Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க உடல் எடையை டக்குனு குறைக்கணுமா? அப்ப இந்த டிப்ஸை இன்னையில இருந்து ஃபாலோ பண்ணுங்க!
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கலாம். அதேநேரம் உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இருக்கும்போது, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பலர் தங்கள் எடை இழப்பு பயணத்தை ஆர்வமாகத் தொடங்குகிறார்கள், ஆனால், விரைவிலையே தோல்வியடைகிறார்கள். இருப்பினும் விடாமுயற்சியால் நீங்கள் பின்பற்றும் சரியான எடை இழப்பு திட்டங்களால் உங்கள் உடல் எடை குறையத் தொடங்கும்.

உங்கள் உடல் எடையை குறைக்க இன்றே நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இலக்குகளை திட்டமிடுங்கள்
உடல் எடையை குறைப்பதற்கான முதல் பணி, நீங்கள் எளிதாக பின்பற்றக்கூடிய ஒரு நடைமுறை திட்டத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் எந்த விஷயத்தையும் செய்யும்போதும் பிளான் செய்து பண்ண வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் வெற்றியடைய அதிக வாய்ப்புள்ளது. உடல் எடையை குறைக்க முயலும்போது, நீங்கள் அமைக்க வேண்டிய இரண்டு வகையான இலக்குகள் உள்ளன.
அந்த இலக்குகளில், ஒன்று நீங்கள் எவ்வளவு எடை குறைக்க விரும்புகிறீர்கள் அல்லது எவ்வளவு தசையைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை உள்ளடக்கியது. இரண்டாவது, உங்கள் இலக்குகளை எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைப் பற்றியும் நீங்கள் திட்டமிட வேண்டும். எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று திட்டமிடுங்கள்.
உணவு திட்டம்
உங்கள் ஆரோக்கியத்திலும் உடல் எடையை நிர்வகிப்பதிலும் நீங்கள் சாப்பிடும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் தினமும் ஆரோக்கியமான உணவுகளையும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளையும் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, நல்ல ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை பின்பற்ற தொடங்குங்கள். கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த முழு தானியங்களை சாப்பிடுங்கள்.
கோழி, மீன், பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்ற தாவர அடிப்படையிலான புரத மூலங்கள் கொண்ட உணவுகளுடன் மெலிந்த புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். மேலும், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவு சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
உடற்பயிற்சி திட்டம்
ஜிம்மில் சேர வேண்டுமா? அல்லது நீங்களாகவே உடற்பயிற்சி செய்யலாமா? என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் நேரத்தின் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யலாம். இருப்பினும் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எந்த உடற்பயிற்சி உங்களுக்கு வேடிக்கையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த பயிற்சியை தினமும் மேற்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்யும் நண்பரைக் கண்டறியவும்
உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்வதற்கு அதிக ஈடுபாடு தேவைப்படும். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உடற்பயிற்சி செய்யும் நண்பர்களுடன் நட்பை வளர்த்துக்கொண்டு, அவர்களுடன் நீங்களும் பயிற்சி செய்யலாம். ஒன்றாக உடல் எடையை குறைக்கக்கூடிய ஒரு நண்பரைக் கண்டால், நீண்ட காலத்திற்கு உங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை நீங்கள் கடைபிடிக்கலாம்.
மற்ற அம்சங்களில் கவனம் செலுத்துங்கள்
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, குறுக்குவழிகள் எதுவும் இல்லை. நீங்கள் போதுமான நல்ல தூக்கத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். உங்கள் உடல் எடை இழப்பு திட்டத்தை பாதிக்கும் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் உடல் எடையை சரியாக நிர்வகிக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


