Latest Updates
-
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பாலில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Health Benefits Of Pepper Milk In Tamil: இந்திய சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டுள்ளன. அதில் காரத்தன்மை கொண்ட ஒரு மசாலா பொருள் தான் மிளகு.
இந்த மிளகு இயற்கை மருத்துவத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான மிளகு விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், நார்ச்ச்தது, மாங்கனீசு போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன.

நம் முன்னோர்கள் மிளகை சளி, இருமல் பிடித்திருக்கும் வேளைகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். இது தவிர மிளகு உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இப்படிப்பட்ட மிளகை பொடி செய்து, வெதுவெதுப்பான பாலுடன் கலந்து குடித்து வந்தால், உடலில் பல்வேறு அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? கீழே மிளகு பாலைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் எடை குறையும்
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் மிளகு பாலைக் குடித்து வருவது நல்லது. மிளகு விதைகளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலின் மெட்டபாலிசம் சிறப்பான அளவில் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் உடல் எடையைக் குறைக்க மிளகு பாலைக் குடிக்க நினைத்தால், கொழுப்பு குறைவான பாலில் மிளகுத் தூளை கலந்து குடிக்க வேண்டும்.
செரிமானம் சீராகும்
செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு மிளகு பால் மிகவும் நல்லது. ஏனெனில் மிளகுப் பால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு காரணம் மிளகில் உள்ள நார்ச்சத்து தான். ஆகவே அஜீரண பிரச்சனைகளை கொண்டவர்கள் தினமும் மிளகு பாலைக் குடித்து வந்தால், செரிமானம் சீராகும்.
சளி, இருமல் சரியாகும்
தற்போது காலநிலை அவ்வப்போது மாறுவதால், சளி, இருமல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் மிளகுப் பாலை குடித்து வந்தால், சுவாசப் பாதையில் உள்ள சளி இளகி வெளியேறி, விரைவில் சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எலும்புகள் வலுவடையும்
பால் குடித்தால் எலும்புகள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் பாலுடன் மிளகுத் தூளை கலந்து குடித்து வந்தால், அது எலும்புகளை வலுவாக்க உதவி புரியும். குறிப்பாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு பாலை குடித்து வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணத்தைப் பெறலாம்.
உடல் பலவீனம்
நீங்கள் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? பலவீனமாக இருக்கும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நினைத்தால், மிளகுத் தூள் கலந்த பாலைக் குடியுங்கள். அதுவும் இந்த பாலை காலையில் குடித்தால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
