Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொடிய புதிய மெர்ஸ் வகை கொரோனா.. இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவும்?
New MERS Coronavirus: 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பலவிதமாக உருமாற்றங்கள் அடைந்து கோவிட்-19 என்று பெயர் பெற்றதோடு, உலகின் பல நாடுகளிலும் பரவி ஏராளமானோரின் உயிரைப் பறித்து பேரழிவை ஏற்படுத்தியது.
தற்போதைய கோவிட் தொற்றின் எண்ணிக்கையை பார்க்கும் போது, கோவிட் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று நாம் நினைக்கலாம். ஆனால் இன்னும் இந்த கோவிட் தொற்று உலகின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பரவிக் கொண்டு தான் உள்ளது.

சமீபத்தில் கூட உலக சுகாதார அமைப்பு அபுதாபியை சேர்ந்த 28 வயதான ஒருவருக்கு மிகவும் கொடிய மற்றும் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான மெர்ஸ் வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
ஆரம்ப கால அறிக்கைகளின் படி, மெர்ஸ் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு கொண்ட 108 பேரை நகர சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் இதுவரை இவர்கள் யாரிடமும் மெர்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அறிக்கைகளின் படி, உலக சுகாதார அமைப்பு இதுவரை சுமார் 2,605 பேர் மெர்ஸ் வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 936 பேர் இத்தொற்றினால் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்போது இந்த புதிய மெர்ஸ் வகை கொரோனா வைரஸைப் பற்றியும், அதன் அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் இதுவும் கோவிட்-19 போன்றே பேரழிவை ஏற்படுத்துமா என்பதை பற்றியும் காண்போம்.
எந்த நாடுகளில் எல்லாம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் மெர்ஸ்-Cov வைரஸ் தொற்றின் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வைரஸ் இதுவரை அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான் இஸ்லாமிய குடியரசு, இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா குடியரசு, சவூதி அரேபியா, தாய்லாந்து, துனிசியா, துருக்கி, ஐக்கிய அமெரிக்கா, எமிரேட்ஸ், ஏமன் போன்ற 27-க்கும் அதிகமான நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெர்ஸ் வைரஸ் எப்படி பரவுகிறது?
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மெர்ஸ் கொரோனா வைரஸ் ஒரு சுவாச வைரஸ் நோயாகும். இது MERS-CoV என்னும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது ஒரு ஜூனோடிக் வைரஸ். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளை தொற்றக்கூடியது.
உலக சுகாதார அமைப்பின் படி, பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுடன் தொடர்பு கொள்வதால், இந்த மெர்ஸ் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் 2012 ஆம் ஆண்டில் இந்த தொற்று சவுதியில் ஏற்பட ஒட்டகங்கள் தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் தற்போது அபுதாபியில் பாதிக்கப்பட்டவர் ஒட்டகங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும், இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
மெர்ஸ் கோவிட் வைரஸ் அறிகுறிகள்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மெர்ஸ் கோவிட் வைரஸ் தொற்றும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பொதுவான மெர்ஸ் அறிகுறிகளையே கொண்டிருக்கும். மேலும் சுவாச நோய்த்தொற்றில் நிமோனியா ஒரு பொதுவானதாக இருந்தாலும், மெர்ஸ் நோயாளிகளிடையே இது காணப்படாது. மேலும் வயிற்றுப்போக்கு மற்றும் பிற இரைப்பை குடல் அறிகுறிகளையும் மெர்ஸ் நோயாளிகள் அனுபவிப்பார்கள்.
எந்த மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்?
மெர்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை மற்றும் சிறப்பு சிகிச்சை என்று எதுவும் இல்லை. இருப்பினும், பல்வேறு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருகின்றன. மருந்துகள் எதுவும் இல்லாததால், மெர்ஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையாக கவனிக்கப்பட்டு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications