Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
கோடைகாலத்தில் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க என்ன செய்ய வேண்டும்? இதோ சில எளிய ட்ரிக்ஸ்..
கோடைகாலத்தில் நம் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க நாம் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் என்ன தான் முயன்றாலும் சில நேரங்களில் நாம் நினைத்த அளவுக்கு தண்ணீர் குடிக்க முடியாது அல்லது நம்முடைய சோம்பேறித்தனத்தால் சில நேரங்களில் நாம் தண்ணீர் குடிப்பதில்லை.
குறிப்பாக இந்த கோடை காலத்தில் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் பருகுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியே என்றால் கூட நாம் அடிக்கடி அவர்களுக்கு தண்ணீர் குடிக்க ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே தான் நீங்கள் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க நாங்கள் சில எளிய வழிகளை உங்களுக்கு கூற உள்ளோம்.

இந்த எளிய ட்ரிக்ஸ்களை பின்பற்றி கோடை காலத்தில் உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க முடியும். உங்கள் குழந்தைகள் தண்ணீர் குடிக்கவும் இந்த ட்ரிக்ஸ்களை நீங்கள் பின்பற்றலாம்.
தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு உங்கள் சரும ஆரோக்கியத்தையும் நீங்கள் மேம்படுத்த முடியும். இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற முடியும்.
நீர் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றுகிறது. முகப்பருக்களை தடுக்கிறது. நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உங்கள் உடல் செயல்பாடுகள் குறைந்து போய் விடும்.
அதுமட்டுமல்லாமல் நீரிழப்பு உங்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் சோகம் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உங்கள் மூளை சிறப்பாக செயல் பட உதவி செய்யும். உங்கள் உணர்வுகளை சமநிலையில் வைக்கவும் உதவி செய்யும்.
எந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பது சிறந்தது?
நாம் இரவு முழுவதும் தூங்குவதால் நம் உடலில் ஏழு முதல் எட்டு மணி நேரம் தண்ணீர் இல்லாமல் போய் விடும். எனவே ஒவ்வொரு இரவும் உங்கள் படுக்கைக்கு அருகில் ஒரு பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நள்ளிரவில் தாகம் எடுத்தால் சோம்பேறித்தனத்தால் நீங்கள் தண்ணீர் குடிக்க முயற்சிக்காமல் போகலாம்.
அதே மாதிரி உணவுக்கு முன்பு தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல பழக்க வழக்கமாகும். இது சாப்பிடும் போது உங்கள் பகுதிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுக்கு முன் சாப்பிடும் போது குறைவாக மட்டுமே உணவை எடுத்துக் கொள்வீர்கள். மேலும் வயிறு நிரம்பிய திருப்தியை இது உங்களுக்கு வழங்குகிறது.
கோடைகாலத்தில் தண்ணீர் குடிக்க எளிய ட்ரிக்ஸ்கள்
கோடைகாலத்தில் சோம்பேறித்தனமின்றி தண்ணீரை எடுத்துக் கொள்ள வாட்டர் பாட்டிலில் நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக 10 மணிக்கு வாட்டர் பாட்டிலில் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், 11 மணிக்கு ஒரு அளவு மற்றும் 12 மணிக்கு ஒரு அளவு என குறித்து வைத்துக் குடிக்கலாம்.
தண்ணீர் பாட்டிலில் நேரத்தை குறித்து வைப்பது தண்ணீர் குடிக்க உங்களை தூண்டுகிறது. இதனால் நீங்கள் அவ்வப்போது மறக்காமல் தண்ணீர் குடிப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு கூட இந்த ட்ரிக்ஸ்யை பின்பற்றி வரலாம்.
தொலைபேசியில் அலாரம் வைக்கலாம்
தண்ணீர் குடிப்பதை நினைவூட்ட உங்கள் தொலைபேசியில் அலாரம் வைக்கலாம். 30 நிமிட இடைவெளியில் தொலைபேசியில் அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு தடவையும் அலாரம் அடிக்கும் போது ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அலாரம் சத்தம் உங்களுக்கு தண்ணீர் குடிப்பதை நினைவு படுத்தும்.
உங்கள் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் அவர்களது பேச்சையே அலாரமாக வைக்கலாம். உதாரணமாக உங்கள் குழந்தைகளை "தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் " என்று பேச வைத்து அதையே அலாரமாக வைத்துக் கொள்ளலாம். இது குழந்தைகளை தண்ணீர் குடிக்க உற்சாகமூட்டும்.
உங்கள் தண்ணீருக்கு சுவையூட்டுங்கள்
சில சமயங்களில் வெறும் தண்ணீரை குடிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். எனவே அந்த மாதிரியான சமயங்களில் உங்கள் தண்ணீரில் புதினா போட்டு சுவையூட்டலாம். புதினா தண்ணீர், சீரக தண்ணீர் மற்றும் லெமன் வாட்டர் என வித விதமான ப்ளேவர்களில் தண்ணீர் குடிக்கலாம். இது உங்களுக்கு நீர்ச்சத்தை அளிப்பதோடு சீரண சக்திக்கும் உதவுகிறது.
மற்ற பானங்களில் தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்
இந்த ட்ரிக்ஸ்யை குழந்தைகளுக்கு நீங்கள் பின்பற்றலாம். உங்கள் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறுத்தால் அவர்களுக்கு பிடித்த சர்க்கரை பானங்களில் கூடுதலாக தண்ணீர் சேர்த்து குடிக்க கொடுக்கலாம். உதாரணமாக ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் அல்லது பழச்சாறுகளில் பாதியளவு எடுத்து மீதியை தண்ணீர் கொண்டு நிரப்பி குடிக்கலாம். இதை முயற்சி செய்து பாருங்கள்.
தினசரி இலக்குகளை நிர்ணயுங்கள்
உங்கள் தினசரி இலக்குகளை அமைத்துக் கொள்வது அவசியம். தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என பேப்பரில் எழுதி ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை அடைய தவறாமல் முயற்சி செய்யுங்கள்.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் தண்ணீர் தேவையை 70% வரை பூர்த்தி செய்யும். தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற தண்ணீர் சத்து காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். செலரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications