மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் 7 அன்றாட பழக்கவழக்கங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்ஜின் பழுதடைந்துவிட்டால் என்ன தான் ஆக்சிலேட்டரை முறுக்கினாலும் வண்டி வேகமாக ஓடாது. அப்படி தான், மூளை சுறுசுறுப்பாக இருந்தால் தான் நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க ஓடியாடி வேலை செய்ய முடியும். மூளை தான் நமது உடலில் முக்கிய பாகம்.

உங்களுடைய மூளையின் அளவு சுருங்கி விட காரணமாக இருக்கும் பழக்கங்கள்!!!

உங்களது அன்றாட பழக்கவழக்கங்களில் சிலவற்றை சேர்த்துக் கொண்டு, சிலவற்றை தவிர்துவிட்டாலே போதுமானது உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க துவங்கிவிடும். நடைப்பயிற்சி, கோபத்தை அடக்கிக் கொள்ளுதல், பல் துலக்குவது என சின்னச்சின்ன விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தாலே போதுமானது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயின்

ஒயின்

தினமும் இரவு ஓர் கிளாஸ் ரெட் ஒயின் பருகிவது நல்ல உறக்கத்தை மட்டுமின்றி, மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.ரெட் ஒயின் இரத்த நாளங்களை இலகுவாக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல் துலக்குங்கள்

பல் துலக்குங்கள்

சற்று வினோதமாக தான் இருக்கும், ஆனாலும் இது உண்மை தான். தினமும் பற்களை துலக்காமல் இருந்தாலும் கூட மூளையின் சுறுசுறுப்பு குறைய வாய்ப்புகள் உண்டு. எனவே, மறக்காமல் தினமும் பல் துலக்கி வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.

சிடுமூஞ்சி தனமாக இருக்க வேண்டாம்

சிடுமூஞ்சி தனமாக இருக்க வேண்டாம்

எப்போதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சிடுமூஞ்சி போல இருக்க வேண்டாம். இப்படி முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் மூளையின் செயற்திறனை பாதிக்கும் என ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

கற்றுக் கொள்ளுங்கள்

கற்றுக் கொள்ளுங்கள்

தினமும் புதிதாக எதையேனும் கற்றுக் கொள்ளுங்கள். புதிய மொழி, புதிய கலை, புதிய தகவலை அறிந்துக் கொள்வதால் என புதியதாக எதையேனும் கற்றுக் கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

சிரிப்பு

சிரிப்பு

குறைந்தபட்சம் தினமும் இருபது நிமிடங்களாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும். நன்கு சிரிப்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் பழக்கமாகும்.

பயிற்சிகள்

பயிற்சிகள்

தினமும் 30 - 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது, உடலை மட்டுமின்றி மூளையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் பழக்கமாகும். இந்த பயிற்சிகளின் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராவது தான் இதற்கான காரணம் ஆகும்.

உறக்கம்

உறக்கம்

நள்ளிரவு வரை விழித்திருக்காமல் நேரமாக உறங்க செல்லுங்கள். குறையாமல் ஆறு முதல் எட்டு மணி நேரம் நன்கு உறங்குங்கள், உங்கள் மூளை தன்னைப்போல சுறுசுறுப்பாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Habits That Will Keep Your Brain Young and Sharp

Daily Habits That Will Keep Your Brain Young and Sharp, read here in tamil.
Subscribe Newsletter