Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
சிகரெட்டால் சேதமடைந்த நுரையீரலை சரிசெய்யணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
Lung Repair Foods In Tamil: முன்பெல்லாம் ஆண்கள் தான் சிகரெட்டை அதிகம் பிடித்தார்கள். ஆனால் தற்போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக சிகரெட் பழக்கத்தை கொண்டுள்ளனர். சொல்லப்போனால் இது ஒரு ஃபேஷனாகிவிட்டது. ஆனால் சிகரெட் பிடிப்பவர்களை கவனித்தால், அதுவும் எப்போது அவர்கள் சிகரெட்டை பிடிக்கிறார்கள் என்று பார்த்தால், அது டென்சனாக இருக்கும் போது அல்லது ஒரு விஷயத்திற்கு தீர்வு காண யோசிக்கும் போதாகவே இருக்கும்.
ஆனால் சிகரெட் ஒரு போதை. இந்த சிகரெட்டிற்கு அடிமையானவர்கள் அந்த சிகரெட்டை பிடிக்க ஏதாவது ஒரு காரணத்தை கூறத் தான் செய்வார்கள். இப்படி அடிக்கடி அல்லது அதிகமாக சிகரெட்டை பிடித்தால் அது உடலுக்கு கேடு. முக்கியமாக சிகரெட்டால் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் தான். அதனால் தான் சிகரெட் பிடிப்பவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகம் வருகிறது.

நுரையீரல் புற்றுநோய் வந்துவிட்டால், அதனால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் மிகுந்த வேதனையை சந்திக்க நேரிடும். இதை நீங்கள் அனுபவிக்கக்கூடாதெனில், முதலில் சிகரெட்டை நிறுத்துங்கள். சிகரெட்டை நிறுத்தினாலே, நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். இருப்பினும் அத்துடன் ஒருசில உணவுகளை உட்கொள்ளும் போது சிகரெட்டால் சேதமடைந்த நுரையீரலை விரைவில் சரிசெய்யலாம்.
ஆஸ்துமா, காசநோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் சிஓபிடி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நுரையீரல் நிபுணரான டாக்டர் சோனியா கோயல் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிகரெட்டால் நுரையீரலில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய உதவும் 5 விதமான உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுவது முக்கியமான ஒன்றாகும். அதே வேளையில் ஒருசில உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, அது விரைவில் நுரையீரலை மீண்டு கொண்டு வர உதவும்" என்று கூறினார்.
"சிகரெட் பழக்கத்தை கைவிட நினைத்தால், சிகரெட்டை கைவிடுவதோடு, சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். இப்படி உணவுடன் உடற்பயிற்சியை சேர்த்து செய்யும் போது, நுரையீரல் விரைவில் குணமடையும்." என்று கூறினார்.
1. ப்ராக்கோலி, காலிஃப்ளவர்
டாக்டர் கோயலின் கூற்றுப்படி, சிகரெட்டால் சேதமடைந்த நுரையீரலை சரிசெய்ய ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் சல்ஃபோராபேன் உள்ளது. இது நுரையீரலில் உள்ள நச்சு நக்கும் நொதிகளைத் தூண்டுகிறது. மேலும் இது புற்றுநோய் செல்களை வெளியேற்ற உதவுகிறது.
2. பீட்ரூட் மற்றும் மாதுளை
சிகரெட் பழக்கத்தை கைவிட்டால், பீட்ரூட், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துகிறது.
3. க்ரீன் டீ
க்ரீன் டீயில் கேட்டசின்கள் உள்ளன. இவை நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, மூளைக்கும் நல்லது மற்றும் எடை இழப்புக்கும் உதவுகின்றன. மேலும் இது நுரையீரல் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ன. அதோடு இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கின்றன. எனவே க்ரீன் டீயை தினமும் 2 கப் குடிக்கும் பழக்கத்தைக் கொள்வது நல்லது.
4. ஆப்பிள்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
ஆப்பிளில் க்யூயர்சிடின் என்னும் பொருளும் மற்றும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளன. எனவே இந்த பழங்களை சிகரெட்டை நிறுத்தியவர்கள் உட்கொள்ளும் போது, அதில் உள்ள உட்பொருட்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து நுரையீரலை பாதுகாப்பதோடு, நுரையீரலின் செயல்பட்டை முன்பை விட சிறப்பாக மேம்படுத்தும் என்று டாக்டர் கூறினார்.
5. மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் அதிகம் உள்ளது. அதுவே மஞ்சளுக்கு மஞ்சள் நிறத்தை அளிக்கின்றன. இது தவிர இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸினேற்ற பண்புகள் உள்ளன. இந்த மஞ்சளை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, சுபாசப் பாதையில் உள்ள நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நுரையீரலில் உள்ள சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய உதவுகிறது என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டிருந்தால், உங்களின் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்களின் உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள் போதும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
