Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறக்கூடாதா? அப்ப இந்த பானங்களைக் குடிங்க..
Ramadan 2023: இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் மணமணக்கும் பிரியாணி செய்து, அவற்றை தாங்கள் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அந்த பிரியாணியை பகிர்ந்து உண்பார்கள். பெரும்பாலும் மட்டன் பிரியாணியை தான் ரம்ஜான் அன்று செய்வார்கள்.
மட்டனில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பிரியாணியை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் மட்டன் பிரியாணி சாப்பிட்டு கொலஸ்ட்ரால் அதிகமாகக்கூடாது என்றால், பிரியாணி சாப்பிட்டதும் ஒருசில பானங்களைக் குடிப்பதன் மூலம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

நீங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் அந்த பானங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க பிரியாணி சாப்பிட்ட பின் குடிக்க வேண்டிய சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குடித்து கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
க்ரீன் டீ
க்ரீன் டீ குடிப்பது, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இது தான் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி, ஒருவரை இலகுவாகவும், சுறுசுறுப்பாகவும் உணர வைக்கிறது. எனவே பிரியாணி சாப்பிட்டு கொலஸ்ட்ரால் உடலில் சேராக்கூடாதெனில், க்ரீன் டீயைக் குடிக்கலாம்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. மேலும் எலுமிச்சை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். அப்படிப்பட்ட எலுமிச்சையின் சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, கொலஸ்ட்ரால் சேராமலும் தடுக்கும். முக்கியமாக இந்த பானத்தை பிரியாணி சாப்பிட்ட பின் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமானமும் சிறப்பாக நடைபெறும்.
மல்லி நீர்
கொத்தமல்லி விதைகளுக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை மேம்படுத்தும் சக்தி உள்ளது. எனவே பிரியாணி சாப்பிட்டு உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க கூடாது என்று நினைத்தால், ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து, பின் குடிக்க வேண்டும். இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து வெளியேறிவிடும்.
நெல்லி ஜூஸ்
நெல்லிக்காய் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கணிசமாக குறைக்கக்கூடியது. இந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனையே வராது. அப்படிப்பட்ட நெல்லிக்காயை பிரியாணி சாப்பிட்ட பின் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
மஞ்சள் நீர்
மஞ்சள் இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மஞ்சள் தூளை சுடுநீரில் கலந்து பிரியாணி சாப்பிட்ட பின் குடித்து வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம். இந்த மஞ்சள் நீர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கான சிறப்பான பானம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிர் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மிகவும் அற்புதமான பொருள். இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, பிரியாணி சாப்பிட்ட பின் குடித்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
சுடுநீர்
பிரியாணி சாப்பிட்டு உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் சேராமல் இருக்க வேண்டுமானால், பிரியாணி சாப்பிட்டதும் ஒரு டம்ளர் சூடான நீரைக் குடியுங்கள். இதனால் சுடுநீரானது உடலில் தேங்கும் தன்மை கொண்ட கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் தேங்க விடாமல் வெளியேற்றும். மேலும் சுடுநீரானது இரத்த ஓட்டத்தை உடலில் அதிகரிக்கும். எனவே வேறு எதையும் குடிக்க விரும்பாதவர்கள், ஒரு டம்ளர் கொதிக்கும் சுடுநீரைக் குடித்தாலே போதுமானது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


