Latest Updates
-
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க வாயில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க இரத்தத்தில் அளவுக்கு அதிகமா சர்க்கரை இருக்குனு அர்த்தமாம்...!
Diabetes signs in Tamil: நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்படி, உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நாள்பட்ட மருத்துவ நிலையின் பாதிப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நீரிழிவு நோயானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் வகைப்படுத்தப்படுகிறது, இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது வாய் ஆரோக்கியத்திலும் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்த அறிகுறிகள் உயர் இரத்த சர்க்கரையைக் குறிக்கலாம் அல்லது இதனால் ஏற்படும் சிக்கல்களின் விளைவாக இருக்கலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாய்வழி அறிகுறிகளை அனுபவிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், மேலும் இந்த அறிகுறிகளின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும். இரத்தத்தில் சர்க்கரை நோய் அதிகரிப்பதால் வாயில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
ஈறு பிரச்சினைகள்
நீரிழிவு ஈறு தொற்று மற்றும் பீரியண்டால்ட் நோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்த அறிகுறிகளில் வீக்கம், ஈறுகளில் இரத்தப்போக்கு, வாய் துர்நாற்றம் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் பல் இழப்பு ஆகியவை அடங்கும்.
வாய் உலர்ந்த போவது
நீரிழிவு உமிழ்நீர் உற்பத்தி குறைவதற்கு வழிவகுக்கும், இது வாயில் வறட்சியை ஏற்படுத்தும். வறண்ட வாய் பல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பற்களில் துவாரங்கள் மற்றும் விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
வாய்ப்புண்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாய்ப்புண் போன்ற பூஞ்சை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதன் விளைவாக வாயில் வெள்ளைத் திட்டுகள், தொண்டை புண் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
வாயில் எரிச்சல் உணர்வு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு வாயில், நாக்கில் அல்லது உதடுகளில் கடுமையான எரிச்சல் உணர்வு ஏற்படும். இது சில அரிதான நிகழ்வுகளிலேயே ஏற்படலாம்.
வாய்ப்புண் தாமதமாக குணமாகுவது
உங்களுக்கு வாய் புண்கள் அல்லது காயங்கள் இருந்தால், நீரிழிவு நோயுடன் தொடர்புடைய மோசமான இரத்த ஓட்டம் காரணமாக அவை குணமடைய அதிக நேரம் எடுக்கும்.
கேவிட்டி உருவாகும் ஆபத்து
நீரிழிவு நோயாளிகள் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை உயர் இரத்த சர்க்கரை ஊக்குவிப்பது காரணமாக பற்களில் துவாரங்களை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

