40 வயதிற்குப் பின் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இந்த 6 காரணங்களால் இருக்கலாம்!!

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

பொதுவாக அனைவரும் கூறுவது வியர்வை உடலுக்கு நல்லது. ஏனென்றால், நமது உடல் சரியாக வேலை செய்கிறது என்பதை வெளிபடுத்தும் செயல் தான் வியர்வை. வியர்வை வழியாக உடலில் இருக்கும் அழுக்கு வெளியேறும் என்பார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகப்படியான வியர்வை வேறு சில உடல் பிரச்சனைகளால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.

40 வயதை அடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது சாதாரணம். ஆனால், 40 வயதிற்கு முன் மாதவிடாய் நின்றால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவற்றில் ஒன்று தான் அதிகப்படியான வியர்வை.

6 Reasons that you might be sweating after 40s

மேலும், இரவு நேரங்களில் ஏற்படும் வியர்வை அனைத்தும் ஹார்மோன் மாற்றத்தால் மட்டுமே ஏற்படக்கூடியது இல்லை என்று லாரன் ஸ்ட்ரைக்கர், பாலியல் உடல்நலம் மற்றும் மெனோபாஸ், வடமேற்கு மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குனர் வலியுறுத்துகிறார். வேறு சில காரணங்களாலும் வியர்வை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை முறைகளில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால், உடலில் மாற்றங்கள் ஏதோ ஏற்பட்டுள்ளதை நீங்களே தெரிந்து கொண்டு மருத்துவரை அணுகி தெரிந்துக் கொள்வது சிறந்தது. இங்கே, 40 வயதிற்கு மேல் ஏற்படும் அதிகப்படியான வியர்வைக்கு மாதவிடாய் சுழற்சி நிற்பதைத் தவிர, வேறு 6 காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள்

மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள்

மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகளாலும் அதிகமாக வியர்க்கும் என ஸ்ட்ரைக்கர் கூறுகிறார். குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகள், இதயம் மற்றும் இரத்த அழுத்த மருந்துகள் மற்றும் மன இறுக்க நிவாரணிகள் போன்றவை அதிகமாக வியர்வையை வெளியேற்றும்.

அதுவும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இம்மருந்து மாத்திரைகளை எடுத்தால் ஏற்படும். தேசிய சுகாதார மையத்தின் புள்ளிவிவரப் படி, 40-50 வயதிற்கு மேல் மனஅழுத்த நிவாரணி மாத்திரைகளை எடுத்த பெண்களுள் 23% பேருக்கு, மற்ற வயது ஆண் பெண்களை விட அதிகளவில் வியர்ப்பது தெரிய வந்தது.

 சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தாலும் அதிகம் வியர்க்கும் என ஹைபிரைட்ரோசிஸ் அல்லது மிகையாக வியர்த்தலில் நிபுணத்துவம் பெற்ற ஹ்ராட்ச் காராமனோகியன் என்கிறார். இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால், அதற்கு சர்க்கரை நோய் என்று அர்த்தமில்லை. ஆனால் 40 வயதில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், அது சர்க்கரை நோய்க்கான அபாயமாகும்.

தினமும் போதிய உடற்பயிற்சியை செய்யாமல், உடல் பருமனுடன் இருந்தால், டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு, அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் இதர ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபட்டால், இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதோடு, அதிகம் வியர்ப்பதையும் தவிர்க்கலாம்.

 தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை

ஹைப்பர் தைராய்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிக அளவில் எடையைக் குறைத்து, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் அதிகமாக வியர்ப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசனின் சுகாதார நூலகத்தின் கூற்றுப்படி, தைராய்டு கோளாறுகள், 40 வயது பெண்களைத் தாக்கும் போது, மாதவிடாய் சுழற்சி நின்று போவதற்கான அறிகுறிகளை உண்டாக்கும்.

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

அதிகம் வியர்ப்பதற்கு நோய்த்தொற்றுகள் வெளிப்படையான காரணமாக இல்லாமல் இருக்கலாம் என ஸ்ட்ரெச்சர் கூறுகிறார். சிலருக்கு தெரிந்தோ தெரியாமலோ, காசநோய்க்கான தொற்றுகள் ஏற்பட்டு, அதனால் அதிகம் வியர்க்கலாம்.

கிளீவ்லேண்ட் மருத்துவமனையின் படி, மிகவும் அரிதாக எலும்பு தொற்றுகள் ஏற்பட்டு, அதனால் அதிகமாக வியர்வை வெளியேறக்கூடும். பாக்டீரிய தொற்றுகள் கூட சில நேரங்களில் அதிகளவு வியர்வையை உண்டாக்கும்.

 தூக்கத்தில் மூச்சுத்திணறல்

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

தூங்கும் போது மூச்சுத்திணறலை சந்தித்தாலும், தூங்கி எழும் போது ஈரமான பெட்சீட்டைக் காணக்கூடும். அளவுக்கு அதிகமாக வியர்ப்பது தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும்.

பொதுவாக இப்பிரச்சனை பெண்களை விட ஆண்களிடம் தான் அதிகம் இருக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை அதிகம் சந்திக்கும் பெண்கள் விரைவில் இறுதி மாதவிடாயை நெருங்குவதோடு, ஆண்களிடமிருந்து இவர்களுக்கான அறிகுறிகள் சற்று வேறுபட்டிருக்கும் என நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் கூறுகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்/லிம்போமா மிகவும் அரிதாக இரவு நேரத்தில் மிகையான வியர்வையை உண்டாக்கும் என ஸ்ட்ரெச்சர் கூறுகிறார். அமெரிக்கன் புற்றுநோய் சங்கத்தின் படி, ஒவ்வொரு வருடமும் 32,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஹாட்ஜ்கின்ஸ் இல்லாத லிம்போமாவைக் கொண்டிருப்பதோடு, வயது அதிகரிக்கும் போது அபாயமும் அதிகரிப்பதாக கூறுகிறது.

அதோடு வீங்கிய நிணநீர் முடிச்சுகள், எடை குறைவு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் இதர அறிகுறிகளாகும். எனவே இம்மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Reasons that you might be sweating after 40s

6 Reasons that you might be sweating after 40s
Story first published: Friday, June 16, 2017, 15:30 [IST]