Latest Updates
-
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
நீரில் ஊற வைத்த வேர்க்கடலையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Health Benefits Of Soaked Groundnuts In Tamil: பொதுவாக நட்ஸ்கள் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகும். நட்ஸ்களில் பல வகைகள் உள்ளன.
அதில் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு நட்ஸ் தான் வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையை இதுவரை நாம் வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவோம். ஆனால் இந்த வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

ஏனெனில் வேர்க்கடலையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைக்கும் போது, அது பைடிக் அமிலத்தை உடைத்தெறிய உதவுகிறது மற்றும் நொதி தடுப்பான்களின் அளவைக் குறைத்து, உடலால் எளிதில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட, நீரில் ஊற வைத்து உட்கொண்டால் தான், அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும் மற்றும் எளிதில் செரிமானமாகவும் உதவி புரியும். இப்போது வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், எந்த மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காண்போம்.
செரிமானம் மேம்படும்
வேர்க்கடலையை பச்சையாக சாப்பிட்டால், அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, வயிற்று வலியையும் உண்டாக்கும். ஆனால் வேர்க்கடலையை ஊற வைக்கும் போது, அதில் உள்ள பைடிக் அமிலம் போன்ற சிக்கலான சேர்மங்களை உடைத்தெறிய உதவி புரிந்து, வேர்க்கடலையை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பைடிக் அமிலம் என்பது ஊட்டச்சத்துக்கு எதிரானது மற்றும் இது சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமானத்தை மேம்படுத்த வேர்க்கடலையை ஊற வைத்து உட்கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து உறிஞ்சுவதை அதிகரிக்கிறது
வேர்க்கடலையை ஊற வைக்கும் போது, அதில் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. அதுவும் நட்ஸ்களை ஊற வைக்கும் செயல்முறையின் போது, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வெளியிடும் நொதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அவற்றை உட்கொள்ளும் போது, அவை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
புரோட்டீன் அதிகம்
வேர்க்கடலையில் தாவர வகை புரோட்டீன் அதிகமாக உள்ளன. இந்த புரோட்டீனை முழுமையாக பெற ஊற வைக்க வேண்டும். ஏனெனில் வேர்க்கடலையை ஊற வைக்கும் போது அது புரோட்டீன்களின் உயிர்த்தன்மையை அதிகரித்து, உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. எனவே வேர்க்கடலையை அப்படியே சாப்பிடுதைத் தவிர்த்து, இனிமேல் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
ஊற வைத்த வேர்க்கடலையில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன. தினமும் சிறிது ஊற வைத்த வேர்க்கடலையை உட்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இதயத்தின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது.
எடையை பராமரிக்க உதவும்
வேர்க்கடலையில் கலோரிகள் இருந்தாலும், இவற்றில் புரோட்டீன், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவை உள்ளன. அதுவும் இந்த வேர்க்கடலையை ஊற வைத்து உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய திருப்தியை உணர வைக்கிறது. இதன் விளைவாக மற்ற உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்
வேர்க்கடலையில் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த வேர்க்கடலையை ஊற வைக்கும் போது, இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எளிதில் வெளியிடப்பட்டு, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.
இரத்த சர்க்கரை சீராகும்
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. அதுவும் வேர்க்கடலையை ஊற வைக்கும் போது, அந்த நார்ச்சத்து உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எப்படியெனில் நார்ச்சத்து க்ளுக்கோஸ் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிக்கான ஒரு சூப்பர் ஸ்நாக்ஸ் என்றால் அது ஊற வைத்த வேர்க்கடலை என்றே கூறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











