பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் சளி, காய்ச்சல் ஆகிவற்றில் இருந்து விடுபட சில டிப்ஸ்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஆயுர்வேதம் ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இப்போதும் கூட ஆயுர்வேத மருத்துவமுறையால் மொத்த மக்கள் தொகையில் 80% பயனடைந்து வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அதிக மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமை இவை தான் நமக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் வர காரணமாக உள்ள மூன்று விஷயங்கள் என ஆயுர்வேதம் கூறுகிறது.

மருத்துவ முறைகளுள் சிறந்ததான ஆயுர்வேத மருத்துவ முறையில், பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு உள்ளது என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிடோபலாடி பவுடர் (Sitopaladi Powder)

சிடோபலாடி பவுடர் (Sitopaladi Powder)

காய்ச்சல் வரக்கூடிய அறிகுறிகளான மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு ஆகியவை இருந்தால் அரை டிஸ்பூன் சிடோபலாடி பவுடரை சூடான தண்ணீரில் கலந்து பின்னர் இனிப்புக்காக சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். இந்த கலவையை சில மணிநேரங்கள் இடைவெளியில் சில முறைகள் குடித்தாலே காய்ச்சலுக்கான அறிகுறிகள் நீங்கும். இந்த பவுடர் மளிகை கடைகள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

உணவு எளிதில் செரிக்கவும், காய்ச்சலில் இருந்து விடுபடவும் இஞ்சி டீ பருகுவது நல்லது. 2பங்கு இஞ்சி, மூன்று பங்கு இலவங்க பட்டை தூள் இவற்றை சூடான தண்ணீர் கலந்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு ஏலக்காயை இதில் சேர்க்கவும். இனிப்புக்காக அரை டீஸ்பூன் தேனை இதில் கலந்து ஒரு நாளில் அடிக்கடி பருகினால் பருவநிலை மாற்றத்தால் வரும் நோய்கள் பறந்து விடும்.

யூகலிப்டஸ் இலைகள்

யூகலிப்டஸ் இலைகள்

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை கண்டால் சிறிதளவு யூகலிப்டஸ் இலைகளை சூடான நீரில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும், இது நல்ல நிவாரணத்தை தரும். யூகலிப்டஸ் பவுடருக்கு பதிலாக நீங்கள் இஞ்சி பவுடரையும் சேர்க்கலாம். இரண்டுமே நல்ல பலனை தரும்.

மிளகு பவுடர்

மிளகு பவுடர்

பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் நோய்கள் சில வைரஸ்களால் உண்டாக கூடியவை. இவற்றை கட்டுப்படுத்த மிளகு ஒரு சிறந்த பொருளாகும். அரை டீஸ்பூன் மிளகு பொடியை 2 டிஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி சாறுடன் கலந்து தினமும் சில முறை குடித்தால் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

துளசி இலைகள்

துளசி இலைகள்

துளசி பாரம்பரிய மருத்துவத்தில் தனக்கென சிறந்த இடம் பிடித்துள்ளது. ஒரு டீஸ்பூன் துளசி சாறுடன் தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடித்தால் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Remedies For Seasonal Flu

Here are the some Ayurvedic Remedies For Seasonal Flu
Story first published: Friday, June 16, 2017, 10:35 [IST]