Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Fenugreek Water Benefits In Tamil: அதிகரித்து வரும் ஆரோக்கிய பிரச்சனைகளால், தற்போது மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்துள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு பழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதில் காலையில் உடற்பயிற்சி செய்வது, ஒருசில ஆரோக்கிய பானங்களை குடிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அதுவும் சமையலில் அதிகம் பயன்படுத்தும் மற்றும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நிறைய பேர் குடிப்பார்கள். ஆயுர்வேதத்திலும் இந்த நீர் பல பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

சரி, இந்த வெந்தய நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து தெரிந்து, நீங்களும் இனி காலையில் வெந்தய நீரை குடித்து நன்மை பெறுங்கள்.
1. ஹார்மோன் சமநிலையில் இருக்கும்
தற்போது பல பிரச்சனைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக உடலில் ஹார்மோன் சமநிலையில் இல்லாவிட்டால், அது உடல் சோர்வு, தூக்க பிரச்சனைகள், மனநிலை மாற்றங்கள், உடல் எடையில் மாற்றங்கள், மந்தமான மனநிலை போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் வெந்தய நீரை காலையில் குடிப்பதன் மூலம், உடலில் ஹார்மோன்கள் சமநிலைப்படுத்தப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
2. இதய ஆரோக்கியம் மேம்படும்
வெந்தய விதைகளில் டையோஸ்ஜெனின் எனப்படும் செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளது. இது உடலானது கொழுப்புக்களை எவ்வாறு செயலாக்குகிறது என்பதை சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. வெந்தய விதைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கின்றன. அதோடு நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைத்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கின்றன. எனவே இதய பிரச்சனைகள் வரக்கூடாதெனில், வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
3. செரிமானம் மேம்படும்
தற்போது நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான தூக்க முறைகளால் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. மேலும் இந்த செரிமான பிரச்சனைகளால் ஏராளமானோர் அவதிப்பட்டும் வருகின்றனர். ஆனால் வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
4. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
சர்க்கரை நோயாளிகள் அவசியம் குடிக்க வேண்டிய ஒரு பானம் என்றால், அது இந்த வெந்தயம் ஊற வைத்த நீர் தான். இப்படி வெந்தய நீரைக் குடிப்பது, நீரிழிவு நோய்க்கு முந்தைய அல்லது வகை 2 அல்லது வகை 1 நீரிழிவு உள்ளவர்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
5. எடை இழப்பு
உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வெந்தய நீர் மிகச்சிறந்த பானம். ஏனெனில் ஊறவைத்த வெந்தய விதைகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அவை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து பசியைக் குறைக்கும். மேலும் ஊறவைத்த வெந்தய விதைகளின் நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அதோடு வெந்தய விதைகள் பசியை அடக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த நீரைக் குடிப்பதால் நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications