Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
வெயில் காலத்தில் உடல் சூட்டினால் அவதிப்படுகிறீர்களா? நீங்க குடிக்கும் நீரில் இதை சேருங்க போதும்...!
Summer Care Tips: வழக்கத்தை விட இந்த வருட கோடைகாலம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் மிக விரைவாகவே ஆரம்பித்துவிட்ட சூழலில் வெயில் அளவு நாள்தோறும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஆரோக்கியமாக இருக்க நாம் அனைவரும் நமது உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று நீரேற்றமாக இருக்க வேண்டும். கோடைகால தலைவலி மற்றும் செரிமான அழுத்தத்தைத் தடுக்க இது மிக அவசியம். பொதுவாக நாள் முழுவதும் தண்ணீர் பருகுவது நல்லது, குறிப்பாக கோடைக்காலத்தில், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான அமைப்புக்கு ஊக்கமளிக்கவும் தண்ணீர் அவசியம்.

நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் சிறந்த பானமாக இருந்தாலும், உங்களின் நீரேற்ற செயல்பாட்டை அதிகரிக்க தண்ணீருடன் நீங்கள் சேர்க்கக்கூடிய சில பொருட்கள் உள்ளன. கோடைக்காலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உங்கள் தண்ணீரில் சேர்க்க வேண்டிய சில சிறந்த பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை தண்ணீர் மற்றும் தேனுடன் உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க ஒரு நல்ல நடைமுறையாகும். கோடைக்காலத்தில் எலுமிச்சை உங்கள் தண்ணீரில் சேர்க்க வேண்டிய ஒரு சிறந்த கூடுதல் பொருளாகும், ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது மற்றும் சருமத்திற்கு நல்லது. எலுமிச்சை நீரில் வைட்டமின் சி இருப்பதால் நச்சு நீக்கும் பண்புகள் அதிகமுள்ளன, மேலும் இது எடை குறைப்பிற்கும் உதவும்.
புதினா
புதினா என்பது பல இந்திய கோடைகால பானங்களில் சேர்க்கப்படும் இயற்கையான குளிரூட்டியாகும். ப்ரெஷான புதினா இலைகளின் ஒரு துளிரை உங்கள் வாட்டர் பாட்டிலில் போட்டு வைப்பது புத்துணர்ச்சியுடன் உங்கள் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். புதினா தண்ணீர் கோடைகாலத்தில் உங்கள் சருமத்திற்கு சிறந்தது. வெயில் காலங்களில், உங்கள் சருமம் வியர்வையின் காரணமாக பருக்களை ஏற்படுத்தும். புதினா இயற்கையாகவே பருக்கள் மற்றும் முகப்பருக்களை எதிர்த்துப் போராடும்.
சப்ஜா விதைகள்
ஊறவைத்த சப்ஜா அல்லது இனிப்பு துளசி விதைகள் கோடையில் சிறந்தது. அவை இயற்கையாகவே உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சியாக இருக்க உதவும். அதனால்தான் அவை பெரும்பாலும் எலுமிச்சைப் பழங்கள், மில்க் ஷேக்குகள், காக்டெயில்கள் மற்றும் ஃபலூடா ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவை ஜெலட்டினாக மாறும் வரை அவற்றை ஊறவைக்க வேண்டியது மட்டுமே. லஸ்ஸி அல்லது மில்க் ஷேக் போன்ற உங்கள் கோடைகால பானங்களில் ஊறவைத்த விதைகளை சேர்த்து குடிக்கலாம்.
வெள்ளரிக்காய்
நச்சுத்தன்மையை நீக்குவதில், வெள்ளரிக்காய் சிறந்த பொருட்களில் ஒன்றாகும், இது மிகவும் ஈரப்பதமூட்டும் காய்கறியாகும். வெயிலில் வெளியே செல்வதற்கு முன், உங்கள் தண்ணீர் பாட்டிலில் சில வெள்ளரிக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். வெள்ளரிக்காய் 95 சதவிகிதம் தண்ணீரால் ஆனது மற்றும் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது உங்கள நீரேற்றமாகவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
சோம்பு
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சிறந்த கோடைகால மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பெருஞ்சீரகம் விதைகள் மூலமா உடலை குளிர்ச்சியாக்கும் நீர் பானத்தை தயாரிக்க, சில சோம்பு விதைகளை இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் சிறிது கல் உப்பு மற்றும் தேன் சேர்த்துக் குடித்துவர உடல் குளிர்ச்சியடையும். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் தண்ணீர் பாட்டிலில் ஒரு சில பெருஞ்சீரகம் விதைகளை சேர்ப்பதன் மூலம், நாள் முழுவதும் நீரேற்றம் மற்றும் குளிர்ச்சியான பானத்தை பருகலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

