Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
Oropouche Virus: பிரேசிலில் 2 மரணத்தை ஏற்படுத்திய ஓராபவுச் வைரஸ்: இது எப்படி பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன?
Oropouche Virus: கடந்த சில ஆண்டுகளாக உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான வைரஸ்கள் மக்களிடையே பரவி, அவற்றில் சில ஏராளமான உயிர்களைப் பறித்துள்ளன. அந்த வகையில் பிரேசிலில் இதுவரை நாம் கேட்டிராத ஒரு புதிய வகை ஓரோபவுச் வைரஸ் (Oropouche Virus) தொற்றினால் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஓரோபவுச் வைரஸ் மிகவும் அரிய வகை வைரஸ். இந்த வைரஸ் தொற்றினால் பிரேசிலில் முதல்முறையாக இறப்பு பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஓரோபவுச் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருமே 30 வயதிற்குட்பட்டவர்கள். அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருமே டெங்கு வைரஸ் தொற்றின் அறிகுறிகளைப் போன்றே கொண்டிருந்தனர். இதனால் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆரம்பத்தில் டெங்கு இருப்பதாக குழப்பமடைந்திருக்க வாய்ப்புள்ளது. இப்போது இந்த ஓரோபவுச் வைரஸ் என்றால் என்ன? இது எப்படி பரவுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

ஓரோபவுச் வைரஸ் என்றால் என்ன?
ஓரோபவுச் வைரஸ் முதன்முதலாக 1955 ஆம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவக்கூடியது என்றாலும், மிட்ஜ்கள் மூலமாகவும் பரவுகிறது. ஆனால் இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை என்று இத்தியாவிய தொற்றுநோய் ஆய்வாளர் கூறுகிறார். அதாவர் இந்த வைரஸ் ஒரு தொற்றுநோய் அல்ல மற்றும் இது வைரஸ் உள்ள இடங்களுக்கு செல்லும் நபருக்கு சென்றிருந்தாலும், அந்நபரின் மூலம் வேறு எங்கும் பரவாது.
ஆனால் இந்த வைரஸால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டால், அந்த வைரஸ் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் பரவக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதுக்குறித்து ஆய்வும் செய்து வருகிறார்கள்.
ஓரோபவுச் வைரஸ் இதுவரை எங்கெல்லாம் பரவியுள்ளது?
ஓரோபவுச் வைரஸானது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதவும் பிரேசிலின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் பிரேசிலில் 7,236 இந்த வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த வைரஸ் பிரேசில், பெரு, பொலிவியா, கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளில் சுமார் 7,000-க்கும் அதிகமான ஓரோபவுச் வழக்குகள் பதிவாகியிருப்பதாக பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் (PAHO) தெரிவித்துள்ளது.
ஓரோபவுச் வைரஸ் தொற்றின் அறிகுறிகள்
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் படி, ஓரோபவுச் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது காய்ச்சல், தசைவலி, மூட்டு வலி, தலைவலி, வாந்தி, குமட்டல், குளிர், ஒளி உணர்திறன் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். இந்த அறிகுறிகளானது டெங்குவின் அறிகுறிகளோடு ஒத்தது. இன்னும் தீவிரமான நிலையில் இது மூளைக்காய்ச்சலை உண்டாக்கி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம். ஆனால் இந்த வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சைகளும், தடுப்பூசிகளும் இல்லை.
ஓரோபவுச் வைரஸ் தொற்றை தடுப்பது எப்படி?
ஓரோபவுச் வைரஸ் தொற்று கொசுக்கள் மூலம் பரவுவதால், கொசுக்கள் கடிக்காமல் நம்மை காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கைகள், கால்கள் வெளியே தெரியாத வகையில் ஆடைகளை அணிய வேண்டும். கொசுக்கள் வீட்டினுள் நுழையாமல் இருக்க கொசு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தூங்கும் போது கொசுவலைகளை கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்.
ஓரோபவுச் வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு பரவாமல் இருக்கலாம். ஆனால் கொசுக்களால் பரவும் என்பதாலும், தற்போது கொசுக்கள் அதிகம் கடிக்கும் காலம் என்பதாலும், கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க, கொசுக்களிடம் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
