Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
மறந்தும் இந்த பழங்களை சாப்பிட்டதும் தண்ணி குடிச்சுராதீங்க.. இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
கோடைக்காலத்தில் தண்ணீரை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் எப்போதுமே உணவுகளை உண்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறுவார். ஏனெனில் அப்படி தண்ணீர் குடிக்கும் போது, செரிமான அமிலத்தின் திறன் குறைந்து, உணவை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்பட்டு, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் பழங்களை உட்கொண்டதும் சிலர் தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் பழங்களை உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது.
பொதுவாக தண்ணீர் உள்ளுறுப்புக்களை நீரேற்றத்துடனும், உடல் வெப்பத்தை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் நீர் தான் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மறுபுறம், பழங்களை அதிகம் உட்கொள்வதன் மூலம், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் தடுக்கப்படும். இப்படிப்பட்ட பழங்களை உட்கொண்டதும் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற பழக்கம்.

ஏனெனில் பழங்களை உட்கொண்டதும் நீரை குடிக்கும் போது, அதன் விளைவாக உடலில் பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உண்மையில் சொல்லப்போனால் பழங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்துக்களை கொண்டவை என்பதால், அவற்றை உட்கொண்டதும் தாகம் எடுக்க வாய்ப்பே இல்லை. முக்கியமாக ஒருசில பழங்களை உட்கொண்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இப்போது அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, பலர் அந்த கொய்யாவை உப்பு மற்றும் மிளகாய் தூளை தொட்டு சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடும் போது, அது தாகத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் கொய்யாப்பழம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
வாழைப்பழம்
அடுத்தது, வாழைப்பழம். எப்போதும் வாழைப்பழத்தை உட்கொண்டதும் தண்ணீரைக் குடிக்கக்கூடாது. இல்லையென்றால், அது செரிமான பிரச்சனைகளை அதிகரித்து, மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாக்கும்.
பேரிக்காய்
பேரிக்காய் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழம். இந்த பேரிக்காயை உண்டதும் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்று நிபுணர்களே கூறுவதுண்டு. ஏனெனில் பேரிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, அது இருமல், சளியுடன், அஜீரண கோளாறையும் ஏற்படுத்தும்.
ஆப்பிள்
பெரும்பாலானோர் தினமும் சாப்பிடும் ஒரு பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை உண்டதும் தண்ணீரை ஒருபோதும் அருந்தக்கூடாது. இல்லாவிட்டால், அது வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மாதுளை
மாதுளையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த மாதுளையை உட்கொண்டதும் தண்ணீர் குடிக்கவே கூடாது. இல்லாவிட்டால், அது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, சளி, இருமல் மற்றும் குமட்டல் உணர்வை ஏற்படுத்தும்.
தர்பூசணி
கோடையில் கிடைக்கும் தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இந்த பழத் உட்கொண்டதும் தண்ணீரைக் குடித்தால், அது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
பப்பாளி
அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால், இது செரிமான மண்டலத்தை நன்கு செயல்பட உதவி புரியும். ஆனால் இந்த பப்பாளியை உண்டதும் நீரைக் குடித்தால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications