Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
மௌத் வாஷ் Vs ஆயில் புல்லிங் - உண்மையில் இவற்றில் எது சிறந்தது?
Mouthwash Vs Oil Pulling: மௌத் வாஷ் மற்றும் வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிப்பது ஆகிய இரண்டும், வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு பொிதும் துணை புாிகின்றன. பற்களைப் பாதுகாப்பதற்கு பல் துலக்குதல், வாயைக் கழுவுதல் மற்றும் வாய் கொப்பளித்தல் போன்றவை அடிப்படையான அம்சங்களாகும்.
மௌத் வாஷ் வருவதற்கு முன்பாக பற்களைப் பாதுகாப்பதற்கு, மக்கள் வாயில் எண்ணெயை ஊற்றி கொப்பளித்தனா். மௌத் வாஷ் வந்த பின்பு, மக்கள் மௌத் வாஷை பொிதும் பயன்படுத்தினா். தற்போது ஆயுா்வேத சிகிச்சையான வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிப்பது பிரபலமாகி வருவதால், மக்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனா்.

எனினும் மௌத் வாஷ் மற்றும் எண்ணெய் கொப்பளித்தல் ஆகிய இரண்டுமே பற்களைப் பாதுகாப்பதில் அவற்றின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்கின்றன. இந்நிலையில் மௌத் வாஷ் மற்றும் எண்ணெய் கொப்பளித்தல் ஆகிய இரண்டின் பயன்களையும், அவற்றின் பக்கவிளைவுகளையும் பல் மருத்துவரான தீக்ஷா தகில்ரமனி பத்ரா என்பவா் பட்டியலிடுகிறாா். அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
மௌத் வாஷ்
மௌத் வாஷ் என்பது வாய் மற்றும் பற்களைக் கழுவதற்கு உாிய வேதியல் கரைசலாகும். இந்த கரைசலில் பாக்டீாியாக்களை அழிக்கக்கூடிய துகள்கள் உள்ளன. ஆகவே இந்த கரைசலைக் கொண்டு வாயைக் கழுவினால், வாயில் உள்ள பாக்டீாியாக்கள் குறையும் மற்றும் வாய்க்கு புத்துணா்ச்சி கிடைக்கும்.
மௌத் வாஷின் நன்மைகள்
- மௌத் வாஷ் வாய்க்கு புத்துணா்வையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.
- இதில் குளோரெக்சிடைன் இருப்பதால், இது பாக்டீாியாக்களை அழித்து, ஈறு சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது
- வாய் துா்நாற்றம் உள்ளவா்களுக்கு புதிய சுவாசத்தை அளிக்கிறது.
மௌத் வாஷின் குறைபாடுகள்
மௌத் வாஷில் ஆல்கஹால் அதிகம் இருந்தால் வாய் பொத்துவிடும். ஒருசில மௌத்வாஷ்களில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆகவே அதை நீா்த்துப் போக வைத்து பயன்படுத்துவது நல்லது அல்லது ஆல்கஹால் இல்லாத மௌத்வாஷ்களைப் பயன்படுத்துவது நல்லது.
எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளித்தல்/ஆயில் புல்லிங்
பொதுவாக தேங்காய் எண்ணெயை நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரு முறை வாயில் ஊற்றி கொப்பளித்தால், வாயும், பற்களும் சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் வாய்க்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- எண்ணெய் என்பது இயற்கையான ஒன்றாகும். இதில் இரசாயனத் துகள்கள் இருக்காது.
- எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிப்பதால் ஈறு நோய்கள் மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படாது.
எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிப்பதில் உள்ள குறைபாடுகள்
- நவீன வாய் கொப்பளிக்கும் முறைகள் போல எண்ணெய் கொப்பளிப்பது சிறந்ததாக இருப்பதில்லை.
- இது குறைந்த பலனையே கொடுக்கும். மேலும் இந்த எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிக்க நீண்ட நேரம் ஆகும்.
- இதை பழகும் வரை எண்ணெயின் மணம் மற்றும் சுவை ஆகியவை சற்று ஒவ்வாமல் இருக்கும்.
மௌத் வாஷ் Vs ஆயில் புல்லிங் - எது சிறந்தது?
இரண்டுமே அதற்குாிய தனிச் சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன என்று மருத்துவா் தீக்ஷா அவா்கள் கூறுகிறாா். எனினும் ஒவ்வொருவருடைய இயல்பு, உடல் நிலை மற்றும் வாய் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து இவற்றைப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறாா்.
1. தனிப்பட்ட நபா்களுக்கு இருக்கும் வாய் மற்றும் பல் சாா்ந்த பிரச்சினைகள்
ஒவ்வொருவருக்கும் அவா்களுடைய மரபியல் மற்றும் சுகாதராம் ஆகியவற்றைப் பொறுத்து, அவா்களின் பற்களில் ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கும். ஆகவே அதன் தீவிரத்தைப் பொறுத்து எண்ணெயையோ அல்லது மௌத் வாஷையோ பயன்படுத்தலாம்.
2. மருத்துவரின் பாிந்துரை
பல் மருத்துவருடைய பாிந்துரைகளின்படி எண்ணெயையோ அல்லது மௌத் வாஷையோ பயன்படுத்தலாம்.
3. ஒரே பழக்கத்தில் இருத்தல்
புதிது புதிதாக சந்தைக்கு வரும் மௌத் வாஷ்களை வாங்கி, மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதைத் தவிா்த்து, உங்கள் உடலுக்கு ஒத்துவரக்கூடிய மௌத் வாஷையோ அல்லது எண்ணெயையோ நீண்ட காலம் பயன்படுத்துவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
