Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2027 ஆம் ஆண்டில் மனிதர்களுக்கு நடக்கப்போகும் ஆபத்தான மாற்றம் என்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம்
சர்வாங்காசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் இதை செய்யக்கூடாது?
Sarvangasana Benefits In Tamil: யோகாசனங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும அற்புதமான ஒருவித உடற்பயிற்சியாகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பலவிதமான யோகாசனங்கள் உள்ளன. நாம் தினமும் ஒரு யோகாசனம் குறித்து பார்த்து வருகிறோம். இன்று நாம் காணவிருப்பது சர்வாங்காசனம் குறித்து தான்.
சர்வாங்காசனத்தை முதன்முதலாக செய்யும் போது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ஆசனமானது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உங்களுக்கு சர்வாங்காசனம் எப்படி செய்வது, அதன் நன்மைகள் என்ன, யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

சர்வாங்காசனம் செய்முறை
* முதலில் தரையில் மல்லாந்து படித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்கள் இரண்டையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
* பின்பு முதுகையும், பிட்டத்தையும் உயர்த்தி, கால்களை தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
* பிறகு இரண்டு முழங்கைகளையும் தரையில் ஊன்றி, உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து,கால்கள் மற்றும் உடல் ஒரே நேராக இருக்கும் படி செய்ய வேண்டும்.
* இந்நிலையில் கண்கள் கால் பெருவிரலைப் பார்க்க வேண்டும்.
* இந்த நிலையில் 2 நிமிடம் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
சர்வாங்காசனம் நன்மைகள்
சர்வாங்காசனத்தை தினமும் செய்து வந்தால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவை:
* இந்த ஆசனம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி புத்துயிர் அளிக்கும்.
* இந்த ஆசனமானது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
* நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.
* அட்ரீனல் சுரப்பிகள், கருப்பைகள் மற்றும் விதைப்பைகளை வலுவாக்கும்.
* 2 மற்றும் 3 ஆம் நிலை ஆஸ்துமாவிற்கு நன்மை அளிக்கும்.
* அடிவயிற்று தசைகள் வலுவாகும்.
* இதயத்திற்கு நல்லது.
* தலைவலி, உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு நன்மையளிக்கும்.
* தூக்க பிரச்சனைகளை சரிசெய்யும்.
* மலச்சிக்கல் பிரச்சனைப் போக்கும்.
யாரெல்லாம் சர்வாங்காசனம் செய்யக்கூடாது?
சர்வாங்காசனம் செய்யும் போது ஒருசில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சர்வாங்காசனம் செய்யக்கூடாது.
* மாதவிடாய் காலத்தில் சர்வாங்காசனத்தை செய்யக்கூடாது.
* தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சர்வாங்காசனத்தை செய்யக்கூடாது.
* கடுமையான தைராய்டு பிரச்சனை, நாள்பட்ட கழுத்து பிரச்சனைகள், தோள்பட்டை காயங்கள் மற்றும் ரெட்டினா பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சர்வாங்காசனத்தை செய்யக்கூடாது.
* இதய பிரச்சனைகள், காது பிரச்சனைகள், ஸ்லிப் டிஸ்க், ஸ்பான்டிலிடிஸ் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சர்வாங்காசனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications