Latest Updates
-
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம்
வைட்டமின் ஏ குறைந்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? இந்த அறிகுறி இருந்தா அலட்சியமா இருக்காதீங்க!
நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்கிறது. சில ஊட்டச்சத்துக்கள் உறுப்புகளுக்கு உணவளிக்கின்றன, சில உடல் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகினற
நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்கிறது. சில ஊட்டச்சத்துக்கள் உறுப்புகளுக்கு உணவளிக்கின்றன, சில உடல் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகினறன. அவற்றில் முக்கியமான ஒன்று வைட்டமின் ஏ. வைட்டமின் ஏ நம் உடலின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும்.

இது செல் வளர்ச்சிக்கும், கருவின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பெரும்பாலும் வைட்டமின் ஏ நிறைந்த உணவு இயற்கையாகவே பார்வையை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, இது தோல், நுரையீரல், சிறுநீர்ப்பை, குடல் போன்றவற்றின் மேற்பரப்பு திசுக்களை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், புதிதாக குழந்தை பெற்ற பெண்கள் இந்த வைட்டமின் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வைட்டமின் ஏ குறைபாடு குழந்தை பருவத்தில் தொற்று காரணமாக குறிப்பிடத்தக்க நோயுற்ற தன்மை மற்றும் இறப்புடன் தொடர்புடையது. வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள் உங்கள் உடலில் தெரிந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம்.
வறண்ட சருமம்
சரும செல்களை சரிசெய்ய வைட்டமின் ஏ இன்றியமையாதது என்பதால், இது வீக்கத்திற்கு எதிராக பாதுகாக்கிறது. ஆய்வுகளின்படி, அரிக்கும் தோலழற்சி என்பது தோல் வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் வைட்டமின் ஏ அதன் விளைவைக் குறைக்க உதவும்.
கண்களில் வறட்சி
வைட்டமின் ஏ குறைபாட்டிற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் பல கண் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் கார்னியா செயல்பாடு குறையும், கண்ணீரை உற்பத்தி செய்ய இயலாமை, குருட்டுத்தன்மை, இரவு குருட்டுத்தன்மை போன்றவை ஏற்படலாம்.
இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சிக்கல்
வைட்டமின் குறைபாடு காரணமாக, கருத்தரிக்கும் போது ஒருவருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில் வைட்டமின் ஏ கருவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது, எனவே அதன் குறைபாடு இனப்பெருக்க ஆற்றலைத் தடுக்கலாம்.
குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவது
வைட்டமின் ஏ ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வளர்ச்சி குன்றிய அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம்.
அடிக்கடி நோய்த்தொற்றுக்கு ஆளாவது
வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி பொதுவான தொண்டை மற்றும் மார்பு தொற்றுகள் ஏற்படலாம். அவை குழந்தைகளுக்கு ஆபத்தான சுவாச நோய்த்தொற்றுகளை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
காயம் மெதுவாக குணமடைவது
காயங்களை குணப்படுத்தும் அனைத்து நிலைகளிலும் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ எபிடெலியல் வளர்ச்சியைத் தூண்டும் திறனுக்காக அறியப்படுகிறது. ஏனெனில் வைட்டமின் ஏ ஆரோக்கியமான சருமத்தின் முக்கிய அங்கமான கொலாஜனை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


