Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
உடலில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடலில் புரோட்டீன் கம்மியா இருக்குன்னு அர்த்தம்.. அசால்ட்டா இருக்காதீங்க
Protein Deficiency Symptoms In Tamil: உடலுக்கு புரோட்டீன் சத்து மிகவும் இன்றியமையாததாகும். ஏனெனில் புரோட்டீன் உடலில் உள்ள உறுப்புக்கள், திசுக்கள், தசைகள் மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இது தவிர இச்சத்து உடலின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி, புரோட்டீன்களானது அமினோ அமிலங்களால் ஆன ஆற்றல் மூலமாகும். இந்த புரோட்டீன்கள் நாம் உண்ணும் பல்வேறு உணவுகளில் உள்ளன. எனவே இந்த வகை சத்தின் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் அரிது. ஆனால் நிறைய பேர் இந்த புரோட்டீன் குறைபாட்டின் அபாயத்தில் உள்ளனர்.

புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால், அதன் விளைவாக உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, உடலில் சட்டென்று ஒரு பெரிய மாற்றத்தைக் காண நேரிடும். புள்ளி விவரங்களின் படி, உலகளவில் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த புரோட்டீன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எப்போது ஒருவர் போதுமான புரோட்டீனை எடுக்காமல் உள்ளாரோ, அவருக்கு இந்த பற்றாக்குறை ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. இப்போது புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியத் தொடங்கும் என்பதைக் காண்போம்.
எடிமா
எடிமா என்பது நீர்த்தேக்கத்தினால் உடலில் ஏற்படும் வீக்கமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, இது குறைவான மனித சீரம் ஆல்புமின் காரணமாக ஏற்படுகிறது. ஆல்புமின் தான் ஆன்கோடிக் அழுத்தத்தைப் பராமரிக்கிறது. இது இரத்த ஓட்டத்தில் திரவத்தை ஈர்க்கும் சக்தியாகும்.
உடலில் புரோட்டீன் மிகவும் குறைவாக இருந்தால், அது குறைவான ஆன்கோடிக் அழுத்தத்திற்கு வழிவகுத்து, திசுக்களில் திரவங்களை தேங்கச் செய்து, வீக்கத்தை உண்டாக்கும். எனவே இப்படி உடலில் திடீர் வீக்கத்தை கண்டால், அதுவும் உடலின் எந்த பகுதியில் இம்மாதிரியான வீக்கத்தை காரணமின்றி அனுபவித்தால், புரோட்டீன் குறைபாடு இருக்க நிறைய வாய்ப்புள்ளது.
கொழுப்பு கல்லீரல்
கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் தான் கொழுப்பு கல்லீரல் ஏற்படும். அதே சமயம் உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டாலும், கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் தேங்கத் தொடங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கொழுப்பு கல்லீரலை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக உயிரை இழக்கும் அபாயம் அதிகரிக்கும். எனவே கவனமாக இருங்கள்.
தசை இழப்பு
ஒருவர் தினமும் போதுமான அளவில் புரோட்டீனை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவாக உடலானது தேவையான புரோட்டீனை எலும்பு தசைகளில் இருந்து எடுத்து, முக்கியமான திசுக்கள் மற்றும் உடலின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தத் தொடங்கும். இதன் விளைவாக தசை இழப்பு ஏற்பட்டு, ஒருவர் ஒல்லியான தோற்றத்தை பெறக்கூடும். பல ஆய்வுகளில் புரோட்டீனை அதிகம் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் ஏற்படும் தசை சிதைவைக் குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளன.
எலும்பு முறிவு அல்லது பலவீனமான எலும்புகள்
உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், எலும்புகள் பலவீனமாகி, எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அதுவும் மாதவிடாய் நின்ற பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புரோட்டீனை அதிகம் உட்கொள்வது இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன் தொடர்புடையது தெரிய வந்துள்ளது. எனவே அடிக்கடி எலும்பு வலிகளையோ அல்லது எலும்பு முறிவையோ சந்தித்தால், உடலில் புரோட்டீன் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் புரோட்டீனை அதிகம் உட்கொள்ளுங்கள்.
அதிக பசியுணர்வு
பசி எடுக்காமல் இருப்பது தீவிரமான புரோட்டீன் குறைபாட்டின் அறிகுறிகளுள் ஒன்றாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பசியுணர்வு ஏற்படுவது லேசான புரோட்டீன் குறைபாட்டின் அறிகுறியாகவும் உள்ளன. அதாவது உடலில் போதுமான அளவு புரோட்டீன் இல்லாவிட்டால், உடலானது பசியுணர்வை அதிகரித்து புரோட்டீனை பெற முயற்சிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி அதிகமாக உணவுகளை உட்கொண்டால், அதன் விளைவாக அதிக கலோரிகளை எடுக்க நேரிட்டு, உடல் பருமனாகும் வாய்ப்புள்ளது. ஆகவே வழக்கத்திற்கு மாறாக அதிக பசியுணர்வை அனுபவித்தால், புரோட்டீன் உடலில் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீனை எடுக்க வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலுக்கு ஏற்ப புரோட்டீன் தேவை இருக்கும். அதுவும் இது ஒருவரது உடல் எடை, உடல் செயல்பாடு, வயது உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது. இருப்பினும் தினசரி எடுக்க வேண்டிய அளவு என்றால், ஒருவரது ஒவ்வொரு பவுண்ட் உடல் எடைக்கும் 0.4 கிராம் புரோட்டீன் எடுக்க வேண்டும். இது பெரும்பாலானோருக்கு போதுமானதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
புரோட்டீன் குறைபாட்டை போக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
புரோட்டீன் குறைபாட்டை கொண்டவர்கள் அதிலிருந்து விரைவில் மீள சிக்கன், மீன், தயிர், சீஸ், முட்டை, பச்சை பட்டாணி, பருப்பு வகைகள், கொண்டைக்கடலை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். இது தவிர பாதாம், திணை, சியா விதைகள், பால் பொருட்கள், வால்நட்ஸ், வேர்க்கடலை, சூரிய காந்தி விதைகள் போன்றவற்றிலும் புரோட்டீன் அதிகம் உள்ளன. எனவே இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், புரோட்டீன் குறைபாட்டில் இருந்து விரைவில் விடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications