Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த 2 பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றும் எனத் தெரியுமா?
இங்கு எந்த 2 பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலில் இயற்கையாகவே கொழுப்புக்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த கொழுப்புக்கள் தான் ஆற்றலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது ஒருவரது உடலில் உணவுகள் மூலம் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போதே உடலின் இயக்கம் பாதிக்கப்படுவதோடு, ஆற்றலும் குறைய ஆரம்பிக்கும்.

ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் வயிற்றில் புழுக்களின் அளவு அதிகமாக இருந்தால், உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். எப்போது ஒருவர் அதிகளவு இனிப்பு உணவுகளை உட்கொள்கிறாரோ, அவரது உடலில் சளியின் அளவு அதிகரித்து, புழுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும்.
இந்த சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளும் பெருக ஆரம்பிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது உடலில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைத்து, புழுக்களின் பெருக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் அதற்கான ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
ஆளி விதை - 100 கிராம்
உலர்ந்த கிராம்பு - 10 கிராம்

செய்முறை:
முதலில் ஆளி விதை மற்றும் உலர்ந்த கிராம்பை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
ஒரு டம்ளர் நீரில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து கலந்து தினமும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலை உணவின் போது ஒரு டம்ளர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு
இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த பானத்தைக் குடிப்பதோடு, 3 நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் 3 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் முதல் ஒரு மாதத்தில் உடல் சுத்தமாகவும், நச்சுக்களின்றியும், புழுக்களின்றியும் இருப்பதை உணரலாம்.

மனதில் கொள்ள வேண்டியவை:
எப்போதும் உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதோடு, ஜூஸ்களை அடிக்கடி பருக வேண்டும். அதோடு ஜங்க் உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications