Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? இதுக்கு கம்மியா சாப்பிட்டா என்ன ஆபத்து வரும் தெரியுமா?
பழங்கள் நம் ஆரோக்கிய உணவின் ஒரு பகுதியாக அவசியம் இருக்க வேண்டுமென்று பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. நம் வீட்டின் பெரியவர்கள் முதல் ஊட்டச்சத்து நிபுணர்களை வரை அனைவரும் பழங்களை பரிந்துரைப்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலோர் பரிந்துரைக்கப்பட்ட அளவு பழங்களைப் பெறுவதில்லை. வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உணவில் பழங்கள் எவ்வளவு இருக்கிறதோ நீங்கள் அவ்வளவு ஆரோக்கியாமாக இருப்பீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை நீங்கள் போதுமான பழங்களை உட்கொள்ளாவிட்டால் உங்கள் உடலில் என்ன நடக்குமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் உடலில் நார்ச்சத்துக்கள் குறையலாம்
பழங்களில் நார்ச்சத்து மற்றும் குறிப்பாக அவற்றின் தோல்களில் நிரம்பியுள்ளன. நீங்கள் எப்போதும் இறைச்சி மற்றும் கொழுப்பை உண்பவராக இருந்தால், ஆப்பிள், கிவி மற்றும் பெர்ரி போன்ற புதிய பழங்களுடன் உங்கள் உணவை சமநிலைப்படுத்த முயற்சிக்கவும். மேலும், பழங்களில் பொதுவாக அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது, இதனால் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் உங்கள் உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது.
சருமம் மந்தமாக இருக்கும்
பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்கிறது. பழங்கள் முகப்பரு மற்றும் சிவத்தல் மட்டும் குறைப்பதுடன், சருமத்தில் உலர்ந்த புள்ளிகளை குறைக்கிறது. ஆனால் சரிவிகித உணவை உட்கொண்டால், தெளிவான மற்றும் மென்மையான சருமம் கிடைக்கும். ஆக்ஸிஜனேற்றத்தின் செயல்பாடு வயதாவதைத் தடுக்க உதவுகிறது, மேலும் சருமத்தில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம்
A, C மற்றும் K உள்ளிட்ட பெரும்பாலான வைட்டமின்கள் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற உணவுகளில் காணப்படுகின்றன. இதன் பொருள், மிளகுத்தூள், கிவி, முலாம்பழம், சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஆப்பிள்கள் ஆகியவற்றிலிருந்து உங்கள் ஊட்டச்சத்து அளவைப் பெறலாம். எனவே நீங்கள் போதுமான அளவு பழங்களை சாப்பிடவில்லை என்றால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கலாம், கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம், உங்கள் மூளை செல்களைக் குறைக்கலாம் மற்றும் சோர்வு ஏற்படலாம்.
நகங்கள் மற்றும் முடி பாதிக்கப்படலாம்
நம் உடலின் இந்த பாகங்களை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம், ஆனால் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் உடையக்கூடிய நகங்கள் மற்றும் தளர்வான முடிகள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் முடி மற்றும் நகங்கள் வளர போதுமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ மற்றும் ஈ, பயோட்டின், இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவதே இதற்குக் காரணம். இவை அனைத்தும் பழங்களில் நிரம்பியுள்ளன.
மனச்சோர்வு
சில பழங்கள், குறிப்பாக பெர்ரிகள் மனநிலையை அதிகரிக்கவும் உயர்த்தும் என்று கூறப்படுகின்றன. இது உண்மைதான், இந்த பழங்கள் மனச்சோர்வின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்
பழங்கள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை என்பதால், அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய், நீரிழிவு, அல்சைமர் நோய், புற்றுநோய் மற்றும் பல போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 கப் பழங்கள் சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் நீண்ட ஆயுளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.
கண்பார்வை மங்கும்
நல்ல கண்பார்வையை மேம்படுத்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டும் முக்கியம். வைட்டமின் ஈ, குறிப்பாக பழங்களில் போதுமான அளவு உள்ளது. நீங்கள் உங்கள் கண் பார்வையை சமரசம் செய்யும் அபாயத்தில் இருக்கலாம். நீங்கள் எவ்வளவு பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, உங்கள் கண் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

