Latest Updates
-
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்ககிட்ட இந்த பழக்கம் எல்லாம் இருக்கா.... அப்ப உடனே படிங்க!
நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆம், இது நூறு சதவீதம் உண்மை. வாழ்க்கையின் கடைசி நாட்களில் மருத்துவமனையில் அந்த பிடிக்காதா வாடையை சுவாசித்துக் கொண்டு, ஊசிகளின் குடைச்சலில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நரக கொடுமைகளுக்கு மத்தியில் வாழ்வதற்கு இறந்தே விடலாம் என்று தான் அனைவரும் எண்ணுவார்கள்.
இப்படிபட்ட சிரமமான வாழ்க்கையை தவிர்த்து, நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் எனில் நீங்கள் சில பழக்கவழக்கங்களை மறக்காமல் அன்றாடம் பின்பற்ற வேண்டும்....

கை கழுவுதல்
சாப்பிடுவதற்கு முன்னரும், பின்னரும் கையை கழுவ வேண்டும். அதே போல சமைக்க ஆரம்பிக்கும் போதும் கூட கைகளை நன்கு கழுவிய பிறகு ஈடுபட வேண்டியது அவசியம்.

மூக்கை நோண்டுதல்
மூக்கை நோண்டுவது மிகவும் கெட்ட பழக்கம். இதனால் நிறைய நச்சு கிருமிகள் தொற்று ஏற்படுகிறது.

ஸ்ட்ரெச்சிங்
தினமும் காலை எழுந்ததும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இது உங்கள் தசைகள் இலகுவாக உணரவும், சிறந்து செயல்படவும் உதவுகிறது.

மூச்சு விடுதல்
மூச்சு விடுவதிலேயே நிறைய பேர் தவறு செய்கிறார்கள். யாருமே, நுரையீரல் நிரம்பும் படி இழுத்து, முழுக்க மூச்சு விடுவதில்லை. மூச்சு பயிற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

ஆரோக்கியமான காலை உணவு
காலை உணவில் பிரெட், பிஸ்கட் என கண்டதை உண்ணாமல், பழங்கள், முட்டை, பால் என ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட துவங்குங்கள்.

நகம் வெட்டுங்கள்
வாரம் தவறாமல் நகம் வெட்ட வேண்டியது அவசியம். நகத்தில் சேரும் அழுக்குகள் மூலமாக தான் நிறைய கிருமிகள் நமது உடலுக்குள் சாப்பிடும் போது செல்கிறது.

தனிப்பட்ட பொருட்கள்
ஷேவிங் ரேசர், டூத்பிரஷ், நகம் வெட்டும் கருவி போன்றவற்றை கூட மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். இதன் மூலமாகவும் நச்சு கிருமிகள் பரவ வாய்ப்புகள் இருக்கின்றன.

சர்க்கரை வேண்டாம்
கரும்பு சர்க்கரை போன்றவை உடலுக்கு நல்லது. ஆனால், வெள்ளை சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. எனவே, இவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

வியர்வை வெளிவர வேண்டும்
குளிர் காலத்தில் வியர்வை அதிகம் வர வாய்ப்பில்லை. ஆனால், பொதுவாகவே வாக்கிங், ஜாக்கிங், உடல் வேலை போன்றவற்றில் ஈடுபட்டு வியர்வை வெளியேறும் படி ஏதாவது செயலில் ஈடுபட வேண்டும்.

நல்ல உறக்கம்
எட்டு மணி நேரம் உறக்கம் என்பதை விட, எந்த எட்டு மணி நேரம் நீங்கள் தூங்க வேண்டும் என்பது முக்கியம். அதிக பட்சம் இரவு 9 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழுவது சிறந்த நேரம் எனப்படுகிறது.



Click it and Unblock the Notifications
