பற்கள் மற்றும் ஈறுகளின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

பற்களின் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், பின் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். பல் பிரச்சனை குறித்து மருத்துவரிடம் சென்றால், பின் பையில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க நேரிடும். ஆகவே பல் பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமானால், முன்னெச்சரிக்கையுடன் பற்களை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

0Oils To Keep Your Gum And Teeth Strong

அதற்கு பற்களின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கும் பொருட்களைக் கொண்டு அவ்வப்போது பற்களைப் பராமரிக்க வேண்டும். இங்கு பற்களின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கும் அற்புத எண்ணெய்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெய்

பொதுவாக பற்களில் வலி ஏற்படும் போது, அதிலிருந்து விடுபட கிராம்பைப் பயன்படுத்துவோம். ஏனெனில் கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வலி நிவாரணி தன்மை உள்ளது. அத்தகைய கிராம்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை பற்களைத் துலக்கும் போது பயன்படுத்தினாலோ அல்லது ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 துளி கிராம்பு எண்ணெய் சேர்த்து கலந்து வாயைக் கொப்பளித்து வந்தாலோ, வாய் புத்துணர்ச்சியுடனும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.

பட்டை எண்ணெய்

பட்டை எண்ணெய்

கிராம்பு எண்ணெயைப் போன்றே பட்டை எண்ணெயும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வல்லது. இந்த பட்டை எண்ணெயை 2 துளிகள் 1 கப் நீரில் சேர்த்து கலந்து, வாயைக் கொப்பளிக்க ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். இந்த எண்ணெயில் சக்தி வாய்ந்த ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளதால், இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களுள் ஒன்றாகும். இந்த எண்ணெயை பற்களைத் துலக்கும் போது ஒரு துளியை சேர்த்து கொள்ள வேண்டும்.

சேஜ் எண்ணெய்

சேஜ் எண்ணெய்

சேஜ் என்னும் மூலிகைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயும் வாயின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். இந்த எண்ணெயைக் கொண்டு வாயைப் பராமரித்தால், ஈறுகளில் இருக்கும் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

நீலகிரி தைலம் என்று அனைவராலும் அறியப்படும் யூகலிப்டஸ் எண்ணெய், வாயில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். அதற்கு பற்களைத் துலக்கும் போது, இந்த எண்ணெயை ஒரு துளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Oils To Keep Your Gum And Teeth Strong

Here are five best essential oils you can use every day to promote your teeth and gum health!
Subscribe Newsletter