வெங்காயத்தில் மறைந்துள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் எல்லாருக்கும் முழுவதுமாக தெரிவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வெங்காயத்தை விரும்பாமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால், வெங்காயத்தில் அதிகபடியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,அழற்சி, எதிர்ப்புகள் மற்றும் ஆண்டிஹிச்டமின்கள் உள்ளன. மேலும், இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.

அதனாலேயே அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. வெளிநாட்டு உணவு முறையான சாலட் முதல் இந்திய உணவுகள் வரை அனைத்திலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.

வெங்காயத்தின் தோலை உரித்தாலே கண்களில் நீர் வருகின்றது அல்லவா. இதற்குக் காரணம் வெங்காயத்தை உரிக்கும் போது வெளிவரும் ஒரு வகையான வாயு நம் கண்களில் படும் போது எரிச்சலை உண்டு கண்ணீர் வர வைக்கிறது. இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளி வந்து பார்வையை தெளிவு படுத்துகிறது. இதன் தோலில் இருந்தே அதன் மருத்துவ குணங்கள் ஆரம்பித்து விடுகிறது.

வாருங்கள் இப்போது வெங்காயத்தின் பிற மருத்துவ குணங்களைப் படித்து தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மருக்களை போக்குகிறது

மருக்களை போக்குகிறது

வெங்காயத்தை வட்டமாக நறுக்கி மருக்களின் மீது வைத்து ஒரு துணியை வைத்துக் கட்டி அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும் போது இதனை கட்டி அப்படியே காலை வரை வைத்திருந்து பின்னர் எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வந்தால் மரு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இருமலை சரி செய்கிறது

இருமலை சரி செய்கிறது

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் சிறிது தேன் சேர்க்க வேண்டும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் இருமல் உடனே சரியாகிவிடும்.

தீக்காயங்களை ஆற்றும்

தீக்காயங்களை ஆற்றும்

சமையல் செய்யும் போது அல்லது வேறு சில சந்தர்பங்களில் ஏற்பட்ட சிறிய தீக்காயங்களுக்கு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி அந்த காயங்கள் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இப்படி செய்தால் தீக்காயங்கள் சீக்கிரம் ஆறிவிடும்.

சாதாரண சளிக்கு மருந்தாகும்

சாதாரண சளிக்கு மருந்தாகும்

உங்களுக்கு சளி பிடித்திருந்தால், அதனால் தூங்க முடியாமல் அவதிப்பட்டால் நீங்கள் தூங்கும் இடத்திற்கு அருகே வெங்காயத்தை வைத்துக் கொண்டு உறங்குங்கள். இது நுண்ணுயிரிகளை அழித்து சளியின் தொல்லையை நீக்கி விரைவில் சுகமளிக்கும்.

காய்ச்சலைப் போக்கும்

காய்ச்சலைப் போக்கும்

நீங்கள் காய்ச்சலால் அவதிப்பட்டால், உங்கள் சாக்ஸில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் 2 பல் பூண்டு போன்றவற்றை நறுக்கி உள்ளே போட்டு அதை அணிந்துக் கொண்டு தூங்குங்கள். காய்ச்சல் சீக்கிரம் சரியாகி விடும்.

சைனஸ் பிரச்சனைகளைத் தீர்க்கும்

சைனஸ் பிரச்சனைகளைத் தீர்க்கும்

பச்சை வெங்காயத்தை தின்று வந்தால் சைனஸ் பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்தி விடலாம். மேலும், வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து டீ போட்டுக் குடிங்கள் அதுவும் நல்ல பலன் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use onion as medicine in ayurvedha

Medicinal benefits of Onion according to ayurvedha,
Story first published: Saturday, April 1, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter