Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்...
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கோடைக்கால நோய்களும்.. அதைத் தடுக்கும் வழிகளும்...
Summer Diseases: பருவக்காலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் குளிர்காலத்தை எடுத்துக் கொண்டால், சளி, இருமல் பிரச்சனைகளாலும், மழைக்காலத்தில் டெங்கு மற்றும் மலேரியா போன்றவற்றாலும் ஏராளமானார் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் கொளுத்து கோடைக்காலத்திலும் மற்ற காலங்களை விட அதிகமாக தாக்கக்கூடிய சில நோய்கள் உள்ளன.
இந்த நோய்களைத் தடுக்க சிறந்த வழி, அந்நோய்கள் வராமல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். கோடைக்காலத்தில் மற்ற பருவங்களை விட அதிகளவில் வெப்பம் இருப்பதால், அந்த சூட்டினால் நமது உடலில் பலவிதமான நோய்களின் அபாயம் அதிகம் உள்ளன. இப்போது அந்த கோடைக்கால நோய்களைப் பற்றியும், அவற்றைத் தடுக்கும் சில வழிகளைப் பற்றியும் காண்போம்.

வெப்ப வாதம்
வெயிலில் அளவுக்கு அதிகமாக சுற்றும் போது, அதன் விளைவாக பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, சரும வறட்சி, பிடிப்புகள், மூச்சு வாங்குதல், வேகமான இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளை சந்தித்தால், அந்நபருக்கு வெப்ப வாதம் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இந்த நிலையை ஒருவரால் எளிதில் சமாளிக்க முடியும் என்றாலும், இந்த அறிகுறிகள் தீவிரமானால், அதன் விளைவாக கோமாவிற்கு செல்லும் வாய்ப்புக்களும் உள்ளன.
தவிர்ப்பது எப்படி?
வெயிலில் அதிகமாக சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், சூரியக்கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சன் பர்ன்
சுட்டெரிக்கும் வெளியில் அதிகமாக சுற்றும் போது, சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் ஊடுருவி சரும செல்களை தீவிரமாக பாதிக்கும் ஒரு நிலை தான் சன் பர்ன். இந்நிலையில் சருமமானது சிவந்திருப்பதோடு, கடுமையான எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். அத்துடன் காய்ச்சல் அல்லது குளிர், குமட்டல் போன்றவையும் இருக்கும். தீவிரமான நிலையில், சருமத்தில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிப்பதோடு, சரும தோல்களும் உரிக்கப்படும்.
தடுப்பது எப்படி?
வெளியே வெயிலில் செல்லும் முன், சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் SPF 15-க்கு மேல் உள்ள சன்ஸ்க்ரீனை சருமத்தில் தடவ வேண்டும். மேலும் வெயில் சருமத்தில் படாதவாறு காட்டன் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.
வியர்க்குரு
கோடைக்கால் நிறைய பேர் அவதிப்படும் ஒரு பிரச்சனை தான் வியர்க்குரு. இந்த வியர்க்குருவானது பெரியோர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் வரும். வியர்க்குரு அதிகமாக இருந்தால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தி மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். பெரும்பாலும் இந்நிலையானது அதிகமாக வியர்ப்பவர்களுக்கு வரும்.
தடுப்பது எப்படி?
கோடைக்காலத்தில் அதிகமாக வியர்ப்பதால், சருமம் எந்நேரமும் ஈரப்பதத்துடன் இருக்கும். வியர்க்குருவைத் தவிர்க்க சிறந்த வழி, சருமம் ஈரப்பதத்துடன் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு காட்டன் உடைகளை அணிவதோடு, வியர்குரு பவுடர்களை பயன்படுத்த வேண்டும். பவுடர்களை பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சருமத்தை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருக்கும்.
சின்னம்மை
கோடையில் பெரும்பாலானோரைத் தாக்கக்கூடிய கொடிய நோய் தான் சின்னம்மை. வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த சின்னம்மையானது சருமத்தில் நீர் நிரம்பிய கொப்புளங்களை உடல் முழுவதும் ஏற்படுத்தும். வழக்கமாக இந்த நிலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும், சில சமயங்களில் சர்க்கரை நோயாளிகள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டவர்கள், புற்றநோய் அல்லது பிற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்படலாம். சின்னம்மையானது தொற்றக்கூடிய நோய். பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது அல்லது தும்மும் போது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
தடுப்பது எப்படி?
சின்னம்மையைத் தடுக்க சிறந்த வழி சின்னம்மை தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்லாமல் இருக்க வேண்டும்.
மஞ்சள் காமாலை
கோடைக்காலத்தில் அதிகம் வரக்கூடிய மற்றொரு நோய் தான் மஞ்சள் காமாலை. அசுத்தமான உணவுகள் அல்லது நீரை உட்கொள்வதன் மூலம் இந்நோயானது ஒருவரை தாக்குகிறது. ஹெபடைடிஸ் ஏ வைரஸ் உடலினுள் நுழைவதால் ஏற்படுவது தான் மஞ்சள் காமாலை. இந்நிலை தீவிரமாகும் போது கல்லீரலை மோசமாக பாதிக்கும். மஞ்சள் காமாலையின் முக்கிய அறிகுறிகள் மஞ்சள் நிற சருமம், வெளிரிய கண்கள், அடர் மஞ்சள் நிற சிறுநீர், சரும அரிப்பு போன்றவை.
தடுப்பது எப்படி?
மஞ்சள் காமாலை தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், இந்த வகையான தொற்று உள்ளவர்களிடம் இருந்து விலகி இருப்பது தான். மேலும் ஆரோக்கியமான உடல் எடை, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் அளவாக மது அருந்துவது போன்றவையும் இந்நிலையைத் தடுக்க உதவும்.
மெட்ராஸ் ஐ
நீங்கள் தூங்கி எழுந்திரிக்கும் போது, உங்களின் கண்கள் சிவப்பு நிறத்தில், வீங்கி மற்றும் கடுமையான வலியை அனுபவித்தால், உங்களுக்கு மெட்ராஸ் ஐ அல்லது விழிவெண்படல அழற்சி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது ஒரு தொற்றுநோயாகும். வீட்டில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ வந்தால், அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே இது ஏற்படலாம்.
தடுப்பது எப்படி?
எப்போதும் கண்களில் கைகளை வைக்கும் முன், கைகளை கழுவ வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நோய்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் ஒருவருக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளவை. எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














