Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல இந்த சத்து கம்மியா இருக்கு-ன்னு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
Magnesium Deficiency Symptoms In Tamil: நமது உடலுறுப்புக்கள் சீராக செயல்பட வேண்டுமானால், உடலுக்கு ஒருசில சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட அத்தியாவசிய சத்துக்களுள் ஒன்று தான் மக்னீசியம்.
இந்த மக்னீசியம் நமது உடலில் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது. அதில் தசை மற்றும் நரம்பு செயல்பாடு, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த மக்னீசியம் சத்தின் குறைபாடு உடலில் ஏற்பட்டால், அதை ஹைப்போமக்னீமியா என்று அழைப்பர்.

நிறைய பேர் இந்த சத்தின் குறைபாட்டைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த சத்து குறைபாட்டை கவனிக்காமல் அசால்ட்டாக இருந்தால், அதன் விளைவாக கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகள் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் மக்னீசியம் உடலில் 300-க்கும் அதிகமான உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது.
அதுவும் இதயம் மற்றும் மூளை செயல்பாடுகளின் சீரான இயக்கத்திற்கும் இது மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த மக்னீசியம் சத்தை போதுமான அளவில் ஒருவர் தினமும் பெற வேண்டும். ஒருவரது உடலில் மக்னீசியம் குறைவாக இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியக்கூடும் என்பது குறித்து இப்போது காண்போம். மேலும் யாருக்கெல்லாம் இந்த சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்பதைக் காண்போம்.
1. தசைப்பிடிப்புகள்
மக்னீசியம் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்று தசைப்பிடிப்புகள். எனவே அடிக்கடி தசைப்பிடிப்புகள் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தசைகளின் பிடிப்புகளின்றி தளர்வாக இருக்க மக்னீசியம் அவசியம். இந்த மக்னீசியம் போதுமான அளவு இல்லாமல் இருந்தால், தசைகள் சுருங்கி பிடிப்புக்களை ஏற்படுத்தும். மேலும் அவ்வப்போது கால் பிடித்து இழுக்கும்.
2. உடல் சோர்வு
நாள்பட்ட உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனம் மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகளாகும். ஏனெனில் நமது உடலின் ஆற்றல் உற்பத்தியில் மக்னீசியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த சத்து குறைவாக இருக்கும் போது, மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். அதுவும் எவ்வளவு ஓய்வு எடுத்தாலும், இந்த உடல் சோர்வு நீடித்திருக்கும். இதன் மூலம் தினசரி செயல்பாடுகளை கூட செய்ய முடியாது.
3. வாந்தி மற்றும் குமட்டல்
மக்னீசியம் உடலில் குறைவாக இருந்தால், அதன் காரணமாக வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த வாந்தி, குமட்டல் போன்றவை செரிமான பிரச்சனைகளின் அறிகுறியாக இருப்பதாலும், பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொண்டு, புறக்கணிக்கக்கூடும். எனவே காரணமின்றி வாந்தி, குமட்டலை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
4. பசியின்மை
உங்களுக்கு வரவர பசி எடுப்பதில்லையா? பசி எடுக்காமலேயே உணவை உட்கொண்டு வருகிறீர்களா? மேலும் வழக்கத்தை விட மிகவும் குறைவாக உணவை உட்கொண்டு வருகிறீர்களா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதை அசால்ட்டாக எடுக்கும் போது, அது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.
5. நரம்பு குறைபாடு
நரம்புகளின் செயல்பாட்டில் மக்னீசியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உங்கள் கை கால்களில் திடீரென்று உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குத்துவது போன்று உணர்த்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
6. சீரற்ற இதயத்துடிப்பு
மக்னீசியம் இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த மக்னீசியம் குறைவாக இருக்கும் போது, அது ஒழுங்கற்ற இதயத்துடிப்பிற்கு வழிவகுக்கும். இதை கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அது ஆபத்தான இதய பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
7. மனநிலை மாற்றங்கள்
உங்கள் மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகிறதா? மேலும் எரிச்சல், பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறதா? அப்படியானால் மக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகையால் உங்களின் மனநிலையில் திடீரென்று மாற்றங்களை கண்டால், உடனே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
யாருக்கெல்லாம் மக்னீசியம் குறைபாடு ஏற்படலாம்?
மக்னீசியம் குறைபாடு பல்வேறு காரணங்களால் ஒருவரை பாதிக்கலாம்.
* அதில் மோசமான உணவுப்பழக்கம், அதிக மன அழுத்தம், அடிப்படை ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர இரைப்பை குடல் கோளாறுகள், சர்க்கரை நோயாளிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள் போன்றவர்களுக்கும் மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
* மேலும் விளையாட்டு வீரர்கள் வியர்வை வழியாக மக்னீசியத்தை இழக்கிறார்கள். மது அருந்துபவர்கள், நீண்ட காலமாக டையூரிக்குகளை எடுப்பவர்களுக்கும் மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
* கர்ப்பிணிப் பெண்கள், நாள்பட்ட மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications