கண் எரிச்சல் மற்றும் வலிக்கு இது தான் காரணமாம்..!

By: Lakshmi
Subscribe to Boldsky

நம்மில் பலர் கண் வலிகளுக்கு ஆளாகின்றனர். உண்மையில் கண் வறட்சி எதனால் ஏற்படுகிறது? கண்கள் சோர்வாகவும் வலியுடனும் இருக்கும் போது கண்களில் அரிப்பு ஏற்படுகிறது. சிலர் தூங்குவதற்காக கண்களை மூடும் போது வலியை உணர்கின்றனர். அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கின்றனர்.

சில சமயம் கண் வலி, தலைவலியை ஏற்படுத்தும். மேலும் உங்களை மயக்கமடைவது போலவும் செய்யும். கண்வலிகளுக்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளை உடல் சோர்வு

மூளை உடல் சோர்வு

கண்களில் வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதிகமான வேலை, உடலை அதிகமாக வருத்திக்கொண்டு வேலை செய்வது, மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு வேலை செய்வது, மிக ஆழ்ந்த கவனத்தை செலுத்தி ஒரு பொருளை நீண்ட நேரம் பார்ப்பது கண்களுக்கு வலியை உண்டாக்கும்.

எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசை சோர்வு

எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசை சோர்வு

கண்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் போது எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசை சோர்வடைகிறது. கண்களில் மொத்தம் ஆறு எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசைகள் உள்ளன. இவற்றில் இரண்டு, மீடியா ரெக்டி, ஒரு பொருளில் அதிகமான கவனம் செலுத்தும் போது இவை அதிக அளவு வேலை செய்கின்றன.

மிக நீண்ட நேரம் இந்த தசைகள் வேலை செய்தால் கண்கள் சோர்வடைகிறது. மிக நீண்ட நேரம் முன்னும் பின்னும் பார்ப்பதாலும் கண்கள் அதிகப்படியாக சோர்வடைகின்றன. தொடர்ந்து அதிக நேரம் முன்னும் பின்னும் திரும்பி வேலை செய்வதால், மூளையும் அதிகமாக சோர்வடைகிறது.

கண்களின் மேற்பரப்பு நோய்

கண்களின் மேற்பரப்பு நோய்

நாம் ஒரு பொருளில் அல்லது கணினியில் அதிகமாக கவனம் செலுத்தி பார்க்கும் போது நமது கண்கள் இமைக்க மறக்கின்றன. கண்கள் போதுமான அளவு இமைக்காமல் இருப்பதனால், கண்களில் உள்ள நீரை புதுப்பிக்க முடியாமல் போகிறது. இதனால் கண்களில் வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

அதிகமான வெளிச்சம்

அதிகமான வெளிச்சம்

அதிகமான வெளிச்சம் கண்களுக்கு ஏற்றதல்ல. அலுவலகங்களில் சரியான அளவு வெளிச்சம் தரும் பல்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணினிகளில் சரியான அளவு ஒளியை வைத்து வேலை செய்வது சிறந்தது. கண்களில் ஏற்படும் கூச்சமானது கண்களை எரிய வைக்கும். மேலும் கண்களில் வலியை தரும். சரியான ஒளியளவில் வேலை செய்வது, வேலையை திறம்பட செய்ய உதவும். மிக குறைந்த அளவு ஒளியில் உற்று பார்த்து வேலை செய்வதும் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

main Causes of Eye Strain or Tired Eyes

main Causes of Eye Strain or Tired Eyes
Story first published: Wednesday, May 10, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter