For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் நீங்கள் மழைக் காலத்தில் தினமும் குளிக்க தேவையில்லை என தெரியுமா?

மழைக் காலத்தில் தினமும் குளிக்க அவசியமில்லை என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

நாகரீகம், சுகாதாரம் என்ற பெயரில் தான் நாம் பலவற்றையும் செய்து வருகிறோம். ஆனால், அப்படி நாம் நமது அன்றாக வாழ்வில் கடைப்பிடிக்கும் சிலவன அவ்வளவு சீரியஸாக பின்பற்ற தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதில், முக்கியமானது மழைக் காலத்தில் தினமும் குளிக்க தேவையில்லை என இவர்கள் கூறுகின்றனர். அது ஏன்? எதற்காக? என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் #1

காரணம் #1

குளிர் / மழைக் காலத்தில் குளிப்பதில் இருந்து பலரும் நழுவ விரும்புவார்கள். இது நல்லது தான் என்கின்றனர் சரும மருத்துவ நிபுணர்கள்.

ஆம், மழைக் காலத்தில் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லையாம். உண்மையில் மழைக் காலத்தில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கானது என்கின்றனர்.

காரணம் #2

காரணம் #2

சரும நல நிபுணர்கள் மழைக் காலத்தில் நமது சருமத்தில் பெரிதாக அழுக்கு படியாது. பாக்டீரியா தாக்கம் இருக்காது. மேலும், சாதரணமாகவே நமது சருமம் தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கும்.

ஒருவேளை நீங்கள் ஜிம் செல்பவர், ளவுக்கு அதிகமாக வியர்க்கும் அளவிற்கு வேளைகளில் ஈடுபடுபவர் மழைக் காலத்தில் தினமும் குளிக்கலாம் என்கின்றனர்.

காரணம் #3

காரணம் #3

மழைக் காலத்தில் பலரும் சுடு தண்ணியில் குளிக்க தான் விரும்புவார்கள். மழைக் காலத்தில் தினமும் சுடு நீரில் குளிப்பது சருமத்தை வறட்சியடைய செய்யும். இது தீங்கானது என்கின்றனர்.

அல்லது நீண்ட நேரம் சுடு தண்ணியில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள் என சரும நல நிபுணர்கள் விரும்புகின்றனர்.

காரணம் #4

காரணம் #4

நமது சருமத்தில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கும். இது சரும நலத்தை பாதுகாக்கும், ரசாயன நச்சுக்களை எதிர்த்து போராடும். இதற்காகவே மழைக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளித்தார் போதுமானது என சரும நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரணம் #5

காரணம் #5

மழைக் காலத்தில் தினமும் சுடு தண்ணியில் குளிப்பது நகங்களின் நலத்திற்கும் கேடு. இதனால் நகங்கள் வலுவிழந்து உடைந்து / விரிசல் அடைந்து போகும்.

காரணம் #6

காரணம் #6

பொதுவாகவே, தினமும் குளிப்பது அவசியமற்றது எனவும். உடலில் அழுக்கு சேர்வது பொருத்து குளிப்பது போதுமானது என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

You Don't Need To Shower Everyday in Winter

You Don't Need To Shower Everyday in Winter
Desktop Bottom Promotion