.வாந்தி

2.வாந்தி

இரும்புச்சத்து மாத்திரைகளை அதிக டோஸ் சாப்பிட்டால், வாந்தி ஏற்படும். அதிக டோஸ் அளவு சாப்பிட்டல் இது நிற்க்கும்.

3.ஜிங்க்

3.ஜிங்க்

இரும்புச்சத்து மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டால் உடலில் உள்ள ஜிங்க்கை ஏற்க்கும் திறன் குறைகிறது.

4. மிக அதிக அளவு சாப்பிட்டால்?

4. மிக அதிக அளவு சாப்பிட்டால்?

இரும்புச்சத்து மாத்திரைகளை அதிக டோஸ் சாப்பிட்டால், நுரையீரல், கல்லீரல் சேதம் மற்றும் இரத்த வாந்தி ஆகியவை உண்டாகும்.

5. எவ்வளவு சாப்பிட வேண்டும்?

5. எவ்வளவு சாப்பிட வேண்டும்?

உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மாத்திரையின் அளவானது, வயதினை பொருத்து மாறுபடும். வயது வந்த ஆணுக்கு ஒரு நாளுக்கு 8mg அளவு இருப்புச்சத்து மாத்திரை தேவைப்படும். 19 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு 18mg அளவு இரும்புச்சத்து மாத்திரை தேவைப்படுகிறது. கர்ப்பமாக உள்ள பெண்ணுக்கு 27mg அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் இரும்புச்சத்து மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், குறை பிரசவம் ஏற்படவும், கருக்கலைந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

குறிப்பு :

குறிப்பு :

இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சாப்பிட வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side effects of iron tablets

here are the some Side effects of iron tablets
Story first published: Saturday, September 9, 2017, 13:48 [IST]
Subscribe Newsletter