பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாத 6 பிரச்சனைகள்: மகப்பேறு மருத்துவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்கள் மத்தியில் உண்டாகும் சுழற்சி முறையிலான செயற்பாடு. இது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றும் கூறலாம். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும்.

Gynecologists Warn: 6 Menstrual Problems You Should Never Ignore

Image Courtesy

இதில், பெண்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாத ஆறு மாதவிடாய் கோளாறுகள் இவை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீவிரமான பிடிப்பு!

தீவிரமான பிடிப்பு!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தீவிர பிடிப்பு காரணமாக தாங்கமுடியாத வலி உண்டாகும். இதற்கு "endometriosis" எனப்படும் இடமகல் கருப்பை அகப்படலம் பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம். Endometriosis என்பது கருப்பையில் வளரும் செல்கள், கருப்பை வெளிப்புற சுவரில் வளர துவங்குவது ஆகும். இதனால் அதிக வலி உண்டாகும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான வலி உண்டாவது இதற்கான அறிகுறியாக இருக்கிறது.

இரத்தப்போக்கு!

இரத்தப்போக்கு!

மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு நாட்கள் அதிக இரத்த போக்கு உண்டாகும். கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் போதிலும் கூட அதிக இரத்த போக்கு உண்டாகலாம். ஆனால், நீங்கள் இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் அல்லது புற்றுநோய் செல் வளர்ச்சியின் ஆரம்பம் கூட அதிக இரத்தப்போக்கு ஏற்பட காரணியாக இருக்கலாம்.

பத்து நாட்கள்!

பத்து நாட்கள்!

மாதவிடாய் நாட்கள் பத்து நாட்கள் வரை நீடிப்பதும், அல்லது அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பூச்சி / நச்சு அதிகரித்து வளர்தல் போன்ற மருத்துவ நிலையின் காரணமாக இருக்கலாம். இதனால் இரத்த சோகை ஏற்படும். எனவே, இது போன்ற நிலையில் நீங்கள் உடனே பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.

மாதவிலக்கு கோளாறுகள்!

மாதவிலக்கு கோளாறுகள்!

சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் முன்னரே மனோநிலை சமநிலையின்மை உண்டாகும். அசாதாரணமான பசி, அதிகளவில் பதட்டம், மூட் ஸ்விங்ஸ், மன அழுத்தம், மனநிலை கட்டுப்பாடு இழத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன. இது ஓரிரு வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். இதனால் நீங்கள் அசௌகர்யத்திற்கு ஆளாவீர்கள்.

ஹார்மோன்!

ஹார்மோன்!

சில மருத்துவ நிலைகள் மாதவிடாயை பாதிக்கும். ஆஸ்துமா இருந்தால் மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்னரே நீங்கள் மோசமாக உணர்வீர்கள்.நீரிழிவும், மன அழுத்தம், கீழ் வாதம், மூட்டு வீக்கம் போன்ற பல மருத்துவ நிலைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மாதவிடாய் தள்ளிபோவது!

மாதவிடாய் தள்ளிபோவது!

கருத்தரிக்காமல் மாதவிடாய் தள்ளிப்போக தைராயிடு, ஹார்மோன் சமநிலையின்மை, டயட்டில் கோளாறு, அதிகளவிலான உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Gynecologists Warn: 6 Menstrual Problems You Should Never Ignore

Gynecologists Warn: 6 Menstrual Problems You Should Never Ignore
Subscribe Newsletter