Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
தினமும் ஒரு செவ்வாழையை இப்படி சாப்பிட்டால் உடல் எடை வேகமா குறையும் தெரியுமா?
Red Banana For Weight Loss In Tamil: பொதுவாக வாழைப்பழங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்று தான் பலரும் நினைக்கிறோம். ஆனால் வாழைப்பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான நன்மைகளை உடலுக்கு வழங்கும். அந்த வகையில் தற்போது நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டும் வருகிறார்கள். அதே வேளையில் வாழைப்பழத்தை தவிர்த்து வருகிறார்கள். பொதுவாக வாழைப்பழங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். குறிப்பாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.

நீங்களும் அப்படி உடல் எடையைக் குறைக்க முயற்சித்து வருகிறீர்களா? எடையைக் குறைப்பதற்காக உங்களுக்கு பிடித்த வாழைப்பழத்தை சாப்பிடாமல் உள்ளீர்களா? அப்படியானால் இனிமேல் கவலைப்படாமல் செவ்வாழையை வாங்கி சாப்பிடுங்கள். செவ்வாழையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன. எனவே எடையை குறைக்க நினைப்போருக்கு செவ்வாழை மிகச்சிறந்த பழமாக விளங்குகிறது.
அதுவும் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. இப்போது தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைக் காண்போம்.
செவ்வாழையில் உள்ள சத்துக்கள்
100 கிராம் செவ்வாழை பழத்தில் 90 கலோரிகளும், 1.1 கிராம் புரோட்டீனும், 0.3 கிராம் கொழுப்பும், 22.8 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், 350 மிகி பொட்டாசியமும், 2.6 மிகி நார்ச்சத்தும், 13.6 மிகி வைட்டமின் பி9 சத்தும், 5 மிகி கால்சியமும், 1.3 மிகி சோடியமும் மற்றும் 22 மிகி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இவ்வளவு சத்துக்களைக் கொண்ட செவ்வாழையை தினமும் உட்கொண்டு வந்தால், உடலினுள் பல அற்புதமான மாற்றங்களைக் காணலாம்.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
செவ்வாழையில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த நாளங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தி யமேம்படுத்த பெரிதும் உதவி புரிகின்றன. வைட்டமின் பி என்பது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான கொலஜனை உற்பத்தி செய்யவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கண்களுக்கு நல்லது
செவ்வாழையில் கரோட்டினாய்டுகள் உள்ளன. அதனால் தான் செவ்வாழையின் நிறம் சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த கரோட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. லுடின் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற கரோட்டினாய்டுகள் நிறைந்த செவ்வாழையை உட்கொண்டால் வயதான காலத்தில் ஏற்படும் மாகுலர் சிதைவைத் தடுக்கும். எனவே கண் பார்வை சிறப்பாக இருக்க விரும்பினால், செவ்வாழையை தினமும் உட்கொள்ளுங்கள்.
ஆற்றல் சிறப்பாக இருக்கும்
எப்போதும் உடலில் ஆற்றல் இல்லாததைப் போன்று உணர்கிறீர்களா? அப்படியானால் செவ்வாழையை தினமும் காலை உணவின் போது உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள இயற்சை சர்க்கரைகளான ப்ருக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்றவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். முக்கியமாக இந்த செவ்வாழையை உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் உட்கொண்டால், ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
எடை இழப்புக்கு உதவும்
அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க செவ்வாழை பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் மற்றும் அத்தியாவசிய சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. அத்துடன் செவ்வாழையில் கொழுப்புக்கள் குறைவு மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளதால், இவற்றை உட்கொள்ளும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது.
கூடுதலாக, செவ்வாழையில் உள்ள நார்ச்சத்து உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இந்த செவ்வாழையை தினமும் காலையில் உட்கொண்டு வருவதன் மூலம், எடையை சிரமமின்றி குறைக்கலாம்.
மனநிலை சிறப்பாக இருக்கும்
செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6 ட்ரிப்டோபேனை செரடோனினாக மாற்ற உதவுகிறது. செரடோனின் என்பது நல்ல மனநிலையை பெற உதவும் ஒருவித நல்ல ஹார்மோனாகும். அதிக மன கவலை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது செவ்வாழையை உட்கொண்டால், விரைவில் அதிலிருந்து விடுபடலாம்.
செவ்வாழையை கோடையில் சாப்பிடலாமா?
தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செவ்வாழையை தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, கோடையில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications