ஈறுகளில் இரத்தம் வடிதலை தடுக்க தினமும் காலையில் இத குடிங்க!

Written By:
Subscribe to Boldsky

யாராக இருந்தாலும் சரி சிரித்தால் தான் அழகு... அந்த சிரிப்பிற்கு அழகு சேர்ப்பது பற்கள் தான். வாய்ப்பகுதியில் அதிகளவு பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்களது வாய்ப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். பற்களில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் ஈறுகளில் இரத்தம் வடிதல். ஈறுகளில் இரத்தம் வடிதல் பிரச்சனையானது பல காரணங்களால் ஏற்படலாம். அதை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை

மாதுளை

மாதுளை பாக்டீரியாக்களால் உண்டாகும் நச்சுத் தன்மையையும் அழிக்கும். அதனால் தினமும் 30 மில்லி அளவு மாதுளை ஜூஸை எடுத்து வாய் கொப்பளித்தால், மிக விரைவிலேயே ஈறுகளில் ரத்தம் வடிவதைத் தடுக்க முடியும். இந்த மாதுளை சாறில் சர்க்கரை எதுவும் சேர்க்கக்கூடாது.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் மிகச் சிறந்த ஆயுர்வேத முறை. ஆயில் புல்லிங் செய்வது இதயத்துக்கு மட்டுமல்லாது, பற்களையும் உறுதியாக்குகிறது. ஆயில் புல்லிங் செய்வதற்குப் பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்டுகிறது. ஆனால் நல்லெண்ணெயை விட தேங்காய் எண்ணெய் சிறந்த பலன்களைத் தரும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. இது சருமம், தலைமுடி ஆகியவற்றுக்குப் பொலிவைத் தரக்கூடியது. கற்றாழையின் ஜூஸையும் ஒரு ஸ்பூன் பேக்கிங் னோடாவையும் சேர்த்து வாய் கொப்பளிக்கப் பயன்படுத்தலாம்.

தேன்

தேன்

பற்களிலும் ஈறுகளிலும் இரவு தூங்கச் செல்லும் முன் சஜல துளிகள் தேனைத் தடவிக் கொண்டு, காலை எழுந்ததும் வாய் கொப்பளித்து வந்தால், ஈறுகளிலும் பற்களின் இடுக்குகிகளிலும் ரத்தம் கசிவது தவிர்க்கப்படும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும்.

பிரஷ்

பிரஷ்

ரத்தசோகை, உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சில வகை ரத்த புற்று நோய்களால் ஈறுகளில் ரத்தம் கசியலாம். ஈறுகளில் வலி இருந்தாலோ, ரத்தக் கசிவு இருந்தாலோ மிருதுவான பிரஷ் மூலம், ஈறுகளை அழுத்தாமல் பற்களை மட்டும் பிரஷ் செய்ய வேண்டும்.

விரல்களினால் பற்களை தேய்த்தால், அழுக்குகள் முழுமையாக நீங்காது. இதனால், பற்களின் மீது பற்காரை படியக்கூடும். பல் டாக்டரிடம் ஈறுகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்.

வாய் கொப்பளித்தல்

வாய் கொப்பளித்தல்

சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

உப்பு நீர்

உப்பு நீர்

காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

பல் துலக்குதல்

பல் துலக்குதல்

பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில், அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் தங்காது. பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். துர்நாற்றமும் ஏற்படாது. ஈறுகளில் வீக்கமும் ரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும்.

உணவு

உணவு

கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகள். இவற்றின் விஷயத்தில் கவனமாக இருந்தால், பற்சிதைவுக்கான வாய்ப்புகள் குறையும்.

பற்சிதைவு

பற்சிதைவு

பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி போலப் பல்லின் மேற்பரப்பில் தோன்றும். இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம். ஆனால், மிக ஆழமாகக் குழி உண்டாகி, நரம்பு வரையிலும் பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் பற்களைப் பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் உருவாகும். ஆனால் அதற்கு முன்பே பல் மருத்துவரை நாடினால், வேர் சிகிச்சை (Root canal treatment) மூலம் பல்லைப் பிடுங்காமலே காப்பாற்ற முடியும்.

இதை செய்யாதீர்கள்

இதை செய்யாதீர்கள்

பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to stop gum bleeding naturally

How to stop gum bleeding naturally
Story first published: Thursday, October 26, 2017, 14:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter