Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
நிம்மதியாக தூங்கணுமா? இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
இரவில் நாம் நன்றாக துங்காமல் போன் பார்த்துக் கொண்டிருப்பதும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் உங்கள் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து, நாள் முழுவதும் உங்களை மந்தமாக உட்கார வைக்கும்.
நமது நடத்தை முறை, வானிலை தாக்கம் போன்றவை நமது தூக்கத்தை பாதிக்கிறது. அதனால் இந்த பதிவில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.. அது உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை கொடுக்கும் ... வாங்க அது என்னென்ன? வழிமுறைகள் என்று தெரிந்துக் கொள்ளலாம்..

போதிய தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து, நாள் முழுவதும் உங்களை மந்தமாக உட்கார வைக்கும். நமது நடத்தை முறை, வானிலை தாக்கம் போன்றவை நமது தூக்கத்தை பாதிக்கிறது. அதனால் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
1. தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று தூங்க ஆரம்பிக்க வேண்டும்.. அப்போது தேவையில்லாததை பற்றி யோசிக்கக்கூடாது..
2. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக தூங்க வேண்டுமானால் தினமும் சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்று சரியான நேரத்தில் எழுந்திருத்தல். வெவ்வேறு நேரங்களில் தூங்க வேண்டாம். அப்படி செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. இரவில் சரியாக தூங்கவில்லை என்றால், பகலில் 30-45 நிமிடங்கள் ஓய்வாக இருக்கும்போது தூங்கலாம்.
3. இரவு உணவு சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது. சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது செரிமான மண்டலத்தை பலவீனப்படுத்தும். மேலும் வெறும் வயிற்றில் தூங்க வேண்டாம். தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவு சாப்பிடுங்கள். இரவு உணவில் எளிதில் ஜீரணமாகும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.. அதுவே உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..
4. டிவி பார்ப்பதும், கம்ப்யூட்டரில் வேலை செய்வதையும் நிறுத்தி விட்டு அறையில் வெளிச்சத்தைக் குறைத்து, கண்களில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் தூங்க உதவும். அல்லது நிதானமாக ஒரு நல்ல புத்தகத்தைப் படியுங்கள், தூக்கம் வரும். பலரின் நிம்மதியற்ற தூக்கம் புத்தகங்களை படிப்பதன் மூலம் சரி செய்யப்படுகிறது.
5. நல்ல தூக்கம் வர, வீட்டில் சத்தம் வரக்கூடாது. ஒலிகள் சரியான தூக்கத்தை ஏற்படுத்தாது. தூங்கும் முன் சிறிது ஓய்வெடுக்கவும். தூங்குவதற்கு 5 முதல் 6 மணி நேரத்திற்குள் காபி அல்லது டீ குடிக்க வேண்டாம். காஃபின் தூக்கத்தை கலைய வைக்கும்.. இதை குடித்தால் 10 முதல் 12 மணி நேரம் தூங்காமல் துக்கம் வராமலும் கஷ்ட்டப்படுவோம்.. அதனால் இரவில் காபி, டீ குடிக்காதீங்கக.. தூங்குவதற்கு முன், ஜூஸ் அல்லது அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். இது சிறுநீர் கழிக்க தூண்டுகிறது மற்றும் தூக்கத்தை தொந்தரவு செய்கிறது.
6. தூக்கமின்மையைத் தவிர்க்க, படுக்கைக்குச் செல்வதற்கு முன் மது அருந்த வேண்டாம். ஆல்கஹால் தூக்கத்திற்கு நல்லது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இதனுடன், நல்ல தூக்கம் குறைவது மட்டுமல்ல, மிகக் குறைவு. தூங்குவதற்கு முன் புகைபிடிக்க வேண்டாம். இதில் உள்ள நிகோடின் தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும். தூங்கச் செல்வதற்கு முன், சில யோகா தியானம் அல்லது லேசான சுவாசப் பயிற்சிகளைச் செய்யுங்கள். இது தசைகளை தளர்த்தி உடலையும் மனதையும் தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது. இந்த ஆரோக்கியமான தூக்க உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, நல்ல இரவு தூக்கத்தைப் பெறுங்கள். உங்கள் தூக்கமின்மையை போக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications