Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க
உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும் 'ஸ்பா '

ஸ்பா சிகிச்சை அல்லது நீர் சிகிச்சை என்பது உடல் மற்றும் மன நலத்திற்கு உதவும் மருத்துவமற்ற சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலும் ரிசார்ட்ஸ், அழகுநிலையங்கள், போன்ற இடங்களில் செயல்படுகின்றன. பெல்ஜியத்தின் ஸ்பா என்ற நகரின் பெயரில் இருந்து இந்த சொல் வந்துள்ளது. “நீர் மூலம் உடல் நலம்" என்னும் பொருள்படும் “சனிடாஸ் பெர் அக்யூயம்" என்ற லத்தின் வாக்கியத்தின் சுருக்கப்பெயர்தான் ஸ்பா ஆகும்.
ஸ்பா வகைகள்
முகத்தை அழகு படுத்துதல், மசாஜ், சூடான மெழுகினைக் கொண்டு உடலில் பூசி பின் அவை குளிர்ந்த பின் அகற்றுதல், சேற்றுக்குளியல், மூலிகைக் குளியல் போன்ற சிறப்பு வாய்ந்தவைகள் ஸ்பா சிகிச்சையில் நடைமுறையின் உள்ளன. இது தவிர வெப்ப நீரூற்று, மித வெப்ப மருந்து நீர்மக்குளியல், வெப்பத்தொட்டி, சோனா, நீராவிக்குளியல் போன்றவையும் ஸ்பா சிகிக்சையின் சிறப்பம்சமாகும். இதனுடன் ஊட்டச்சத்து மற்றும் தியானம் தொடர்பாகவும் ஆலோசனை தரப்படுகிறது.
ஸ்பா சிகிச்சையின் நன்மைகள்
இது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிப்பதோடு மன அழுத்தத்தை நீக்குகிறது. பணிச்சுமை, குடும்பசுமையினால் ஏற்படும் அழுத்தங்களை இது போக்குகிறது. ரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. ரத்தத்திற்கு அதிக அளவு ஆக்ஸிசனை அளிப்பதோடு செல்களை புதுப்பிக்கின்றது.
வெது வெதுப்பான நீராவி சிகிச்சையானது ரத்த சுழற்சியை சீராக்குகிறது. நீர் சிகிச்சையானது உடலை மட்டுமில்லாது ஆத்மா வரை சென்று ஊடுருவுகிறது. உடல் இழந்த தண்ணீரை சமப்படுத்துகிறது.
இதய சுமை குறையும்
விளையாட்டு வீரர்கள் தங்களின் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைப் பெற ஸ்பா சிகிச்சை உதவுகிறது. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.
புத்துணர்ச்சி அதிகரிக்கும்
ஸ்பா மசாஜ் மூலம் தோல் புத்துணர்ச்சி பெறுவதோடு பளபளப்படைகிறது. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. இதன் மூலம் அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. நோய்களை குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது. மசாஜ் மூலம் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.
கழிவுகள் வெளியேறும்
மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும். கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
