அலோபதி மாத்திரைகள் உட்கொள்ளும் போது நீங்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதன் அபாயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் வீட்டில், உங்கள் நண்பர், உறவினர் ஏன் நீங்களே கூட இந்த தவறை தொடர்ந்து செய்து வரலாம். வீட்டில் அல்லது கைப்பையில் எப்போதுமே ஒரு மினி மெடிகல் ஷாப் குடியிருக்கும். சின்ன தலைவலி வந்தால் கூட ஒரு மாத்திரையை வாயில் போடு மடக்மடக்குன்னு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விழுங்கி விடுவார்கள்.

இதனால் உங்களுக்கு தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கும். மேலும், நாள்பட இந்த பழக்கம் உங்கள் உடல் பாகங்களின் ஆரோகியத்தையும் கெடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நம்மில் பலர் செய்யும் தவறுகள், காய்ச்சல் சளி வந்தால் கூட அதை ஒரே நாளில் சரிசெய்ய வேண்டும் என ஓவர்டோஸ் மருந்துகள் எடுத்துக் கொள்வது. இதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் நாள்பட உடல் பாகங்களின் செயற்திறன் குறையும்.

#2

#2

சளி என்றால் மூன்று நாள், காய்ச்சல் என்றால் ஐந்து நாள் என அந்தந்த நோய் சரியாக சில காலம் எடுத்துக் கொள்ளும். இதற்கு பொறுமை இல்லாமல் பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுக்க கூடாது.

#3

#3

நீங்கள் ஒரு பிரச்சனைக்கு ஒரு மருத்துவ முறையை பின்பற்றினால் அது சீராகும் வரை அதே மருத்துவத்தை பின் தொடர வேண்டும். ஒரே நேரத்தில் அலோபதி, ஹோமியோபதி, ஆயிர்வேதம் என பல மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது.

#4

#4

வேறு ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை, அதே பிரச்சனை தானே என கூறி நீங்கள் அதே மாத்திரையை எடுத்துக் கொள்ள கூடாது. அவருக்கு வேறு அறிகுறி, உங்களுக்கு வேறு அறிகுறியாக இருக்கலாம். இதனால் தான் தனித்தனியே மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

#5

#5

நீரிழிவு, இரத்த அழுத்தம், மனநோய் பிரச்சனைகள் உள்ளவர்கள், சீரான இடைவேளையில் மருத்துவரை பார்த்து அதே மாத்திரை உட்கொள்ளலாமா என கேட்டு, மீண்டும் அதன் வீரியம் அறிந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாக நீண்ட காலம் ஒரே மருந்தை உட்கொள்ள கூடாது.

அபாயம்!

அபாயம்!

மேல் கூறியுள்ளவற்றில் நீங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகள் உடலின் முக்கிய பாகங்களான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயலாற்றலை பாதிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mistakes you Doing while Having English Medicine and It's Deadly Side Effects!

Mistakes you Doing while Having English Medicine and It's Deadly Side Effects!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter