ஆண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா.. உங்க விந்தணு ஆரோக்கியமா இல்லை-ன்னு அர்த்தமாம்.. உங்ககிட்ட இருக்கா?

Unhealthy Sperm Symptoms In Tamil: கருத்தரிக்க முயலும் தம்பதிகள் தங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியம் மற்றும் கருமுட்டையின் தரம் குறித்து அவசியம் சிந்திக்க வேண்டும். ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலோ அல்லது விந்தணுக்கள் தரத்தில் குறைவாக இருந்தாலோ, கருத்தரிப்பதில் சிக்கல்களை உண்டாக்கும்.

தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் சில கெட்ட பழக்கவழக்கங்கள் போன்றவற்றால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியமும் தான் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் தற்போது நிறைய தம்பதிகள் கருத்தரிப்பதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

Signs And Symptoms of Unhealthy Sperm In Tamil

ஒருவேளை கருத்தரித்தும் விந்தணுக்கள் தரமானதாக இல்லாவிட்டால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. சரி, விந்தணுக்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் எப்படிப்பட்ட அறிகுறிகள் தெரியும், விந்தணுக்களை வலிமையாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது இக்கட்டுரையில் காண்போம்.

ஆரோக்கியமற்ற விந்தணுக்கள்

ஆரோக்கியமற்ற விந்தணுக்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகைகளை இப்போது காண்போம்.

விந்தணு எண்ணிக்கை குறைவு

ஒரு ஆணின் ஒரு மில்லிமீட்டர் விந்தணுவில் சுமார் 16 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்கள் இருந்தால், அந்த ஆண் குறைவான விந்தணுக்களைக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். ஒரு ஆண் குறைவான விந்தணுக்களைக் கொண்டிருந்தால், அது கருத்தரிப்பதை மிகவும் கடினமாக்கும். இருப்பினும் விந்தணுக்களின் எண்ணிக்கை உயர்த்த முயற்சித்தால், வெற்றிகரமாக துணையை கருத்தரிக்க வைக்கலாம்.

குறைவான விந்தணு இயக்கம்

விந்தணுக்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, விந்தணுக்களின் இயக்கம் குறைவாக இருந்தாலும், அது ஆரோக்கியமற்ற விந்தணுவைக் குறிக்கிறது. விந்தணுவின் இயக்கம் என்பது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் நீந்தி செல்லும் திறனைக் குறிக்கிறது. இந்த திறன் குறைவாக இருந்தால், அது கருத்தரிப்பதை கடினமாக்கிவிடும். ஏனெனில் விந்தணு கருமுட்டையை அடைந்தால் தான் கருத்தரிக்க முடியும். கருமுட்டையை அடைய விந்தணு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதற்கு விந்தணுவிற்கு அந்த திறன் குறையும் போது கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

விந்தணு அமைப்பு குறைபாடு

விந்தணுக்களின் அளவும், அதன் அமைப்பும் நல்ல நிலையில் இருந்தால், அந்த விந்தணு ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் விந்தணுக்கள் அசாதாரண வடிவத்தில் தலைகள் அல்லது வால்களைக் கொண்டிருந்தால், அது கருத்தரிப்பதில் சிரமத்தை உண்டாக்கிவிடும்.

டிஎன்ஏ சேதம்

விந்தணுவின் தலைப்பகுதியில் உள்ள டிஎன்ஏ சேதமடைந்திருந்தால், அது கருத்தரிப்பதை கடினமாக்கிவிடும். ஒருவேளை சேதமடைந்த விந்தணுவுடன் கருத்தரித்திருந்தால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆரோக்கியமற்ற விந்தணுக்களின் அறிகுறிகள்

விதைப்பையில் விரிவடைந்த அல்லது சுருண்ட நரம்புகள்

நரம்புகள் விரிவடைந்தோ அல்லது சுருண்டோ இருந்தால், அதை வெரிகோசெல் என்று அழைப்பர். இந்த வெரிகோசெல் மிகவும் பொதுவானது. இது ஆண்களிடையே 15% பேருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த வெரிகோசெல் பெரும்பாலும் நிமிர்ந்து நிற்கும் போது விதைப்பையில் தெரியலாம். வெரிகோசெல் விதைப்பையில் வெப்பநிலையை அதிகரித்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி டிஎன்ஏ உடைய வழிவகுக்கும். வெரிகோசெல் இருந்தால், அது விந்தணு உற்பத்தியை பாதிக்காது. ஆனால் அது ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

துர்நாற்றம் அல்லது நிறமாற்றத்துடன் விந்து வெளியேறுவது

விந்து வெளியேறும் போது, அது வெள்ளையாக இல்லாமல் நிறம் மாறி இருந்தாலோ அல்லது ஒருவித துர்நாற்றத்துடன் இருந்தாலோ, புரோஸ்டேட்டிஸ் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பிறப்புறுப்புக்களில் ஏற்படும் தொற்றுகள் பொதுவாக சிறுநீர் பாதை தொற்று அல்லது பாலியல் ரீதியான தொற்றாக இருக்கலாம். அதுவும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொற்றுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதித்து, கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

முந்தைய புரோஸ்டேட் பிரச்சனை

ஏற்கனவே புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனை இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தால், அது கருவுறுதலை பாதிக்கலாம். புற்றுநோய் சிகிச்சையில் பெரும்பாலும் கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க கதிர்வீச்சு அல்லது கீமோதெரபி ஆகியவை அடங்கும், இவை இரண்டும் ஆண் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கும்.

விந்து வெளியேறாமல் இருப்பது

ஒரு ஆண் உச்சக்கட்ட இன்பத்தில் இருக்கும் போது விந்து வெளியேறாமல் இருந்தால், அந்த ஆணின் விந்தணு ஆரோக்கியமற்று உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உச்சக்கட்ட இன்பத்தின் போது ஆணின் விந்து ஆண்குறியிலிருந்து வெளியே வருவதற்குப் பதிலாக சிறுநீர்ப்பையில் நுழையும். இவ்வாறு விந்தணுக்கள் சிறுநீர்ப்பையில் நுழைவதால் ஆரோக்கியத்திறகு எவ்வித தீங்கும் நேராது. ஆனால் விந்தணுக்கள் வெளியேறாமலேயே இருந்தால், அது ஆண் கருவுறுதல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

குறைவான பாலியல் ஆசை மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு

பாலியல் ஆசையானது வழக்கத்தை விட குறைவாக இருந்தால் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாட்டைக் கொண்டிருந்தால், அது உடலில் ஆண் ஹார்மோன்கள் இல்லாததன விளைவாக இருக்கலாம். ஒரு ஆணின் உடலில் ஆண் ஹார்மோன் அளவுகள் போதுமான அளவு அதிகமாக இல்லாவிட்டால், அது விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஆண்கள் சந்தித்தால், அந்த ஆண் ஆரோக்கியமற்ற விந்தணுக்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, February 6, 2025, 11:50 [IST]
Desktop Bottom Promotion