Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
அதிக உடல் சூட்டினால் சந்திக்கும் வெப்ப மயக்கத்தைத் தடுக்க உதவும் சில இயற்கை வழிகள்!
Summer Health Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் போது, உடலில் உள்ள நீரின் அளவு குறைவதோடு, உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் அதிகப்படியான வெயிலில் சுற்றும் போது வெப்பம் மயக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
வெப்ப மயக்கம் என்பது மிகவும் ஆபத்தான நிலை. மாரடைப்பைப் போன்றே வெப்ப மயக்கமும் உயிரைப் பறிக்கும் அபாயம் கொண்டது. கோடை காலத்தில் வெப்ப மயக்கத்தால் நிறைய பேர் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. உடலின் சாதாரண வெப்பநிலையின் அளவு 37 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால் உடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகும் போது வெப்ப மயக்கம் ஏற்படுகிறது. அதுவும் ஒருவரது உடலின் வெப்பநிலை 40 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் போது, அது உள்ளுறுப்புக்களை சேதமடையச் செய்து, நிலைமையை மோசமாக்கும்.

எனவே கோடையில் உடல் வெப்பநிலையைக் குறைக்கும் முயற்சியை அவசியம் எடுக்க வேண்டும். மேலும் வெப்ப மயக்கமானது ஒருசில அறிகுறிகளை ஆரம்பத்தில் வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்து வந்தால், வெப்ப மயக்கத்தால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம். அந்த அறிகுறிகளாவன:
* கடுமையான தலைவலி
* வேகமாக சுவாசிப்பது
* வேகமாக இதயத் துடிப்பு
* சருமம் சிவந்து போதல்
* அளவுக்கு அதிகமான வியர்வை
* தலைச்சுற்றல்
இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே உடல் வெப்பத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அதிகப்படியான நீரைக் குடிப்பதைத் தவிர, உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் ஒருசில பானங்கள் மற்றும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இப்போது கோடையில் வெப்ப மயக்கத்தைத் தடுக்கும் மற்றும் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. வெங்காய சாறு
வெங்காய சாறு வெப்ப மயக்கத்திற்கு சிகிச்சை அளிக்க உதவும் ஒரு அற்புதமான பொருள். ஆயுர்வேத நிபுணர்கள் வெப்ப மயக்கத்திற்கு முதலில் இதைத் தான் பரிந்துரைப்பார்கள். அதற்கு வெங்காய சாற்றினை காதுகளுக்கு பின் மற்றும் நெஞ்சுப் பகுதியில் தடவ வேண்டும். இது உடல் வெப்பநிலையைக் குறைக்கும். வெங்காய சட்னியைக் கூட சாப்பிடலாம்.
2. புளிச் சாறு
புளியில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளன. அந்த புளியை சுடுநீரில் போட்டு ஊற வைத்து, வடிகட்டி, பின் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானம் உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும். மேலும் புளிச்சாறு ஒரு மலமிளக்கியாகவும் செயல்படுவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
3. ப்ளம்ஸ்
ப்ளம்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளன மற்றும் இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகின்றன. இவை வெப்ப மயக்கத்தால் உடலினுள் ஏற்படக்கூடிய வீக்கத்தைத் தணிக்க உதவுகின்றன. அதற்கு சில ப்ளம்ஸ் பழங்களை நீரில் மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். பின் அதை மசித்து, வடிகட்டி, அந்த நீரைக் குடிக்க வேண்டும். இது வெப்ப மயக்கத்திற்கு சிறந்த நிவாரணமளிக்கும்.
4. மோர் மற்றும் இளநீர்
மோரில் புரோபயோடிக்குகள் வளமான அளவில் உள்ளன. மோரை வெயில் காலத்தில் குடிக்கும் போது, அதிகப்படியான வியர்வையால் இழந்த வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உடலுக்கு வழங்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதேப் போல் இளநீர் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலைப்படுத்துவதன் மூலம், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
5. மல்லி மற்றும் புதினா ஜூஸ்
கொத்தமல்லி அல்லது புதினா இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து கோடைக்காலத்தில் குடித்து வந்தால், அது உடல் வெப்பத்தைக் குறைக்கும். ஏனெனில் இவ்விரு இலைகளும் இயற்கையாகவே குளிர்ச்சி பண்புகளைக் கொண்டவை. எனவே இவற்றைப் பருகும் போது உடல் வெப்பம் தணியும். மேலும் வெயில் காலத்தில் சந்திக்கும் சரும அரிப்புகளுக்கும் இந்த சாற்றினை தடவுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
6. துளசி விதைகள் மற்றும் சோம்பு விதைகள்
துளசி விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அந்த ஊறிய விதைகளுடன் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, நீரை ஊற்றி, சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க, உடல் வெப்பம் குறையும். அதேப் போல் சோம்பு விதைகளை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை குடிப்பதன் மூலமும், உடல் வெப்பம் குறையும்.
7. ஆப்பிள் சீடர் வினிகர்
கோடையில் அதிகப்படியான உடல் சூட்டை சந்திப்பவர்கள், ஒரு டம்ளரில் நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேனை கலந்து குடித்தால், அது அதிக வியர்வையால் இழந்த கனிமச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுக்களைப் பெற உதவும். மேலும் வியர்வையின் மூலம் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற முக்கிய சத்துக்களும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆப்பிள் சீடர் வினிகர் நீரைக் குடிப்பதால், இச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு மீண்டும் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications






