For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காலிஃப்ளவர்!

By Mayura Akilan
|

Cauliflower
சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடல்கேன்சர் குணமாகும்

இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது, வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதயநோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும்.

இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல்கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.

சூட்டைத் தணிக்கும்

இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும். எனவே நீரை கொதிக்கவைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப்போக்கும்.

இளைத்தவர்கள் குண்டாகலாம்

உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் காலிஃப்ளவரை சமையலில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைட்டமின் பி1,2,3,5,6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

English summary

Health benefits of Cauliflower | புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காலிஃப்ளவர்!

Among the cruciferous vegetables, cauliflower is something you might want to add to your regular diet because of its multiple health benefits. Cauliflower consumption has been studied for its cancer-preventing potential and antioxidant properties. Cauliflower contains many nutrients, making it an excellent addition to any diet.
Story first published: Friday, December 9, 2011, 13:53 [IST]
Desktop Bottom Promotion