Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மழைக்காலத்தில் இந்த 7 காய்கறிகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...!
காய்கறிகள் எப்போதுமே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஆனால் காய்கறிகள் அனைத்து பருவக்காலங்களிலுமே பாதுகாப்பானவையா என்றால் நிச்சயம் அது கேள்விக்குறிதான். மழைக்காலத்தில், அதிகரித்த ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குதல் சில காய்கறிகளை பூஞ்சை வளர்ச்சி, பாக்டீரியா மாசுபாடு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது.
மழைக்காலம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் இலவச இணைப்பாக அது பல ஆரோக்கிய பிரச்சினைகளையும் சேர்த்து வழங்குகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே இந்த காலகட்டத்தில் உணவுமுறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய அல்லது கவனமாக சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

இலை கீரைகள்
பொதுவாக பச்சை இலை காய்கறிகள் ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன, ஆனால் மழைக்காலத்தில் அவற்றை முற்றிலும் பாதுகாப்பானவை என்று கூற முடியாது. ஏனெனில் அவை தரைக்கு அருகில் வளர்ந்து தண்ணீரை எளிதில் தக்கவைத்து, பாக்டீரியா மற்றும் புழுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகின்றன. இதனால் வயிற்று தொற்று, ஃபுட் பாய்சன், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பிரச்சினைகளைத் தவிர்க்க ப்ரெஷான இலைகளை பயன்படுத்த வேண்டும் அல்லது பொடி வடிவில் பயன்படுத்தலாம்.
காலிஃபிளவர்
காலிஃபிளவர் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த சுவையான காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் மழைக்காலங்களில் அவை பூச்சிகள் மற்றும் புழுக்கள் எளிதில் வளர வழிவகுக்கிறது. அவற்றை கழுவுவது மட்டுமே எப்போதும் அவற்றை முழுமையாக அகற்றாது. இதனால் வயிற்று தொற்று மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
முட்டைக்கோஸ்
பெரும்பாலான வீடுகளில் சாம்பாருக்கு முதல் சைடிஷாக இருப்பது முட்டைக்கோஸ் பொரியல்தான். ஆனால் மழைக்காலத்தில் அதை அடிக்கடி சமைக்கக்கூடாது. ஏனெனில் அதிக ஈரப்பதம் கொண்ட காய்கறியாக இருப்பதால் மழைக்காலங்களில் இது பாக்டீரியாக்களின் மையமாக அமைகிறது. இதனால் ஃபுட் பாய்சன், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிறு போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இவற்றை சமைக்கும் போது நன்றாக வேக வேண்டும் மற்றும் பச்சையாக வேக எதிலும் சேர்க்கக் கூடாது.
காளான்கள்
காளான்கள் பொதுவாகவே அதிக ஈரப்பதம் கொண்ட உணவாகும், அதிக உறிஞ்சும் தன்மை கொண்ட இவை, ஈரப்பதத்தை எளிதில் சேகரிக்கக் கூடியவை, விரைவாக கெட்டுவிடக் கூடியவை. மேலும், ஈரப்பதமான சூழ்நிலைகளில் பூஞ்சை தொற்றுகள் பொதுவானவை. இதனால் ஃபுட் பாய்சன், அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பிரச்சினைகளைத் தவிர்க்க அவற்றை வாங்கிய உடனேயே சமைக்க வேண்டும்.
கத்திரிக்காய்
கத்திரிக்காய் அனைவருக்கும் பிடித்த காய்கறியாக இருந்தாலும் மழைக்காலத்தில் அதிக பூச்சிகளை ஈர்க்கும் தன்மை கொண்டது மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது. இதனால் அவை வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
தக்காளி
மழைக்காலத்தில் பச்சையான அல்லது சரியாக பழுக்காத தக்காளியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மழைக்காலத்தில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக எளிதில் அழுகும் மற்றும் பூஞ்சையை ஈர்க்கும். இதனால் குடல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பிரச்சினைகளைத் தவிர்க்க முழுமையாக பழுத்த, உறுதியான தக்காளியை மட்டுமே சமைக்க வேண்டும்.
முளைவிட்ட பயிர்கள்
இது காய்கறிகளில் சேராது, இருப்பினும் பலர் சாலட்களில் இதைப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். மழைக்காலத்தில், முளைப்பது பாக்டீரியா வளர்ச்சி காரணமாக ஆபத்தானது. இதனால் வயிறு தொற்று ஏற்படலாம். இவற்றை சாப்பிடுவதற்கு முன் நீராவியில் ஓரளவு வேகவைப்பது நல்லது.
மழைக்காலத்தில் காய்கறிகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?
- காய்கறிகளை சமைப்பதற்கு முன் எப்போதும் வெதுவெதுப்பான நீர் மற்றும் வினிகர் கரைசலில் கழுவவும்.
- பச்சையாக சாப்பிடுவதை விட வேகவைத்தல் அல்லது கொதிக்க வைப்பது நல்லது.
- காய்கறிகளை ப்ரெஷாக வாங்கி 24 மணி நேரத்திற்குள் உட்கொள்வது நல்லது.
- காற்றோட்டமான இடத்தில் காய்கறிகளை சேமிப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












