Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
Oil Pulling: தினமும் காலையில் நல்லெண்ணெய் கொண்டு 15 நிமிடம் ஆயில் புல்லிங் செய்வதால் பெறும் நன்மைகள்!
Oil Pulling Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு பழக்கங்கள் நம் முன்னோர்களால் பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வந்தது. அதில் ஒன்று தான் ஆயில் புல்லிங். இந்த ஆயில் புல்லிங் செயல்முறையில் வாயில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்யும் போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படுகிறது. இந்த செயல்முறையினால் வாயின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் சுத்தமாகவும் இருக்கும்.
இந்த ஆயில் புல்லிங் ஆயுர்வேதத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. நிறைய பல் மருத்துவர்கள் பல் பிரச்சனைகளை சந்திக்கும் நோயாளிகளுக்கு இந்த ஆயில் புல்லிங் முறையை அறிவுறுத்துகிறார்கள். வாயில் எண்ணெயை ஊற்றி கொப்பளிக்கும் போது, ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஆயில் புல்லிங் செய்வதால் ஈறுகள் மற்றும் வாயில் உள்ள புண்களும் விரைவில் குணமாகின்றன.

ஆயில் புல்லிங் செய்வதற்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்?
பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் ஆயில் புல்லிங்கின் போது, பல்வேறு எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி ஆயில் புல்லிங்கிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களானது ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது. ஆயில் புல்லிங் செய்வதற்கு பின்வரும் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவை:
* தேங்காய் எண்ணெய்
* நல்லெண்ணெய்
* ஆலிவ் ஆயில்
* கடலை எண்ணெய்
ஆனால் இந்த எண்ணெய்களுள் தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் தான் பெரும்பாலானோரால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே உங்களுக்கு எந்த எண்ணெய் பிடித்துள்ளதோ, அந்த எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்யுங்கள்.
ஆயில் புல்லிங் நன்மைகள்
1. நச்சுக்கள் வெளியேறும்
தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் முக்கியமான நன்மை, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எப்படியெனில் வாயில் எண்ணெயை ஊற்றி, எச்சிலுடன் எண்ணெயை சேர்த்து கொப்பளிக்கம் போது, நம் உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது. பல்வேறு தீவிரமான கூறுகள் உணவின் மூலம் நம் உடலுக்குள் நுழைகின்றன. ஆனால் ஆயில் புல்லிங் செய்யும் போது, அந்த கூறுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
2. ஈறு நோய்களைத் தடுக்கும்
தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் ஆன்டி-பாக்டிரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இவ்விரு எண்ணெய்களுள் ஒன்றினைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்யும் போது, வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஆயில் புல்லிங் பல்வேறு ஈறு நோய்கள் அல்லது தொற்றுநோய்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை சரிசெய்கிறது.
3. வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்
தற்போது நிறைய பேர் வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்ற பிரச்சனையானது ஒருவரது தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. ஆனால் ஆயில் புல்லிங்கை செய்யும் போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டு, வாய் துர்நாற்றம் தடுக்கப்படுவதோடு, பற்களும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். அதுவும் தினமும் காலையில் தவறாமல் ஆயில் புல்லிங் செய்து வந்தால், 2 நாட்களிலேயே ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. சொத்தை பற்கள் தடுக்கப்படும்
பற்களின் இடுக்குகளில் உணவுத் துகள்கள் அதிக நேரம் சிக்கியிருந்தால், அவை பற்களில் துவாரங்கள் மற்றும் பல் சிதைவுக்கு வழிவகுக்கும். ஆனால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது பற்களில் குழி மற்றும் பல் சிதைவைத் தடுக்கும்.
5. வாய் ஆரோக்கியம் மேம்படும்
மேலே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளைத் தவிர, ஆயில் புல்லிங் பற்கள், ஈறுகள் மற்றும் தாடைகளை வலுவாக்குகின்றன. முக்கியமாக வாய் வறட்சி, உதடு வறட்சி, தொண்டை வறட்சி போன்றவற்றைத் தடுக்கிறது. அதோடு ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதையும் தடுக்கிறது.
ஆயில் புல்லிங்கின் பிற நன்மைகள்
ஆயில் புல்லிங் வெறும் வாய் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது, உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது, தூக்கமின்மையை தடுக்கிறது மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.
எனவே தினமும் ஆயில் புல்லிங் செய்யுங்கள். வாய் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications