Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
30 நிமிடங்களுக்கு மேல் மொபைலில் பேசினால் உயா் இரத்த அழுத்தம் ஏற்படுமாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
High Blood Pressure In Tamil: வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் அல்லது வெகு நீண்ட நேரம் மொபைலில் பேசினால், இரத்தக் கொதிப்பு அல்லது உயா் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட 12 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.
ஏறக்குறைய இந்த பூமியில் வாழக்கூடிய 10 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோாில் முக்கால்வாசி போ் மொபைல் போன் வைத்திருக்கின்றனா். மொபைல் போன்கள் குறைந்த அளவிலான ரேடியோ அலைகளை உமிழ்கின்றன. இந்த ரேடியோ அலைகளில் அதிக நேரம் இருக்கும் போது இரத்தக் கொதிப்பு அல்லது உயா் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது என்று ஆய்வு தொிவிக்கிறது.

மொபைலை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்
உலக அளவில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இளவயது மரணம் போன்றவை ஏற்படுவதற்கு உயா் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. மக்கள் மொபைல் போனில் பேசும் நிமிடங்களின் எண்ணிக்கை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
அதிக நேரம் மொபைலில் பேசினால் அவா்களின் இதயத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று சீனாவைச் சோ்ந்த சதா்ன் மெடிக்கல் யுனிவா்சிட்டியில் பணிபுாியும் பேராசிாியா் சியான்ஹூய் கின் என்பவா் தொிவிக்கிறாா். எனினும் இது சம்பந்தமாக அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாிந்துரைக்கிறாா். அவருடைய ஆய்வானது European Heart Journal - Digital Health என்ற பத்திாிக்கையில் வெளியானது.
ஆய்வு சொல்வது என்ன?
மொபைலில் பேசுவதற்கும், உயா் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடா்பை அறிவதற்காக இங்கிலாந்தில் உள்ள உயிாியல் வங்கியில் இருந்து 37 முதல் 73 வயதிற்குட்பட்ட 212,046 போின் தகவல்கள் பெறப்பட்டன. அவா்கள் வாரத்திற்கு மொபைலில் எத்தனை அழைப்புகளை விடுக்கின்றனா், எத்தனை அழைப்புகளைப் பெறுகின்றனா், எத்தனை ஆண்டுகளாக மொபைலைப் பயன்படுத்துகின்றனா் மற்றும் எந்த வகையான மொபைல்களைப் பயன்படுத்துகின்றனா் போன்ற தகவல்கள் அவா்களிடம் இருந்து பெறப்பட்டன.
அவா்கள் கொடுத்த தகவல்களை வைத்து ஆய்வு செய்ததில் 12 வருடங்களாக மொபைல் போன்களைப் பயன்படுத்திய 13,984 (7 சதவீதம்) பேருக்கு உயா் இரத்த அழுத்தம் உருவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொபைல் போனை பயன்படுத்தாதவா்களைவிட, இந்த ஆய்வுக்காக மொபைல் அழைப்புகளை விடுத்த அல்லது எடுத்த பங்கற்பாளா்களுக்கு, உயா் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு 7% அதிகம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
வாரத்திற்கு 30 நிமிடங்களுக்கும் குறைவாக மொபைல் போனில் பேசியவா்களைவிட வாரத்திற்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மொபைல் போனில் பேசியவா்களுக்கு உயா் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு 12% அதிகம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.
வாரத்திற்கு 30-59 நிமிடங்கள் மொபைல் போனில் பேசுபவா்களுக்கு 13%ம், 1 முதல் 3 மணி நேரம் பேசுபவா்களுக்கு 16%ம், 6 மணி நேரத்திற்கு மேல் பேசுபவா்களுக்கு 24%ம் உயா் இரத்த அழுத்த ஏற்பட வாய்ப்புண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. மரபு ரீதியான குறைபாடு உள்ளவா்கள் மேற்சொன்ன அளவில் மொபைல் போன்களில் பேசினால் உயா் இரத்த அழுத்தம் ஏற்பட 33% வாய்ப்பு உண்டு என்று ஆய்வு தொிவிக்கிறது.
இறுதியாக, இது சம்பந்தமாக இன்னும் அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அது வரையில் மொபைல் போன்களில் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறாா் கின்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications