Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
அமெரிக்காவில் குழந்தைகளை குறி வைத்து பரவும் மர்மமான வைரஸ்.. இது எவ்வளவு ஆபத்தானது? அறிகுறிகள் என்ன?
Mysterious Respiratory Virus In the US: அமெரிக்காவில் சமீப காலமாக ஏராளமான வைரஸ்கள் மக்களிடையே பரவி வருகிறது. அதில் ஒன்று தான் என்டோவைரஸ் டி68 (EV-D68). இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல. இது ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது மீண்டும் தோன்றி குழந்தைகளை குறி வைத்து மோசமாக பாதித்து வருகிறது. அதுவும் இந்த வைரஸ் குழந்தைகளிடையே போலியோ போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் அளவில் கொடியது. மேலும் இது ஒரு சுவாச வைரஸ் என்பதால் சுவாச பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்.

போலியோ என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெரிதும்பாதிக்கும் ஒரு தொற்று வைரஸ் நோயாகும். இது பக்கவாதம் அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும். இந்த போலியோ வைரஸ் தொற்றிற்கு தடுப்பூசிகள் உள்ளன. இந்நிலையில் இந்த போலியோவைப் போன்றே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ், போலியோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக கூறப்படுகிறது. இந்த வைரஸானது அமெரிக்காவின் உள்ள கழிவு நீர் மாதிரிகளில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் அக்யூட் ஃப்ளாசிட் மைலிடிஸ் (AFM) குறித்த கவலை அதிகரித்துள்ளது.
என்டோவைரஸ் டி68 அறிகுறிகள்
இந்த வைரஸ் தொற்றினால் ஒருவருக்கு இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டைப் புண், உடல் வலி, மூக்கு ஒழுகல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இன்னும் கடுமையான சந்தர்ப்பங்களில் இது பக்கவாதம், முதுகுத் தண்டு சேதம் போன்றவற்றையும் உண்டாக்கலாம்.
அரிதான சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் அக்யூட் ஃப்ளாசிட் மைலிடிஸ் (AFM)க்கு வழிவகுக்கும். இந்த வைரஸால் ஆஸ்துமா அல்லது சுவாச நோய்களைக் கொண்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அக்யூட் ஃப்ளாசிட் மைலிடிஸ் என்றால் என்ன?
அக்யூட் ஃப்ளாசிட் மைலிடிஸ் (AFM) என்பது ஒரு அரிய மற்றும் தீவிரமான நோயாகும். இது நரம்பியல் அமைப்புக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதோடு, கை, கால், மூட்டுகளை பலவீனப்படுத்தி ஒருவரை அசைய அல்லது நகர முடியாமல் முடக்கச் செய்து, கண்களை நகர்த்துவது, பேசுவது அல்லது விழுங்குவதில் சிரமம் போன்ற அனிச்சை செயல்களைக் குறைக்கலாம்.
சிகிச்சைகள்
இந்த வைரஸிற்கு தற்போது எவ்வித சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை. இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க, அந்த வைரஸைப் பற்றி புரிந்து கொள்வதற்கும், அதன் தாக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இன்னும் சில காலம் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இந்த வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதோடு, சுவாசப் பிரச்சனைகளைக் கொண்ட குழந்தைகளை கூடுதல் கவனமாக பார்த்துக் கொள்வதோடு, நோய்வாய்ப்பட்ட மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications